Asianet News TamilAsianet News Tamil

தேனி திமுகவின் தோனி ஆகிறார் தங்கம் - கலக்கத்தில் கம்பம் ராமகிருஷ்ணன் ??

தேனி மாவட்ட திமுக பொறுப்பாளராக விரைவில் தங்க தமிழ்ச் செல்வன் அறிவிக்கப்பட இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .

thanga tamil selvam to become district sectretary of theni dmk
Author
Tamil Nadu, First Published Aug 13, 2019, 4:15 PM IST

கடந்த பாராளுமன்ற தேர்தலில் தேனி மக்களவை தொகுதியில் தினகரனின் அமமமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட்டவர் தங்க தமிழ்ச் செல்வன் . பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இவர் மோசமான தோல்வியை தழுவினார் . இதனாலும் தினகரனுடன் ஏற்பட்ட கருத்து மோதல்களாலும் அக்கட்சியில் இருந்து விலகி ஸ்டாலின் முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் வைத்து தன்னை திமுகவில் இணைத்து கொண்டார் . கட்சியில் இணைத்த கையோடு ஸ்டாலினை தேனிக்கு அழைத்து வந்து பிரம்மாண்ட கூட்டம் நடத்தினார்.

thanga tamil selvam to become district sectretary of theni dmk

இந்த நிலையில் தான் தற்போது தேனி மாவட்ட பொறுப்பாளராக இருக்கும் கம்பம் ராமகிருஷ்ணனுக்கு கலக்கம் ஏற்பட்டுள்ளது . சமீபத்தில் தங்க தமிழ்ச் செல்வன் தேனி மாவட்ட நிர்வாகிகளை அவர்களின் இருப்பிடம் தேடி நேரில் சந்திக்க வருவதாக தகவல் அனுப்பினாராம் . இதனால் அதிர்ச்சி அடைந்த கம்பம் ராமகிருஷ்ணன் மாவட்ட நிர்வாகிகள் அனைவரையும் தன் இல்லத்திற்கு வரச்சொல்லி , அங்கு வைத்து எது வேண்டுமானாலும் பேசிக்கொள்ளுங்கள் என்று தங்கத்திற்கு தகவல் அனுப்பி உள்ளார் . இதற்கு உடன்படாத தங்கம் அமைதியாக இருந்து விட்டாராம் .thanga tamil selvam to become district sectretary of theni dmk

கம்பம் ராமகிருஷ்ணன் , தேனி மாவட்ட நிர்வாகிகள் அனைவரையும் அழைத்து கொண்டு அறிவாலயத்திற்கு விசிட் அடித்துள்ளார் . அவர்களை பார்த்த ஸ்டாலின் "நீங்க என்ன காரணத்திற்கு வந்துருக்கீங்கனு தெரியும் . எல்லாத்தையும் நா பாத்துக்கிறேன் . விரைவில் அறிவிப்பு வரும்.. போங்க " என்று சொல்லி அனுப்பி உள்ளார் . அதாவது தேனி மாவட்ட பொறுப்பாளராக விரைவில் தங்க தமிழ்ச் செல்வன் அறிவிக்கப்படவுள்ளார் என்பதை தான் ஸ்டாலின் அப்படி  கூறியதாக திமுக உடன்பிறப்புகள் பேசிக்கொள்கின்றனர் . இதனால் தனது பதவிக்கு ஆப்பு வந்து விடும் என்ற பயத்தில் உள்ளாராம் கம்பம் ராமகிருஷ்ணன் .thanga tamil selvam to become district sectretary of theni dmk

ஏற்கனவே தினகரனிடம் இருந்து வந்த செந்தில் பாலாஜிக்கு மாவட்ட பொறுப்பு , தேர்தலில் சீட் என நன்றாக கவனித்த ஸ்டாலின் ,தன்னையும் கவனிப்பார் என்று தங்கம் உற்சாகமாக உள்ளதாக தேனி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .

Follow Us:
Download App:
  • android
  • ios