Asianet News TamilAsianet News Tamil

இந்த 11 பேரை இறக்குங்க.. உலக கோப்பையை கண்டிப்பா தூக்கிடலாம்!! ஷேன் வார்னே அதிரடி

இந்தியாவும் இங்கிலாந்தும் வலுவாக உள்ள அதேநிலையில், 5 முறை உலக கோப்பையை வென்ற சாம்பியன் அணியான ஆஸ்திரேலியா, ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாமல் தொடர் தோல்விகளை தழுவி துவண்டு போயுள்ளது. 
 

shane warne picks australian squad for world cup
Author
Australia, First Published Feb 12, 2019, 4:15 PM IST

உலக கோப்பை வரும் மே மாத இறுதியில் தொடங்க உள்ள நிலையில், அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. தற்போதைய சூழலில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் ஆக்ரோஷமாக ஆடிவருகின்றன. இரு அணிகளுமே நல்ல ஃபார்மில் உள்ளன. எனவே இரு அணிகளில் ஒரு அணிதான் உலக கோப்பையை வெல்லும் என்று பிரயன் லாரா உள்ளிட்ட முன்னாள் ஜாம்பவான்கள் பலர் ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ளனர்.

shane warne picks australian squad for world cup

உலக கோப்பை இங்கிலாந்தில் நடப்பது அந்த அணிக்கான கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் டாப் ஆர்டர் வலுவாக உள்ளது. முதல் 3 வீரர்களான ரோஹித், தவான், கோலி ஆகிய மூவரும் நல்ல ஃபார்மில் உள்ளனர். அதேபோல புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி என வேகப்பந்து வீச்சும் சிறப்பாக உள்ளது. குல்தீப் யாதவ் சுழலில் மிரட்டுகிறார். இவ்வாறு நல்ல கலவையிலான வலுவான அணியாக இந்திய அணி திகழ்கிறது. இங்கிலாந்து அணியும் வலுவாக உள்ளது. 

shane warne picks australian squad for world cup

இந்தியாவும் இங்கிலாந்தும் வலுவாக உள்ள அதேநிலையில், 5 முறை உலக கோப்பையை வென்ற சாம்பியன் அணியான ஆஸ்திரேலியா, ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாமல் தொடர் தோல்விகளை தழுவி துவண்டு போயுள்ளது. 

ஆஸ்திரேலிய அணிக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில், இரண்டு முறை உலக கோப்பையை வென்ற கேப்டனும் மூன்றுமுறை உலக கோப்பையை வென்ற அணியில் ஆடியவருமான ரிக்கி பாண்டிங், உலக கோப்பைக்கு ஆஸ்திரேலிய அணியின் துணை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ரிக்கி பாண்டிங் துணை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதே அந்த அணிக்கு உத்வேகத்தையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது.

shane warne picks australian squad for world cup

உலக கோப்பைக்கான அணிகளில் இடம்பெறும் வீரர்களை தெரிந்துகொள்வதுதான் கிரிக்கெட் ரசிகர்களின் ஆர்வமாக உள்ளது. ஸ்மித் மற்றும் வார்னரின் வருகையை எதிர்நோக்கியுள்ளது ஆஸ்திரேலிய அணி. தற்போதைக்கு இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளும் வலுவான அணிகளாக திகழ்ந்தாலும் ஸ்மித்தும் வார்னரும் வந்துவிட்டால் ஆஸ்திரேலியாதான் வலுவான அணி என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். 

shane warne picks australian squad for world cup

அதே நம்பிக்கையை ஷேன் வார்னேவும் தெரிவித்துள்ளார். ஸ்மித்தும் வார்னரும் அணியில் இணைந்துவிட்டால், ஆஸ்திரேலிய அணி வலுவான அணியாக திகழும். ஆஸ்திரேலிய அணி மிகச்சிறந்த ஒருநாள் அணி. நிறைய திறமையான வீரர்கள் அணியில் உள்ளனர். ஸ்மித்தும் வார்னரும் அணியில் இணைந்துவிட்டால் கோப்பையை மீண்டும் வெல்லும் என்று தெரிவித்துள்ள ஷேன் வார்னே, உலக கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியையும் தேர்வு செய்துள்ளார். 

ஷேன் வார்னே தேர்வு செய்துள்ள ஆஸ்திரேலிய அணி:

டேவிட் வார்னர், டார்ஷி ஷார்ட், ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித், ஷான் மார்ஷ், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ரிச்சர்ட்ஸன்.

பென்ச்:(கீழ்க்கண்ட ஐவரில் நால்வர்)

ஆஷ்டன் டர்னர், ஆடம் ஸாம்பா, ஹேண்ட்ஸ்கம்ப், ஜோஷ் பிலிப், மெரெடித். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios