Asianet News TamilAsianet News Tamil

கோலியும் காலி.. ஹர்திக் பாண்டியாவிற்கு அருமையான ஒரு சான்ஸ்!!

நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய அணி 11வது ஓவரிலேயே நான்கு விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 
 

kohli also gone earlier of the innings and hardik pandya has good chance to prove his temperament
Author
England, First Published May 25, 2019, 4:25 PM IST

நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய அணி விரைவில் நான்கு விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான பயிற்சி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்ததை அடுத்து, ரோஹித் சர்மாவும் ஷிகர் தவானும் களமிறங்கினர்.

தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகிய இருவருமே தலா 2 ரன்களில் ட்ரெண்ட் போல்ட்டின் அடுத்தடுத்த ஓவர்களில் நடையை கட்டினர். ட்ரெண்ட் போல்ட் வீசிய 2வது ஓவரின் 2வது பந்தில் ரோஹித் சர்மா எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். 

இதையடுத்து தவானுடன் கேப்டன் கோலி ஜோடி சேர்ந்தார். மூன்றாவது ஓவரை டிம் சௌதி வீச, மீண்டும் ட்ரெண்ட் போல்ட் வீசிய 4வது ஓவரின் முதல் பந்திலேயே விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து தவான் வெளியேறினார். நான்காவது ஓவரிலேயே இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில், 4ம் வரிசை வீரராக கேஎல் ராகுல், கோலியுடன் ஜோடி சேர்ந்தார். 

kohli also gone earlier of the innings and hardik pandya has good chance to prove his temperament

நான்காம் வரிசையில் இறங்கும் வாய்ப்பு மட்டுமல்லாமல் 4வது ஓவரிலேயே களத்திற்கு வரும் வாய்ப்பையும் பெற்ற ராகுல், பெரிய இன்னிங்ஸ் ஆட  கிடைத்த இந்த வாய்ப்பை தவறவிட்டு 6 ரன்களில் வெளியேறினார். அதன்பின்னர் கோலியுடன் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தார். ஹர்திக் பாண்டியா களத்திற்கு வந்த சிறிது நேரத்திலேயே கோலின் டி கிராண்ட் ஹோம் வீசிய 11வது ஓவரில் கோலியும் போல்டாகி வெளியேறினார். 

39 ரன்களுக்கே இந்திய அணி டாப் 4 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில் ஹர்திக் பாண்டியாவும் தோனியும் ஆடிவருகின்றனர். அதிரடியாக ஃபினிஷ் செய்வதில் கைதேர்ந்தவரான ஹர்திக் பாண்டியா, பெரும்பாலும் டெத் ஓவர்களில் தான் களத்திற்கு வருவார். ஆனால் இந்த போட்டியில் 6வது ஓவரிலேயே களத்திற்கு வந்துவிட்டார். தான் ஒரு அதிரடி பேட்ஸ்மேன் மட்டுமல்லாது, சூழலுக்கு ஏற்ப களத்தில் நிலைத்து ஆடவும் தெரியும் என நிரூபிக்க ஹர்திக் பாண்டியாவிற்கு அருமையான ஒரு வாய்ப்பு இது. இதை பயன்படுத்தி கொள்கிறாரா என்று பார்ப்போம்.

ஹர்திக் பாண்டியா வழக்கம்போல அவசரப்படாமல் நிதானமாகவே ஆடிவருகிறார். இதே நிதானத்தைத் தொடர்ந்து பெரிய இன்னிங்ஸ் ஆடுகிறாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios