Asianet News TamilAsianet News Tamil

3 மாத சிறை தண்டனை தேவையற்றது - காவல்துறைக்கு நீதிபதி அறிவுரை...!

Chief Justice of India Indira Banerjee said If you forget to bring the original drivers license you do not need a 3-month jail term and its fine for those who do not have the original drivers license.
Chief Justice of India Indira Banerjee said If you forget to bring the original drivers license you do not need a 3-month jail term and its fine for those who do not have the original drivers license.
Author
First Published Sep 22, 2017, 5:27 PM IST


அசல் ஓட்டுநர் உரிமம் கொண்டுவர மறந்தால் 3 மாத சிறைத்தண்டனை தேவையற்றது எனவும், மறந்து அசல் ஓட்டுநர் உரிமம் கொண்டு வராதவர்களுக்கு அபராதம் போதும் எனவும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். 

செப்டம்பர் 1ம் தேதி முதல் வாகன ஓட்டுநர்கள் அனைவரும் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் எனவும், அசல் ஓட்டுநர் உரிமம் இல்லையென்றால் 3 மாதம் சிறை தண்டனை அல்லது ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை அறிவிப்பு வெளியிட்டது. 

மேலும், சீருடை அணிந்த எந்த காவல் துறை அதிகாரியும் வாகன ஓட்டுநர்களின் அசல் உரிமத்தை கேட்கும்போது காண்பிக்க வேண்டும் எனவும் காவல் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதனிடையே நடிகர் ஜெய் லைசன்ஸ் இல்லாமல் குடிபோதையில் கார் ஓட்டி விபத்திற்குள்ளாக்கியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

இந்நிலையில், அசல் ஓட்டுநர் உரிமம் கொண்டுவர மறந்தால் 3 மாத சிறைத்தண்டனை தேவையற்றது எனவும், மறந்து அசல் ஓட்டுநர் உரிமம் கொண்டு வராதவர்களுக்கு அபராதம் போதும் எனவும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். 

மேலும், அசல் ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்களுக்கும் மறந்து எடுக்காமல் வந்தவர்களுக்கும் வித்தியாசம் உள்ளது எனவும் குறிப்பிட்டார்.  

Follow Us:
Download App:
  • android
  • ios