Asianet News TamilAsianet News Tamil

அவங்க 2 பேருல யாரு பெஸ்ட் ஸ்பின்னர்..? முரண்படும் முன்னாள் ஜாம்பவான்கள்

உலக கோப்பையில் அஷ்வின் ஆடுவாரா மாட்டாரா என்ற சந்தேகம் இருந்துவரும் நிலையில், உலக கோப்பையில் ஆடும் வாய்ப்பை எதிர்நோக்கியிருக்கிறார் அஷ்வின். 

shane warne contradicts with muralitharan opinion of better spinner between ashwin and kuldeep
Author
India, First Published Feb 15, 2019, 10:19 AM IST

தோனி தலைமையிலான இந்திய அணியின் நட்சத்திர ஸ்பின்னராக திகழ்ந்தவர் அஷ்வின். அஷ்வின் - ஜடேஜா சுழல் ஜோடி, தோனி தலைமையிலான இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளது. இந்திய அணியின் முதன்மை ஸ்பின்னராக இருந்த அஷ்வின், கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஒருநாள் போட்டிகளில் ஆடவில்லை. டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடிவருகிறார். 

shane warne contradicts with muralitharan opinion of better spinner between ashwin and kuldeep

கோலி தலைமையிலான இந்திய அணியில் ரிஸ்ட் ஸ்பின்னர்களான குல்தீப் யாதவ் மற்றும் சாஹலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இவர்கள் இருவருமே கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அருமையாக பந்துவீசினர். தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என உலகின் பல சிறந்த பேட்டிங் வரிசைகளை சிதைத்தனர். குல்தீப் - சாஹல் ரிஸ்ட் ஸ்பின் ஜோடி சர்வதேச அளவில் அனைத்து எதிரணி பேட்ஸ்மேன்களையும் தெறிக்கவிடுகின்றனர். 

shane warne contradicts with muralitharan opinion of better spinner between ashwin and kuldeep

ஒருநாள் போட்டிகளில் ஓராண்டுக்கும் மேலாக ஆடாத அஷ்வின், டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடிவருகிறார். குல்தீப் - சாஹல் ரிஸ்ட் ஸ்பின் ஜோடியின் கையசைவுகளை எதிரணி பேட்ஸ்மேன்கள் இன்னும் கணிக்காததால், அவர்களது பந்துவீச்சை எதிர்கொள்ள திணறுகின்றனர். இவர்கள் இருவருமே உலக கோப்பையில் ஆட உள்ளனர்.

shane warne contradicts with muralitharan opinion of better spinner between ashwin and kuldeep

ஆனால் அஷ்வின் கண்டிப்பாக உலக கோப்பையில் ஆட வேண்டும் கவுதம் காம்பீர் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளார். ஆஃப் ஸ்பின், ரிஸ்ட் ஸ்பின் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. தரமான ஸ்பின்னர் என்றைக்குமே தரமான ஸ்பின்னர் தான். அந்த வகையில் இப்போதும் அஷ்வின் இந்திய அணியின் முதன்மை ஸ்பின்னர்தான். அதனால் அவர் கண்டிப்பாக உலக கோப்பையில் ஆட வேண்டும் என்று காம்பீர் வலியுறுத்தியிருந்தார். 

shane warne contradicts with muralitharan opinion of better spinner between ashwin and kuldeep

இந்நிலையில், அஷ்வினை டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் ஓரங்கட்ட இருப்பதை மறைமுகமாக ரவி சாஸ்திரி தெரிவித்திருந்தார். ரிஸ்ட் ஸ்பின்னர்கள் தலையில் தூக்கிக்கொண்டு ஆடுவதில் தவறில்லை. அதேநேரத்தில் அஷ்வினின் திறமையை குறைத்து மதிப்பிடுவது என்பது தவறான செயல். அதைத்தான் சாஸ்திரி செய்துவருகிறார். 

shane warne contradicts with muralitharan opinion of better spinner between ashwin and kuldeep

உள்நாட்டில் மட்டுமே அஷ்வின் சிறப்பாக வீசியுள்ளதாகவும், வெளிநாட்டு தொடர்களை பொறுத்தமட்டில் குல்தீப் யாதவ் தான் சிறப்பாக வீசியுள்ளதாகவும் அதனால் குல்தீப்பே சிறந்த ஓவர்சீஸ் பவுலர் என்றும் தெரிவித்தார். 

உலக கோப்பையில் அஷ்வின் ஆடுவாரா மாட்டாரா என்ற சந்தேகம் இருந்துவருகிறது. அதேநேரத்தில் உலக கோப்பையில் ஆடும் வாய்ப்பை எதிர்நோக்கியிருக்கிறார் அஷ்வின். 

இதற்கிடையே அஷ்வின் - குல்தீப் குறித்து கருத்து தெரிவித்து சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரன், குல்தீப் யாதவ் நன்றாக வீசுகிறார். அதற்காக அஷ்வினைவிட சிறந்த ஸ்பின்னர் என்றெல்லாம் கூறமுடியாது என்று அதிரடியாக தெரிவித்திருந்தார். 

shane warne contradicts with muralitharan opinion of better spinner between ashwin and kuldeep

இந்நிலையில், முரளிதரனுக்கு நேர்மாறாக கருத்து தெரிவித்துள்ளார் மற்றொரு சுழல் ஜாம்பவான் ஷேன் வார்னே. ஸ்பின்னர்கள் எல்லா காலத்திலும் நிறைய போட்டிகள் ஆட வேண்டும் என்று விரும்புகிறேன். ஆஃப் ஸ்பின், லெக் ஸ்பின் எதுவாக இருந்தாலும் சரி, ஆனால் நிறைய ஸ்பின்னர்கள் ஆட வேண்டும். ஆனால் லெக் ஸ்பின்னர்கள்தான் சிறந்தவர்கள் என்று நான் கூறுவேன். இது நிரூபிக்கப்பட்ட ஒன்றும் கூட. சொந்த மண்ணிலோ அந்நிய மண்ணிலோ, லெக் ஸ்பின்னர்கள் அணிக்காக வெற்றிகளை தேடிக்கொடுக்கக் கூடியவர்கள். எந்த சூழலிலும் இந்திய அணியில் குல்தீப் யாதவ் இடம்பெற வேண்டும். இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாட்டிலும் அபாரமாக வீசுகிறார் என்று ஷேன் வார்னே தெரிவித்துள்ளார். 

shane warne contradicts with muralitharan opinion of better spinner between ashwin and kuldeep

முரளிதரன் அஷ்வினுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்த நிலையில், ஷேன் வார்னே குல்தீப் யாதவ்தான் சிறந்த ஸ்பின்னர் என்று கூறியிருக்கிறார். ஆஃப் ஸ்பின்னரான முரளிதரன், அதே ஆஃப் ஸ்பின்னரான அஷ்வினுக்கு லெக் ஸ்பின்னரான வார்னே, லெக் ஸ்பின்னரான குல்தீப்பையும் ஆதரித்துள்ளனர். 
 
Follow Us:
Download App:
  • android
  • ios