Asianet News TamilAsianet News Tamil

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள்... கடைசி இடத்தில் கிருஷ்ணகிரி..!

தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெற்ற 12-ம் வகுப்பு பொதுத்தேர்விற்கான முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 91.3 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

plus two results announced... District wise
Author
Tamil Nadu, First Published Apr 19, 2019, 10:25 AM IST

தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெற்ற 12-ம் வகுப்பு பொதுத்தேர்விற்கான முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 91.3 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். எப்போதும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் போதும் முதல் இடத்தை பிடிக்கும் நாமக்கல் மாவட்டம் தற்போது 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதிக அளவில் தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடத்திலும், ஈரோடு 2-வது இடத்திலும், பெரம்பலூர் 3-வது இடத்திலும் உள்ளன.

மாவட்ட வாரியாக தேர்ச்சி விபரம் :

* திருப்பூர் :  95.37 சதவீதம்
* ஈரோடு :   95.23 சதவீதம்
* பெரம்பலூர்: 95.15 சதவீதம்
* கோவை :   95.1 சதவீதம்
* நாமக்கல்:   94.97 சதவீதம்
* கன்னியாகுமாரி: 94.81 சதவீதம் 
* விருதுநகர்: 94.44 சதவீதம்
* நெல்லை: 94.41 சதவீதம்
* தூத்துக்குடி: 94.23 சதவீதம்
* கரூர்: 94.07 சதவீதம்
* சிவகங்கை: 93.81 சதவீதம்
* மதுரை: 93.64 சதவீதம்
* திருச்சி: 93.56 சதவீதம்
* சென்னை: 92.96 சதவீதம்
* தேனி:92.54 சதவீதம்
* ராமநாதபுரம்: 92.30 சதவீதம்
* தஞ்சாவூர்: 91.05 சதவீதம்
* ஊட்டி: 90.87 சதவீதம்
* திண்டுக்கல்: 90.79 சதவீதம்
* சேலம்: 90.64 சதவீதம்
* புதுக்கோட்டை: 90.01 சதவீதம்
* காஞ்சிபுரம்: 89.90 சதவீதம்
* அரியலூர்: 89.68 சதவீதம்
* தருமர்புரி: 89.62 சதவீதம்
* திருவள்ளூர்: 89.49 சதவீதம்
* கடலூர்: 88.45 சதவீதம்
* திருவண்ணாமலை: 88.03 சதவீதம்
* நாகை :87.45 சதவீதம்
* கிருஷ்ணகிரி: 86.79 சதவீதம்
* புதுச்சேரி: 91.22 சதவீதம்

Follow Us:
Download App:
  • android
  • ios