Asianet News TamilAsianet News Tamil

18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் - விதிக்கப்பட்ட தடை நீங்கியது

18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இடைக்கால தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன் உத்தரவிட்டுள்ளார். 

For the 18 seats the by-election was canceled
Author
Chennai, First Published Oct 25, 2018, 11:09 AM IST

18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இடைக்கால தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன் உத்தரவிட்டுள்ளார். 

For the 18 seats the by-election was canceled

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, 2017 செப்டம்பரில், கட்சி தாவல் சட்டத்தின்கீழ், 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் உத்தரவிட்டார். 

For the 18 seats the by-election was canceled
தகுதி நீக்கத்தை எதிர்த்து, 18 பேரும், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் வழக்கில் சபாநாயகர் உத்தரவு செல்லும் என தலைமை நீதிபதியும், செல்லாது என நீதிபதி சுந்தரும் தங்களின் தீர்ப்பில் கூறி இருந்தனர். நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். இதையடுத்து, மூன்றாவதாக நீதிபதி விசாரித்து தீர்ப்பு வழங்கலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி மூன்றாவது நீதிபதி சத்யநாராயணன் 12 நாட்களாக வழக்கை விசாரித்து இன்று தீர்ப்பு வழங்கினார்.

For the 18 seats the by-election was canceled

நீதிபதி தீர்ப்பில், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும். தகுதி நீக்கம் சட்ட விரோதம் இல்லை. சபாநாயகர் முடிவில் தவறு இல்லை என்று நீதிபதி தீர்ப்பு கூறியுள்ளார்.

For the 18 seats the by-election was canceled

இந்த நிலையில், தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் 3-வது நீதிபதி சத்தியநாராயணா தீர்ப்பு வழங்கினார். அதேபோல் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வாக்கெடுப்பை நடத்தக்கூடாது என்ற தடையையும் உயர்நீதிமன்றம் நீக்கியது.

Follow Us:
Download App:
  • android
  • ios