Asianet News TamilAsianet News Tamil

கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்... உஷார்... உடனே வாங்கி வெச்சிக்குங்க...

நிலத்தடி நீரை எடுக்க விதிக்கப்பட்ட அரசின் நிபந்தனைகளை எதிர்த்து கேன் குடிநீர் உற்பத்தியை நிறுத்த உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதனால் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Can drinking water production Stop
Author
Chennai, First Published Oct 16, 2018, 6:05 PM IST

நிலத்தடி நீரை எடுக்க விதிக்கப்பட்ட அரசின் நிபந்தனைகளை எதிர்த்து கேன் குடிநீர் உற்பத்தியை நிறுத்த உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதனால் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. Can drinking water production Stop

 நிலத்தடி நீரை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனைகள் விதித்துள்ளன.  நிலத்தடிநீரை எடுக்க உயர்நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை கண்டித்து தனியார் லாரி உரிமையாளர்கள் திங்கட்கிழமை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Can drinking water production Stop

நிலத்தடி நீரை கனிம வளப்பிரிவில் சேர்த்துள்ளதால், நிலத்தடி நீரைப் பெறுவதில் தண்ணீர் லாரிகளுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், குடிநீர் கேன் உற்பத்தியாள்ர சங்கத்தை சேர்ந்தவர்கள் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், குடிதண்ணீருக்காக இந்த கிரவுண்ட் வாட்டருக்கு, நிபந்தனையை தளத்திர் குடிநீர் எடுப்பதற்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும். சிறு - குறு தொழில் செய்யும் பலரதப்பட்ட மக்களின் வாழ்வாதாரமும் இதில் அடங்கியிருப்பதால், குடிநீருக்காக நிலத்தடி நீர் எடுக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.Can drinking water production Stop

தண்ணீர் லாரி வேலை நிறுத்தத்தால், தமிழகம் முழுவதும் குடிநீர் பாதிப்பு ஏற்பட்டாலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கும் சூழல் ஏற்பட வாய்ப்புண்டு. தண்ணீர் லாரி வேலை நிறுத்தத்தால், ஓட்டல்களில் குடிநீர் தட்டுப்பாட ஏற்பட வாய்ப்புள்ளது இதனால், ஓட்டல்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீரை எடுக்க விதிக்கப்பட்ட நிபந்தனைகளை அரசு தளர்த்த வேண்டும். குடிநீர் கேன் உரிமையாளர்களுக்கு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு கடைசில மனுஷனை கடிச்ச கதையா! குடி தண்ணீருக்கே மக்கள் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios