Asianet News TamilAsianet News Tamil

உலக கோப்பை 2019: அந்த வகையில இந்திய அணி கொடுத்து வச்ச அணிதான்.. ராகுல் டிராவிட் அதிரடி

இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரு அணிகளுமே சமபலம் வாய்ந்த அணிகளாக உள்ளன. ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகளும் வலுவாக உள்ளன. 
 

rahul dravid  speaks about indian teams strength in world cup
Author
India, First Published May 18, 2019, 5:12 PM IST

உலக கோப்பை வரும் 30ம் தேதி தொடங்குகிறது. இந்த உலக கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்து தான் வெல்லும் என்பதே பெரும்பாலான ஜாம்பவான்களின் கணிப்பு. 

உலக கோப்பை இங்கிலாந்தில் நடப்பது அந்த அணிக்கு கூடுதல் பலம். இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரு அணிகளுமே சமபலம் வாய்ந்த அணிகளாக உள்ளன. ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகளும் வலுவாக உள்ளன. 

1992ம் ஆண்டுக்கு பிறகு இந்த உலக கோப்பையில் தான் லீக் சுற்றில் அனைத்து அணிகளும் அனைத்து அணிகளுடனும் மோதுகின்றன. அதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. மேலும் இங்கிலாந்து ஆடுகளங்கள் அனைத்தும் பேட்டிங்கிற்கு சாதகமாக உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு இன்னிங்ஸில் 500 ரன்கள் அடிக்கக்கூட வாய்ப்பிருப்பதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய அதிகாரியே தெரிவித்திருக்கிறார். 

rahul dravid  speaks about indian teams strength in world cup

எனவே இந்த உலக கோப்பை ஒரு ஹை ஸ்கோரிங் உலக கோப்பையாக அமைய உள்ளது தெளிவாகிவிட்டது. இந்திய அணியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பவுலிங் யூனிட் சிறப்பாக இருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலம். தொடக்க மற்றும் டெத் ஓவர்களை பும்ரா பார்த்துக்கொள்வார். மிடில் ஓவர்களில் குல்தீப்பும் சாஹலும் இணைந்து எதிரணிகளின் பேட்டிங் வரிசையை சரித்துவிடுவர். இதுதான் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்துள்ளது. இதுதான் இந்திய அணியின் பலம் என்று ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். 

rahul dravid  speaks about indian teams strength in world cup

இதுகுறித்து பேசிய டிராவிட், இது ஹை ஸ்கோரிங் உலக கோப்பையாக இருக்கப்போகிறது. இதுமாதிரி பேட்டிங்கிற்கு சாதகமான ஹை ஸ்கோரிங் போட்டிகளில் பவுலர்களின் பங்களிப்பு அளப்பரியது. முடிந்தளவிற்கு எதிரணியை எந்த அணி கட்டுப்படுத்துகிறதோ அந்த அணிக்குத்தான் வெற்றி வாய்ப்பு. அந்த வகையில் இந்திய அணிக்கு இது பலமே. பும்ரா, குல்தீப், சாஹல் ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய பவுலர்கள். ஹை ஸ்கோரிங் போட்டிகளில் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தும் அணிக்குத்தான் வெற்றி வாய்ப்பு. அந்த வகையில் இந்திய அணி மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தும் பவுலர்களை பெற்றிருப்பது பலம் என்று ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். 

இந்திய அணி உலக கோப்பையை வெல்வதற்கான வாய்ப்புள்ளதாகவும் டிராவிட் தெரிவித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios