Asianet News TamilAsianet News Tamil

குழந்தை சுர்ஜித்திற்காக பிராத்தனைகள் தீவிரம்..! தமிழகமெங்கும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை..!

தோப்புத்துறை பெரிய பள்ளிவாசலில் குழந்தை சுர்ஜித் மீண்டு வர சிறப்பு பிரார்த்தனை நடைப்பெற்றது.

muslims made prayer for surjith
Author
Tamil Nadu, First Published Oct 27, 2019, 7:31 PM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இருக்கும் நடுக்காட்டுபட்டியில் பிரிட்டோ என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் ஆழ்துளை கிணறு இருக்கிறது. இந்த கிணற்றில் நேற்றுமுன்தினம் அவரது 2 வயது குழந்தை சுர்ஜித் தவறி விழுந்தான். 48 மணி நேரத்திற்கு மேலாக ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தையை மீட்கும் போராட்டம் தொய்வின்றி நடந்து வருகின்றன.

muslims made prayer for surjith

குழந்தை நலமுடன் மீண்டும் தாயிடம் திரும்ப வேண்டும் என்பதற்காக நாடுமுழுவதும் இருக்கும் பல கோவில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்கள், முதியோர் இல்லங்கள் போன்றவைகளில் பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன. தோப்புத்துறை பெரிய பள்ளிவாசலிலும் குழந்தை சுர்ஜித் மீண்டு வர சிறப்பு பிரார்த்தனை நடைப்பெற்றது.
இமாம் முனீர் அவர்கள் பிரார்த்தனை செய்த இந்த நிகழ்வில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, ஜமாத் தலைவர் AR.ஷேக் அப்துல்லா, முன்னாள் ஜமாத் தலைவர் K .M K. I. .நவாஸ்தீன், ஜமாத் செயலர் அபுபக்கர் சித்தீக் மற்றும் ஜமாத்தினர்கள், மாணவர்கள், இளைஞர்கள்  பங்கேற்றனர்.

muslims made prayer for surjith

இந்நிகழ்வில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய, மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் , மீட்பு பணியில் ஈடுபடும் அமைச்சர்கள்,,அதிகாரிகள், வீரர்கள் பாராட்டுக்குரியவர்கள்  என்றவர், அக்குழந்தை மீண்டு வர வேண்டும் என நாடே காத்திருப்பதாக கூறினார். மேலும், இனி வரும் காலத்தில் இது போன்ற பேரிடர்களில் சீனாவின் தொழில் நுட்பத்தை பயன்படுத்த முனைப்பு காட்ட வேண்டும் என்றார். இந்நிகழ்வை முஸ்லிம் மாணவர் முன்னணி (MSF) ஏற்பாடு செய்திருந்தது.

muslims made prayer for surjith

இதே போன்று நாகூர் தர்ஹா மற்றும் முத்துப்பேட்டை தர்ஹாவிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைப்பெற்றதோடு, பரவலாக தமிழக மெங்கும் பள்ளிவாசல்களில் குழந்தை சுர்ஜித்துக்காக பிரார்த்தனைகள் நடைப்பெற்று வருகிறது. புனித மெக்கா, மதீனா விலும் தமிழக யாத்ரீகர்கள் பிரார்த்தனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios