Asianet News TamilAsianet News Tamil

ஹர்திக் பாண்டியா, ராகுலுக்கு தடை..? பிசிசிஐ அதிரடி.. கலங்கி நிற்கும் இளம் வீரர்கள்

ஹர்திக் பாண்டியாவும் ராகுலும் பெரும் சிக்கலில் மாட்டியுள்ளனர். சிறந்த நண்பர்களான இவர்கள் இருவரும், காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல விஷயங்களை பகிர்ந்துகொண்டனர். 
 

coa chief vinod rai recommended 2 matches ban for hardik and rahul
Author
India, First Published Jan 10, 2019, 1:43 PM IST

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மற்றும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ராகுல் ஆகிய இருவருமே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 12ம் தேதி தொடங்குகிறது. ஜனவரி 12, 15, 18 ஆகிய தேதிகளில் ஒருநாள் போட்டிகள் நடக்க உள்லன. 

இந்நிலையி, ஹர்திக் பாண்டியாவும் ராகுலும் பெரும் சிக்கலில் மாட்டியுள்ளனர். சிறந்த நண்பர்களான இவர்கள் இருவரும், காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல விஷயங்களை பகிர்ந்துகொண்டனர். 

அப்போது பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஹர்திக் பாண்டியா பேசினார். இதையடுத்து பெண்கள் குறித்து இழிவாக பேசிய ஹர்திக் பாண்டியாவிற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்த விவகாரம் அத்துடன் நில்லாமல், கிரிக்கெட் அல்லாத ஒரு நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றது குறித்த சர்ச்சையையும் கிளப்பிவிட்டது. 

coa chief vinod rai recommended 2 matches ban for hardik and rahul

இந்த சம்பவம் குறித்து 24 மணி நேரத்தில் விளக்கமளிக்க வேண்டும் என ஹர்திக் பாண்டியா மற்றும் ராகுல் ஆகிய இருவருக்கும் பிசிசிஐ-யின் நிர்வாகக்குழு நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து ஹர்திக் பாண்டியா மன்னிப்பு கேட்டார். நிகழ்ச்சியின் போக்கிற்கு ஏற்றவகையில் பதிலளித்தேனே தவிர, யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல என்று விளக்கமளித்த ஹர்திக், பகிரங்கமாக மன்னிப்பும் கோரினார்.

coa chief vinod rai recommended 2 matches ban for hardik and rahul

ஆனால், ஹர்திக் பாண்டியாவின் விளக்கத்தில் திருப்தியடையாத பிசிசிஐ  நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய், ஹர்திக் பாண்டியா மற்றும் ராகுல் ஆகிய இருவருக்கும் 2 போட்டிகளில் ஆட தடை விதிக்குமாறு பிசிசிஐ-யிடம் பரிந்துரைத்துள்ளார். இந்த தகவலை பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் வினோத் ராய் தெரிவித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios