Asianet News TamilAsianet News Tamil

கிரிக்கெட் உலகமே புகழும் இரட்டை சத மன்னன் ரோஹித்.. அவரே ஒருவரை புகழ்ந்துள்ளார்..! அவர் யார் தெரியுமா..?

rohit sharma complement steve smith
rohit sharma complement steve smith
Author
First Published Dec 16, 2017, 5:25 PM IST


பெர்த் டெஸ்ட் போட்டியில் 3-ம் நாளான இன்று தனது 22-வது டெஸ்ட் சதத்தை எடுத்ததன் மூலம் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முறியடித்துள்ளார்.

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்துவருகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2-0 என ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது.

மூன்றாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடந்துவருகிறது. இந்த டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான இன்று டெஸ்ட் கிரிக்கெட்டின் 22வது சதத்தை ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பதிவு செய்தார். 

rohit sharma complement steve smith

சச்சின் டெண்டுல்கர் 114 இன்னிங்ஸ்களில் 22 டெஸ்ட் சதங்களை எடுத்தார், ஸ்மித் 108-வது இன்னிங்ஸில் 22-வது சதத்தை எடுத்து சச்சினை முந்தியுள்ளார். 

முதலிடத்தில் 58 இன்னிங்ஸ்களீல் 22 சதங்களை எடுத்த டான் பிராட்மேனும், 101 இன்னிங்ஸ்களில் எடுத்த சுனில் கவாஸ்கர் 2-ம் இடத்திலும் உள்ளனர்.

ஸ்மித்தின் சிறப்பான பேட்டிங்கை இந்திய அதிரடி மன்னன் ரோஹித் சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார். ஸ்மித் குறித்து டுவிட்டர் பக்கத்தில், என்ன மாதிரியான வீரர் ஸ்டீவ் ஸ்மித்!! அவுட் ஆவது போலவே தெரியவில்லையே. சிறப்பான ஆட்டம் என்று ரோஹித் பதிவிட்டுள்ளார்.

<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="en" dir="ltr">What a player Steve Smith. Doesn’t look like he’s going to get out. Does he 😳 Well played <a href="https://twitter.com/hashtag/Ashes?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Ashes</a></p>&mdash; Rohit Sharma (@ImRo45) <a href="https://twitter.com/ImRo45/status/941886783263870976?ref_src=twsrc%5Etfw">December 16, 2017</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
 

மூன்றாவது அதிவேக 22வது சதத்துடன் 2017-ல் 1,000 ரன்களையும் கடந்து விட்டார் ஸ்மித். தொடர்ந்து 4-வது ஆண்டாக 1000 ரன்களை ஸ்மித் கடந்துள்ளார். இதற்கு ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஹைடன் மட்டுமே 4 ஆண்டுகளாக தொடர்ந்து 1000 ரன்களை கடந்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ஸ்மித் தான் இதை செய்திருக்கிறார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios