Asianet News TamilAsianet News Tamil

ஐபிஎல்லில் மேட்ச் ஃபிக்ஸிங்..? முன்கூட்டியே வெளியான விளம்பரத்தால் வெடித்தது சர்ச்சை

ipl final promo video raised controversy
ipl final promo video raised controversy
Author
First Published May 25, 2018, 5:28 PM IST


ஐபிஎல் 11வது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை அணி ஏற்கனவே இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது. 

இறுதி போட்டியில் சென்னை அணியுடன் மோதப்போகும் அணி எது என்பதை தீர்மானிக்கும் இரண்டாவது தகுதி சுற்று போட்டி கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. 

இந்த போட்டியில் வெல்லும் அணி இறுதி போட்டியில் சென்னை அணியுடன் மோதும். இந்த போட்டியே இன்னும் நடைபெறாத நிலையில், இறுதி போட்டியில் சென்னை அணியுடன் கொல்கத்தா அணி மோதுவது போன்ற விளம்பரம் ஒன்று, ஐபிஎல்லை ஒளிபரப்பிவரும் ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியிடப்பட்டது. 

கொல்கத்தா - ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது தகுதி சுற்று போட்டியே நடைபெறாத நிலையில், எந்த அணி வெல்லும் என்பதே தெரியாத நிலையில், சென்னை அணி மற்றும் கொல்கத்தா அணி வீரர்களை வைத்து அந்த விளம்பரம் எடுக்கப்பட்டிருந்தது. 

இந்த வீடியோவைக் கண்ட ரசிகர்கள், சமூக வலைதளங்களில் அந்த வீடியோவை பதிவிட்டு, போட்டி முடியும் முன்னரே சென்னை அணியுடன் கொல்கத்தா தான் இறுதி போட்டியில் மோதும் என எப்படி விளம்பரம் செய்ய முடியும்? முடிவு தீர்மானிக்கப்பட்டு விட்டதா? மேட்ச் பிக்ஸிங்கா என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு அதிகமான ரசிகர்கள் இருப்பதால் இந்த அணிகள் தான் ஃபைனலுக்கு வரும் என்றும், கேகேஆர் அணியை இறுதிப்போட்டிக்கு கொண்டுவர பிசிசிஐ உதவி செய்யும் என்றும், தொலைக்காட்சி டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்திக்கொள்ளும் உத்தி என்றும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

ரசிகர்களின் கடுமையான விமர்சனங்கள் மற்றும் கண்டனங்களை தொடர்ந்து ஹாட் ஸ்டார் தளத்திலிருந்து அந்த வீடியோ நீக்கப்பட்டுவிட்டது. எனினும் ரசிகர்களிடையே இந்த சம்பவம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios