Asianet News TamilAsianet News Tamil

என்ன செய்யணும்னு தோனிக்கு தெரியும்!! அதனால எல்லாரும் கொஞ்சம் அடக்குங்க.. வரிந்து கட்டிய சச்சின்

மோசமான ஃபார்மில் இருக்கும் தோனி தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பிவரும் நிலையில், அதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார். 

sachin tendulkar backs ms dhoni for his presence in 2019 world cup team
Author
Chennai, First Published Nov 4, 2018, 4:47 PM IST

மோசமான ஃபார்மில் இருக்கும் தோனி தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பிவரும் நிலையில், அதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார். 

இந்திய அணிக்கு டி20 உலக கோப்பை, ஒருநாள் உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்று சர்வதேச கோப்பைகளையும் வென்று கொடுத்த கேப்டன் தோனி. கடந்த 2014ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தோனி, கடந்த ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விலகி இந்திய அணியில் ஒரு வீரராக ஆடிவருகிறார். sachin tendulkar backs ms dhoni for his presence in 2019 world cup team

அண்மைக்காலமாக சரியாக ஃபார்மில் இல்லாமல் தவித்துவருகிறார் தோனி. ஐபிஎல்லில் இரண்டு ஆண்டுகால இடைவெளிக்கு பிறகு மீண்டும் சென்னை அணிக்கு தலைமையேற்று வழிநடத்திய தோனி, சிறப்பாக கேப்டன்சி செய்து மூன்றாவது முறையாக சென்னை அணிக்கு கோப்பையை கைப்பற்றி கொடுத்ததோடு, பேட்டிங்கும் சிறப்பாக ஆடினார். 16 போட்டிகளில் பேட்டிங் ஆடி 455 ரன்களை குவித்தார்.

ஐபிஎல்லில் அசத்திய தோனி, சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பிவருகிறார். அதனால் தோனி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. தோனி கண்டிப்பாக அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலக கோப்பையில் ஆடுவார் என்றாலும் அவர் மீதான விமர்சனங்களும் அணியில் அவருக்கான இடம் குறித்த பேச்சுகளும் பரவலாக உள்ளன. sachin tendulkar backs ms dhoni for his presence in 2019 world cup team

கடுமையான விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் கடந்து இந்திய அணியில் தோனி அசைக்க முடியாத இடத்தை பிடித்திருப்பதற்கு காரணம், அவரது அனுபவம் மற்றும் விக்கெட் கீப்பிங் செயல்பாடுதான். எப்போது வேண்டுமானாலும் பேட்டிங்கில் ஃபார்முக்கு திரும்பலாம். ஆனால் அவரது அனுபவம் ஒவ்வொரு போட்டிக்கும் தேவை. கேப்டனுக்கு ஆலோசனை, பவுலர்களுக்கு அறிவுரை என தோனியின் அனுபவம் மிகப்பெரிய திருப்புமுனைகளை ஏற்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்கு உதவுகிறது.

தோனியின் அனுபவ ஆலோசனையும் அவரது விக்கெட் கீப்பிங்கும் இந்திய அணிக்கு தேவை என்பதால் அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலக கோப்பை வரை கண்டிப்பாக ஆடுவார். இதற்கிடையே வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து தோனி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். தோனி எப்படியும் 2020 டி20 உலக கோப்பையில் ஆட வாய்ப்பில்லை என்பதால், அவரது இடத்தை பூர்த்தி செய்யப்போகும் இளம் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட்டிற்கு வாய்ப்பு வழங்கும் விதமாக தோனி நீக்கப்பட்டுள்ளார். sachin tendulkar backs ms dhoni for his presence in 2019 world cup team

ஆனாலும் தோனியின் நீக்கத்தை அவரை ஓரங்கட்டும் முயற்சியாகவே ரசிகர்கள் பார்க்கின்றனர். தோனியின் பேட்டிங் மீது கடுமையான விமர்சனங்களும் அவர் உலக கோப்பையில் ஆடுவது குறித்த விவாதங்களும் எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார். தோனி குறித்து பேசிய சச்சின் டெண்டுல்கர், தோனி எப்போதுமே இந்திய அணிக்கு மிகச்சிறந்த பங்களிப்பாளர்.

எல்லாவிதமான போட்டிகளுக்கும் நீண்டகாலமாக பொறுப்பை கையில் எடுத்து ஆடிவருபவர். இதுபோன்று நீண்டகாலம் ஆடும் அனுபவ வீரர்களுக்கு எந்த விஷயங்களில் தங்களை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என்பதும் அணிக்காக அவர் என்ன செய்ய வேண்டும் என்பதும் நன்றாக தெரியும் என தோனிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios