Asianet News TamilAsianet News Tamil

ஆட்டத்தின் திருப்புமுனையே அந்த சம்பவம்தான்!! இதெல்லாம் ”தல”யால் மட்டும் தான் முடியும்.. வீடியோ

இந்த விக்கெட்டுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. நீஷமின் விக்கெட்டுக்கு பிறகு போட்டி இந்தியாவின் பக்கம் திரும்பியதோடு, அதற்கடுத்த விக்கெட்டுகளை எளிதில் வீழ்த்தி இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
 

video of dhonis super run out in last odi
Author
New Zealand, First Published Feb 3, 2019, 3:55 PM IST

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 4-1 என ஒருநாள் தொடரை வென்றது. நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது போட்டியில் படுதோல்வியடைந்த இந்திய அணி, அதிலிருந்து மீண்டெழுந்து ஒரு அணியாக சிறப்பாக ஆடி கடைசி போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. 

வெலிங்டனில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, 18 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்தபோதிலும், ராயுடு - விஜய் சங்கர் ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் சரிவிலிருந்து மீண்டது. விஜய் சங்கர் 45 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேறினார். அதன்பிறகும் தொடர்ந்து சிறப்பாக ஆடிய ராயுடு, 90 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். கேதர் ஜாதவும் மிடில் ஆர்டரில் சிறப்பாக ஆடி தன் பங்கிற்கு 34 ரன்களை எடுத்து கொடுத்தார். கடைசி ஓவர்களில் அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸர்களுமாக பறக்கவிட்ட ஹர்திக் பாண்டியா, இந்திய அணி 252 ரன்களை எட்ட உதவினார். 

video of dhonis super run out in last odi

253 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, முதல் மூன்று விக்கெட்டுகளை விரைவிலேயே இழந்துவிட்டது. ஆட்டத்தின் நான்காவது ஓவரிலேயே நிகோல்ஸை 8 ரன்களில் வெளியேற்றிய ஷமி, அதிரடியாக ஆடி ரன்களை குவித்து வந்த கோலின் முன்ரோவை 24 ரன்களில் போல்டாக்கி அனுப்பினார். இதையடுத்து களத்திற்கு வந்த டெய்லரை தனது முதல் ஓவரிலேயே அவுட்டாக்கினார் ஹர்திக் பாண்டியா. 38 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நியூசிலாந்து அணியை வில்லியம்சன் - லதாம் ஜோடி பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவிலிருந்து மீட்டனர். ஆனால் இந்த ஜோடியை பிரித்து பிரேக் கொடுத்தார் கேதர் ஜாதவ். வில்லியம்சனின் விக்கெட்டை கேதர் வீழ்த்த, அதன்பிறகு டாம் லதாம் மற்றும் கோலின் டி கிராண்ட்ஹோம் ஆகிய இருவரையும் சாஹல் வீழ்த்தினார். 

video of dhonis super run out in last odi

இதையடுத்து போட்டி இந்திய அணிக்கு சாதகமாக திரும்பிய நிலையில், ஜேம்ஸ் நீஷம் அதிரடியாக ஆடி சிக்ஸரும் பவுண்டரியுமாக விளாசி, மீண்டும் போட்டியை இந்திய அணியிடமிருந்து எடுத்து சென்றார். புவனேஷ்வர் குமார் வீசிய 36வது ஓவரில் பவுண்டரியும் சிக்ஸரும் விளாசினார். 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் அதிரடியாக ஆடி இந்திய அணியை மிரட்டிவந்த நீஷமை, தோனி ரன் அவுட் செய்தார். இந்த விக்கெட்டுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. நீஷமின் விக்கெட்டுக்கு பிறகு போட்டி இந்தியாவின் பக்கம் திரும்பியதோடு, அதற்கடுத்த விக்கெட்டுகளை எளிதில் வீழ்த்தி இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

video of dhonis super run out in last odi

கேதர் ஜாதவ் வீசிய 37வது ஓவரின் இரண்டாவது பந்து, நீஷமின் கால்காப்பில் பட்டது. அதற்கு தோனி மற்றும் கேதர் ஜாதவ் ஆகிய இருவரும் எல்பிடபிள்யூ அப்பீல் செய்தனர். அந்த பந்து நீஷமின் கால் காப்பில் பட்டு தோனியின் காலில் பட்டு பின்னால் கிடந்தது. தோனி அம்பயரிடம் அப்பீல் செய்வதில் பிசியாக இருக்கும் தருணத்தை பயன்படுத்தி ரன் ஓடலாம் என்று நினைத்த நீஷம், கிரீஸை விட்டு சற்று நகன்றிருந்தார். அவர் கிரீஸிலிருந்து விலகியிருந்ததை கண்ட தோனி, உடனடியாக பந்தை எடுத்து ரன் அவுட் செய்தார். இதை சற்றும் எதிர்பாராத நீஷம், மிகுந்த அதிருப்தியுடன் பெவிலியனுக்கு நடையை கட்டினார். அந்த வீடியோ இதோ..

Follow Us:
Download App:
  • android
  • ios