Asianet News TamilAsianet News Tamil

அதிதீவிரமாக மாறும் கஜா புயல்... வானிலை மையம் எச்சரிக்கை

வங்கக்கடலில் கஜா புயல் உருவாகியுள்ளது. 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும் இந்த புயல் கடலூர் - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என் தெரிவிக்கப்பட்டது.

Gaja Cyclone...heavy rain in tamilnadu
Author
Chennai, First Published Nov 13, 2018, 12:36 PM IST

வங்கக்கடலில் கஜா புயல் உருவாகியுள்ளது. 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும் இந்த புயல் கடலூர் - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என் தெரிவிக்கப்பட்டது.  பின்னர் கடலூருக்கும் - பாம்பனுக்கும் இடையில் கரையை கடக்கும் என்று கூறப்பட்டது.Gaja Cyclone...heavy rain in tamilnadu

இந்நிலையில் இன்று காலை இந்திய வானிலை மையம், ‘‘கஜா புயல் 5 கிலோ மீட்டர் என குறைந்த வேகத்தில் நகர்கிறது. சென்னையில் இருந்து கிழக்கே 750 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகையில் இருந்து வடகிழக்கே 840 கிலோ மீட்டர் தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. 

மேற்கு - தென்மேற்கு நோக்கி நகரும் கஜா, 15ம் தேதி (நாளை மறுநாள்) அதிதீவிர புயலாக வலுப்பெற்று பாம்பன் - கடலூர் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளது’’ என தெரிவித்துள்ளது. Gaja Cyclone...heavy rain in tamilnadu

சூறைக்காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு இருக்கும் என தெரிவித்தாலும், கடந்த 2016 வர்தா புயலில் ஏற்பட்ட சேதம் போல், நடக்குமோ என மக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த 2015ம் ஆண்டு பெய்த கன மழையால், கடலூர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், தற்போது ஏற்பட்டுள்ள கஜா புயலை கருத்தில் கொண்டு, மீட்பு பணியில் ஈடுபட அதிகாரிகள் முனைப்பு காட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios