Asianet News TamilAsianet News Tamil

மீண்டும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆகிறார் ஸ்மித்..? ஆக்ஸிடெண்டல் கேப்டனின் அதிரடி முடிவு

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன்சியை ஸ்டீவ் ஸ்மித்திற்கு விட்டுத்தர தயாராக இருப்பதாக டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.
 

tim paine is ready to hand over the captaincy to steve smith
Author
Australia, First Published Oct 15, 2019, 2:03 PM IST

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் அனைத்து அணிகளுக்கும் ஸ்மித் கேப்டனாக இருந்தார். கடந்த ஆண்டு பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடை பெற்றதால் ஸ்மித்தின் கேப்டன்சியும் பறிபோனது. ஒருநாள் மற்றும் டி20 ஆஸ்திரேலிய அணிகளுக்கு ஆரோன் ஃபின்ச்சும் டெஸ்ட் அணிக்கு டிம் பெய்னும் கேப்டன்களாக பொறுப்பேற்றனர்.

ஸ்மித் இல்லாததால், அந்த நேரத்தில் பெரியளவில் அனுபவமில்லாத டிம் பெய்ன் கேப்டனாக்கப்பட்டார். 26 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள டிம் பெய்ன் ஒரு சதம் கூட அடித்ததில்லை. பேட்டிங்கில் தொடர்ச்சியாக படுமோசமாக சொதப்பிவருகிறார் டிம் பெய்ன். டிம் பெய்னின் கேப்டன்சியில் தான், ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் முதன்முறையாக இந்திய அணியிடம் டெஸ்ட் தொடரை இழந்தது. 

tim paine is ready to hand over the captaincy to steve smith

ரிஷப் பண்ட் கூட, டிம் பெய்னை தற்காலிக கேப்டன் என்று டெஸ்ட் போட்டியின் போது கிண்டலடித்திருந்தார். மேலும் பலரும் டிம் பெய்னை ஆக்ஸிடெண்டல் கேப்டன் என்று விமர்சித்தனர். டிம் பெய்ன் பேட்டிங் மற்றும் கேப்டன்சி என இரண்டிலுமே சொதப்பிவரும் நிலையில், தடை முடிந்து மீண்டும் அணியில் இணைந்த ஸ்மித், ஆஷஸ் தொடரில் அபாரமாக ஆடி அசத்தியதோடு, டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 இடத்தையும் பிடித்துவிட்டார். எனவே மீண்டும் ஸ்மித்தை கேப்டனாக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்தன. 

ஸ்மித் கேப்டனாவது குறித்த விவாதங்கள் வலுத்துள்ள நிலையில், ஸ்மித் மீண்டும் கேப்டனாக விரும்பினால், அவருக்கு தனது முழு ஆதரவு இருப்பதாகவும், தானே முன்வந்து கேப்டன்சியை விட்டுக்கொடுக்க தயாராக இருப்பதாகவும் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios