Asianet News TamilAsianet News Tamil

வெஸ்ட் இண்டீஸ் கேப்டனுக்கு பிடித்த இந்திய வீரர் இவர்தானாம்!! யாருனு நீங்களே பாருங்க

வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் அவருக்கு மிகவும் பிடித்த இந்திய கிரிக்கெட்டர் யார் என்று மனம்திறந்துள்ளார். 
 

jason holder named his favourite indian cricketer
Author
India, First Published Oct 29, 2018, 12:37 PM IST

வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் அவருக்கு மிகவும் பிடித்த இந்திய கிரிக்கெட்டர் யார் என்று மனம்திறந்துள்ளார். 

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடிவருகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என இந்திய அணி வென்றது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்துவருகிறது. 

இதன் முதல் மூன்று போட்டிகளில் இந்தியா ஒரு போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு போட்டியிலும் வென்றுள்ளது. ஒரு போட்டி டிரா ஆனது. இந்நிலையில் நான்காவது ஒருநாள் போட்டி இன்று மும்பையில் நடக்க உள்ளது. 

தொடரை வெல்லும் வாய்ப்பில் நீடிக்க இன்றைய போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் இரு அணிகளும் களமிறங்குகின்றன. வெஸ்ட் இண்டீஸ் அணி, கெய்ல், பிராவோ, சுனில் நரைன், பொல்லார்டு, ஆண்ட்ரே ரசல் போன்ற சீனியர் வீரர்கள் இல்லாமல் ஹோல்டர் தலைமையிலான இளம் அணியாக உள்ளது. 

jason holder named his favourite indian cricketer

சாமுவேல்ஸ் மட்டும்தான் அந்த அணியில் இருக்கும் சீனியர் வீரர். எனினும் ஷாய் ஹோப், ஹெட்மயர், பவல் போன்ற திறமையான இளம் வீரர்களை கொண்டிருப்பதால், வலுவான அணியான இந்தியாவுக்கே டஃப் கொடுக்கிறது வெஸ்ட் இண்டீஸ். 

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டரிடம் அவருக்கு பிடித்த இந்திய வீரர் யார் என்ற கேள்விக்கு, இந்திய அணியின் முன்னாள் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் விவிஎஸ் லட்சுமணன் தான் தனக்கு பிடித்த இந்திய வீரர் என்று பதிலளித்துள்ளார். 

jason holder named his favourite indian cricketer

இவர் இதற்கு முன், ஆல்டைம் விருப்ப அணியை தேர்வு செய்தபோது அதில் இடம்பெற்றிருந்த ஒரே இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் மட்டும்தான். அதில் லட்சுமணன் இடம்பெறவில்லை. இந்நிலையில், தற்போது அவருக்கு பிடித்த இந்திய வீரர் என்று லட்சுமணனை குறிப்பிட்டுள்ளார். 

அதற்கு காரணம் ஐபிஎல்லாகத்தான் இருக்கக்கூடும். வேறு வாய்ப்பே இல்லை. ஏனென்றால் ஐபிஎல்லில் லட்சுமணன் ஆலோசகராக உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில்தான் கடந்த சீசனில் ஹோல்டர் ஆடினார். எனவே அப்போது லட்சுமணனிடம் பழகியதிலிருந்து அவரது திறமை மற்றும் மற்ற குணங்கள், பண்புகளை பார்த்து அவரை பிடித்திருக்கக்கூடும். 

jason holder named his favourite indian cricketer

லட்சுமணன் இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்தவர். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் ஃபாலோ ஆன் பெற்ற போட்டியை, டிராவிட்டுடன் சேர்ந்து மீட்டெடுத்து அந்த போட்டியில் வரலாற்று வெற்றி பெற செய்தவர். 1996ம் ஆண்டிலிருந்து 2012ம் ஆண்டுவரை இந்திய அணிக்காக ஆடி 23 சதங்களுடன் 11 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios