Asianet News TamilAsianet News Tamil

பேட்ஸ்மேன் உட்பட அனைவருமே வியந்து பார்த்த ஜடேஜாவின் கேட்ச்.. வீடியோ

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் மார்க்ரமின் கேட்ச்சை ஜடேஜா அபாரமாக ஜம்ப் செய்து பிடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

jadeja super catch against south africa in first test video
Author
Vizag, First Published Oct 6, 2019, 3:41 PM IST

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 502 ரன்களையும், தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 431 ரன்களையும் அடித்தன. 

71 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 323 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து 395 ரன்கள் என்ற இலக்குடன் நான்காம் நாளான நேற்றைய ஆட்டத்தின் இறுதியில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் எல்கரை ஜடேஜா நேற்றே வீழ்த்திவிட்டார். இதையடுத்து ஒரு விக்கெட் இழப்பிற்கு 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில், நான்காம் நாள் ஆட்டம் முடிந்தது.

கடைசி நாளான இன்றைய ஆட்டம் தொடங்கிய இரண்டாவது ஓவரிலேயே டி ப்ருய்னை அஷ்வின் வீழ்த்தினார். ஆடுகளம் ஸ்பின்னிற்கு சாதகமாக திகழும் நிலையில், முதல் இன்னிங்ஸில் சோபிக்காத ஷமி, இரண்டாவது இன்னிங்ஸில் அசத்தலாக வீசினார். பவுமா, டுப்ளெசிஸ், டி காக் ஆகிய மூவரையும் சோபிக்கவிடாமல் கிளீன் போல்டாக்கி அனுப்பினார். 

jadeja super catch against south africa in first test video

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய மார்க்ரமை, அபாரமான கேட்ச்சின் மூலம் ஜடேஜா வெளியேற்றினார். ஜடேஜா வீசிய பந்தை ஸ்ட்ரைட்டாக தூக்கியடித்து பவுண்டரிக்கு விரட்ட நினைத்தார் மார்க்ரம். ஆனால் தலைசிறந்த ஃபீல்டரான ஜடேஜா, செம டைமிங்கில் கரெக்ட்டாக ஜம்ப் செய்து அந்த கேட்ச்சை பிடித்து மார்க்ரமை அவுட்டாக்கினார். இந்திய வீரர்கள் அனைவருமே ஜடேஜாவின் அபாரமான கேட்ச்சை கண்டு வியந்ததோடு அவரை பாராட்டினர். அதேபோல அந்த பந்தை அடித்த பேட்ஸ்மேனான மார்க்ரமும் அந்த கேட்ச்சை வியந்து பார்த்தார். அந்த வீடியோ இதோ.. 

அதன்பின்னர் அதே ஓவரில் ஃபிளாண்டர் மற்றும் கேசவ் மஹாராஜ் ஆகிய இருவரையும் ஜடேஜா வீழ்த்த, அதன்பின்னர் முத்துசாமியும் டேன் பீட்டும் இணைந்து பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பீட்டையும் ரபாடாவையும் ஷமி வீழ்த்தினார். தென்னாப்பிரிக்க அணியை இரண்டாவது இன்னிங்ஸில் 191 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios