Asianet News TamilAsianet News Tamil

பொறுப்பாக ஆடி அரைசதம் அடித்த தோனி.. ஆஸ்திரேலிய அறிமுக பவுலர் கொடுத்த அடுத்த ஷாக்

பீட்டர் சிடில் வீசிய 14வது ஓவரில் ரோஹித் சர்மா சிக்ஸர் விளாச, நாதன் லயன் வீசிய அடுத்த ஓவரில் தோனி தனது அக்மார்க் ஷாட்டின் மூலம் சிக்ஸர் விளாசினார். 

dhoni hits fifty in after a long time in first odi against australia
Author
Australia, First Published Jan 12, 2019, 2:40 PM IST

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே சிட்னியில் நடந்துவரும் முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, 288 ரன்களை குவித்தது. 

289 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் தவான் முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி வெளியேற, நான்காவது ஓவரில் கோலியும் ராயுடுவும் ரிச்சர்ட்ஸனின் அடுத்தடுத்த பந்தில் ஆட்டமிழந்தனர். 4 ரன்னுக்கே 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில், 4வது ஓவரிலேயே களத்துக்கு வந்தார் தோனி. 

தினேஷ் கார்த்திக்கை நிறுத்துவிட்டு தோனி ஒருவரிசை முன்னதாக களமிறக்கப்பட்டார். தோனியும் ரோஹித்தும் நிதானமாக ஆடி பார்ட்னர்ஷிப் அமைத்தனர். தோனி மிகவும் நிதானமாக ஆட, ரோஹித் சர்மா அவ்வப்போது சில சிக்ஸர்களை அடித்தார். 4வது ஓவரில் இரண்டு விக்கெட்டுகள் விழுந்தபோதிலும் சற்றும் அசராத ரோஹித் சர்மா, அடுத்த ஓவரிலேயே சிக்ஸர் விளாசினார். 13 ஓவர்கள் வரை இருவரும் மிகவும் மந்தமாக ஆடினர். பின்னர் சற்று அடிக்க ஆரம்பித்தனர். 

dhoni hits fifty in after a long time in first odi against australia

பீட்டர் சிடில் வீசிய 14வது ஓவரில் ரோஹித் சர்மா சிக்ஸர் விளாச, நாதன் லயன் வீசிய அடுத்த ஓவரில் தோனி தனது அக்மார்க் ஷாட்டின் மூலம் சிக்ஸர் விளாசினார். இருவரும் சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்துவருகின்றனர். அபாரமாக ஆடிய ரோஹித் சர்மா அரைசதத்தை பூர்த்தி செய்தார். 

ரோஹித் சர்மாவுக்கு ஒத்துழைப்பு கொடுத்து சிறப்பாக ஆடிய தோனி, ஸ்வீப் ஷாட், ஸ்டிரைட் டிரைவ், கவர் டிரைவ் என சில அருமையான ஷாட்களை ஆடினார். பொறுப்புடன் ஆடிய தோனி, நீண்ட இடைவெளிக்கு பிறகு அரைசதம் அடித்தார். தோனி இப்படி ஆடி பார்க்க வேண்டும் என்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் அண்மைக்கால கனவு. அருமையாக ஆடிவந்த தோனி,  அரைசதம் கடந்த மாத்திரத்திலேயே 51 ரன்களில் அவுட்டானார். ஆஸ்திரேலிய அணியின் அறிமுக பவுலர் பெஹ்ரண்டோர்ஃப், தோனி எல்பிடபிள்யூ செய்து அனுப்பினார். 

dhoni hits fifty in after a long time in first odi against australia

இதையடுத்து ரோஹித் சர்மாவுடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். இந்திய அணி 33 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் அடித்துள்ளது. ரோஹித் - தோனி ஜோடி 4வது விக்கெட்டுக்கு 137 ரன்களை குவித்தது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios