Asianet News TamilAsianet News Tamil

ரஞ்சி கோப்பை; காலிறுதியில் மோதிக் கொண்டிருக்கும் அணிகளும் அவற்றின் தற்போதைய ஸ்கோர் ரேட்டிங்கும்...

Ranji Cup The teams that are in the quarter-finals match and their current score ...
Ranji Cup The teams that are in the quarter-finals match and their current score ...
Author
First Published Dec 11, 2017, 9:43 AM IST


ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் காலிறுதியில் குஜராத் - மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் - டெல்லி, கேரளா - விதர்பா மற்றும் மும்பை - கர்நாடகம் அணிகள் மோதுகின்றன.

முதலாவது காலிறுதி ஆட்டத்தில் குஜராத்திற்கு எதிராக மேற்கு வங்கம் தனது 2-வது இன்னிங்ஸில் 169 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 483 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.

முன்னதாக அந்த அணி தனது முதல் இன்னிங்ஸில் 354 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் ஆடிய குஜராத் தனது முதல் இன்னிங்ஸில் 224 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.  இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 130 ஓட்டங்கள் முன்னிலையுடன் தனது 2-வது இன்னிங்ஸைத் தொடங்கிய மேற்கு வங்கம், தற்போது 613 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.

அதேபோன்று விஜயவாடாவில் நடைபெற்று வரும் 2-வது காலிறுதி ஆட்டத்தில் மத்திய பிரதேசத்தை எதிர்கொண்டுள்ள டெல்லி அணி, 217 என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடி வருகிறது.

நான்க்காம் நாள் முடிவில் அந்த அணி, மூன்று ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 8 ஓட்டங்கள் எடுத்துள்ளது.  இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த மத்திய பிரதேசம் தனது முதல் இன்னிங்ஸில் 338 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

பின்னர் தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய டெல்லி அனைத்து விக்கெட் இழப்புக்கு 405 ஓட்டங்கள் எடுத்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 67 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸைத் தொடங்கிய மத்திய பிரதேசம், 283 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்திருந்தது.

மற்றொரு ஆட்டமாக சூரத்தில் நடைபெறும் 3-வது காலிறுதியில் கேரளத்தை எதிர்கொண்டுள்ள விதர்பா, நேற்றைய முடிவில் தனது 2-வது இன்னிங்ஸில் 124 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 431 ரன்களுடன் ஆடி வருகிறது.

முன்னதாக, விதர்பா தனது முதல் இன்னிங்ஸில் 105.3 ஓவர்களில் 246 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

பின்னர் ஆடிய கேரளம் தனது முதல் இன்னிங்ஸில் 176 ஓட்டங்கள் எடுத்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 70 ஓட்டங்கள் முன்னிலையுடன், 2-ஆவது இன்னிங்ஸை ஆடி வரும் விதர்பா தற்போது கேரளத்தை விட 501 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் 4-வது காலிறுதியில் மும்பை - கர்நாடகா அணிகள் இடையே நடைப்பெற்றது. நாகபுரியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மும்பை அணி முதலில் பேட் செய்தது.

மும்பை அணி 56 ஓவர்களில் 173 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் ஆடிய கர்நாடகம் தனது முதல் இன்னிங்ஸில் 163.3 ஓவர்களில் 570 ஓட்டங்கள் எடுத்தது.

இதனையடுத்து முதல் இன்னிங்ஸில் 370 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸைத் தொடங்கிய மும்பை 114.5 ஓவர்களில் 377 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து தோல்வி அடைந்தது.

Follow Us:
Download App:
  • android
  • ios