Asianet News TamilAsianet News Tamil

கோலியையே காலி செய்த சின்ன பையன்!! ஜாம்பவான்களை குறிவைத்து தாக்கும் இளம் வீரர்.. வீடியோ

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுமே டெஸ்ட் தொடரை வெல்லும் தீவிரத்தில் உள்ளது. இதற்கிடையே அந்த தொடருக்கு தயாராகும் விதமாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணியுடன் இந்திய அணி பயிற்சி போட்டியில் ஆடிவருகிறது. 
 

young aaron hardie took virat kohli wicket in practice match
Author
Australia, First Published Nov 29, 2018, 4:03 PM IST

டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 அணியாக இருந்தும் வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் தொடர் தோல்வியை தழுவிவரும் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் அந்த அணியை வீழ்த்தி தங்கள் பலத்தை நிரூபிக்கும் முனைப்பில் உள்ளது. அதேபோல ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாமல் சிதைந்து போய், தொடர் தோல்விகளை சந்தித்துவரும் ஆஸ்திரேலிய அணியும் இந்தியாவை வீழ்த்தி தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முனைப்பில் உள்ளது. 

இரு அணிகளுமே டெஸ்ட் தொடரை வெல்லும் தீவிரத்தில் உள்ளது. இதற்கிடையே அந்த தொடருக்கு தயாராகும் விதமாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணியுடன் இந்திய அணி பயிற்சி போட்டியில் ஆடிவருகிறது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா லெவன் அணி, இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ராகுலும் பிரித்வி ஷாவும் களமிறங்கினர். ராகுல் இந்த வாய்ப்பையும் தவறவிட்டு மீண்டும் சொதப்பினார். வெறும் 3 ரன்னில் வெளியேறினார். அவரை தவிர மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களுமே சிறப்பாக ஆடினர். பிரித்வி ஷா, புஜாரா, கோலி, ரஹானே, ஹனுமா விஹாரி ஆகியோர் அரைசதம் அடித்தனர். அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா 55 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா லெவன் அணியின் தொடக்க வீரர்கள் ஷார்ட் மற்றும் பிரியாண்ட் ஆகிய இருவரும் இணைந்து 24 ரன்கள் எடுத்துள்ளனர். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்துள்ளது. 

இந்திய அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திய அணியின் கேப்டனும் சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரருமான விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்த வேண்டுமென்பது ஒவ்வொரு பவுலரின் கனவாக இருக்கும். அதுவும் இளம் வீரர்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை. கோலியின் விக்கெட் தான் கண்டிப்பாக அவர்களின் கனவாக இருக்கும்.

இந்த போட்டியில் 87 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 64 ரன்களை குவித்த விராட் கோலியை ஆஸ்திரேலிய அணியின் 19 வயதே ஆன இளம் பவுலர் ஆரோன் ஹார்டி வீழ்த்தினார். அவரது பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் கோலி. இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஆரோன் ஹார்டி. 

கோலியை மட்டுமல்ல, சமகால கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரர்களில் மற்றொருவரான இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் ஜோ ரூட்டின் விக்கெட்டை கடந்த ஆண்டு இதேபோல் நடந்த பயிற்சி போட்டியில் வீழ்த்தினார் ஆரோன் ஹார்டி. ஆரோன் ஹார்டி எதிர்காலத்தில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பவுலராக வலம்வருவார் என்பதில் சந்தேகமில்லை. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios