Asianet News TamilAsianet News Tamil

அரசு விடுமுறை தினத்தன்று தொழிலாளர்களை வேலை செய்யவைத்த 40 நிறுவனங்கள் மீது அதிரடி நடவடிக்கை…

Action on 40 companies that employed workers on state holidays
Action on 40 companies that employed workers on state holidays
Author
First Published Oct 7, 2017, 9:18 AM IST


கரூர்

அரசு விடுமுறையான காந்திஜெயந்தி அன்று கரூரில் தொழிலாளர்களை வேலை செய்யவைத்த 40 நிறுவனங்கள்மீது தொழிலாளர் நலத்துறையினர் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கரூர் தொழிலாளர் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார்:

அதில், “கரூர் தொழிலாளர் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் பெரியசாமி, குமரக்கண்ணன், ஜோதிமாணிக்கம் ஆகியோர் காந்திஜெயந்தி அன்று மாவட்டத்தில் தொழில்நிறுவனங்களில் கூட்டாய்வு நடத்தினர்.

அப்போது அரசு விடுமுறை தினத்தில் தொழிலாளர்களை வேலை செய்ய அனுமதிக்க கோரும் படிவத்தை ஆய்வாளருக்கு அனுப்பாமல் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திய  நிறுவனங்களுக்கு மோட்டார் போக்குவரத்துத் தொழிலாளர் சட்டப்படி 10 நிறுவனங்களை ஆய்வு செய்ததில் மூன்று முரண்பாடுகள் கண்டறியப்பட்டது.

இதுபோல 31 கடைகளை ஆய்வு செய்ததில் 16 முரண்பாடுகளும், 31 உணவகங்களில் ஆய்வு நடத்தியதில் 21 முரண்பாடுகளும் கண்டறியப்பட்டு அந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios