Asianet News TamilAsianet News Tamil

தமிழக அரசு பள்ளி மாணவிக்கு வந்த ஐ.நா அழைப்பு..! வாழ்த்துக்கள் குவிகிறது..!

தமிழகத்தில் அரசு பள்ளியில் படித்த மாணவி ஒருவருக்கு ஐநா மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் உரை நிகழ்த்த அழைப்பு வந்திருப்பதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

madurai girl who studied in government school was invited to deliver speech in UNO
Author
Ilamanur, First Published Sep 28, 2019, 4:43 PM IST

மதுரை மாவட்டம் இளமனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரேமலதா. இவர் அந்த ஊரில் இருக்கும் ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்திருக்கிறார். பள்ளியில் எட்டாம் வைப்பு படிக்கும் போது இவர் மனித உரிமை கல்வியைப் பயின்றுள்ளார். தற்போது கல்லூரியில் பயின்று வரும் நிலையில் மாணவி பிரேமலதாவிற்கு ஐநா மனித உரிமை ஆணையம் சார்பாக உரை நிகழ்த்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

madurai girl who studied in government school was invited to deliver speech in UNO

அக்டோபர் 1 மற்றும் 2ம் தேதிகளில் ஜெனிவாவில் நடைபெற இருக்கும் ஐநா மனித உரிமை ஆணையத்தின் பொதுக்கூட்டத்தில் பிரேமலதா கலந்துகொள்ள அழைப்பு வந்திருக்கிறது. அந்த கூட்டத்தில் 'மனித உரிமை கல்வி மூலம் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு' என்கிற தலைப்பில் மாணவி பிரேமலதா உரையாற்ற இருக்கிறார். 

madurai girl who studied in government school was invited to deliver speech in UNO

அரசுப்பள்ளியில் படித்து தேர்ச்சி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த மாணவி பிரேமலதாவுக்கு ஐநா மனித உரிமைகள் ஆணையம் உரையாற்ற அழைப்பு விடுத்திருப்பதை  தொடர்ந்து பல்வேறு தரப்பில் இருந்தும் மாணவிக்கு வாழ்த்துக்கள் குவித்து வருகிறது. இதனால் மாணவி பிரேமலதா உற்சாகம் அடைந்து உள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios