Asianet News TamilAsianet News Tamil

குழந்தை மீட்பில் ஏற்பட்ட திடீர் திருப்பம்...!! இன்னும் கொஞ்சம் சரிந்தாலும்...?? இறைவா அந்த குழந்தையை காப்பாற்று என கதறும் மக்கள்..!!

இந்நிலையில் சுமார் 70 அடி ஆழத்தில் இருந்த குழந்தை 80 அடி ஆழத்திற்கு சரிந்துள்ள நிலையில், ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் ஊற்று இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இன்னும் கொஞ்சம் சரிந்தாலும் அதில் குழந்தை மூழ்கிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. குழந்தை பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்று  மக்கள் ஆங்காக்கே பிரார்த்தித்து வருகின்றனர். இந்த ஆழ்துளை கிணற்றின் மொத்த ஆழம் 600 அடி என்பதால் மிகுந்த கவனத்துடன் குழந்தையை மீட்கும் பணி நடந்து வருகிறது.
 

very shocking for child  rescue operation - bore well total deep 600 feet
Author
Chennai, First Published Oct 26, 2019, 4:37 PM IST

குழந்தை 70 அடி ஆழத்திலிருந்து 80 அடி ஆழத்திற்கு சரிந்துவிட்டதால் மீட்பதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. அத்துடன் அங்கு விட்டுவிட்டு மழை பெய்துவருவதால்  ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் ஊற்று இருக்கலாம் என்றும் அதில் குழந்தை மூழ்கி விடக்கூடாது என்ற அச்சமும் தற்போது எழுந்துள்ளது. இதற்கிடையில் வேகவேகமாக குழந்தையை மீட்க மீட்புபடையினர் போராடி வருகின்றனர்.

very shocking for child  rescue operation - bore well total deep 600 feet

ஆழ்துளை கிணற்றில் சுமார் 70 அடி ஆழத்தில் சிக்கியுள்ள சிறுவன் சுஜித்தை மீட்க  தீயணைப்பு படையினருடன்  தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் சுமார் 53 பேர் தொடர்ந்து போராடிவருகின்றனர். இந்த நிலையில்  அவர்கள் கொண்டு வந்துள்ள அதிநவீன கேமிராக்கள் மற்றும்  கிளிப் போன்ற கருவியைக் கொண்டு சிறுவனை மீட்க முயற்சித்து வருகின்றனர். அத்துடன் சிறுவனைப் பற்றி யாரும் கவலைப்படத் தேவையில்லை  இன்னும் அரை மணிநேரத்தில் உயிருடன் மீட்டு விடுவோம் என்று அவர்கள் கூறிவருவது சற்று நம்பிக்கையை ஏற்படுத்திவந்தாலும், அந்தப் பகுதியில் மழைபெய்துவருவது மீட்புப் படைக்கும்  அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

very shocking for child  rescue operation - bore well total deep 600 feet

மழை அதிகமாகி நீர் குழிக்குள் சென்றுவிடாதவாறு முன்னெச்சரிக்கை நடவடக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் சுமார் 70 அடி ஆழத்தில் இருந்த குழந்தை 80 அடி ஆழத்திற்கு சரிந்துள்ள நிலையில், ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் ஊற்று இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இன்னும் கொஞ்சம் சரிந்தாலும் அதில் குழந்தை மூழ்கிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. குழந்தை பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்று  மக்கள் ஆங்காக்கே பிரார்த்தித்து வருகின்றனர். இந்த ஆழ்துளை கிணற்றின் மொத்த ஆழம் 600 அடி என்பதால் மிகுந்த கவனத்துடன் குழந்தையை மீட்கும் பணி நடந்து வருகிறது. 

very shocking for child  rescue operation - bore well total deep 600 feet

மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் வீட்டின் அருகே உள்ள நிலத்தில் 4 ஆண்டுகளுக்கு முன் தோண்டப்பட்டு, மூடப்படாமல் இருந்த ஆழ்துளைக்குள் 2 வயது சிறுவன் சுஜீத் வில்சன் விழுந்தான்.  நேற்று (அக்.,25) மாலை 5.40 மணியளவில் ஆழ்துளைக்குள் விழுந்த குழந்தையை கேமிரா, மைக், ஆக்சிஜன் உள்ளிட்ட கருவிகளுடன் மீட்கும் பணி நடந்து வருகிறது.  அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, திருச்சி கலெக்டர் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் இருந்து, அடுத்த என்ன செய்யலாம் என்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர். தற்போது சென்னையில் இருந்து பேரிடர் மீட்புக் குழுவும் நடுகாட்டுபட்டிக்கு வந்து சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்ததால், கடைசி முயற்சியாக நவீன கருவிகளை கொண்டு மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios