Asianet News TamilAsianet News Tamil

இந்திய அணி சத்தியமா உலக கோப்பையை ஜெயிக்காது!! கவாஸ்கர் அதிரடி

இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் வலுவாக திகழும் நிலையில், உலக கோப்பையை எந்த அணி வெல்லும் என்று கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். 

gavaskar predicts england will win 2019 world cup in home
Author
India, First Published Mar 14, 2019, 3:57 PM IST

உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி ஆகிய இரு அணிகளில் ஒன்றுதான் உலக கோப்பையை வெல்லும் என பல முன்னாள் வீரர்கள் கணித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

gavaskar predicts england will win 2019 world cup in home

வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் ஆக்ரோஷமாக ஆடிவருகிறது. அந்த அணியில் கப்டில், வில்லியம்சன், டெய்லர், லதாம், கிராண்ட் ஹோம் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். எனவே அந்த அணியும் உலக கோப்பையில் கடும் நெருக்கடி கொடுக்கும். 

gavaskar predicts england will win 2019 world cup in home

ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாமல் கடந்த ஓராண்டாக திணறிவந்த ஆஸ்திரேலிய அணி, இந்திய மண்ணில் இந்திய அணியை வீழ்த்தி புது உத்வேகத்துடன் காணப்படுகிறது. ஸ்மித் - வார்னர் இல்லாமலேயே அந்த அணி இந்திய அணியை வீழ்த்திவிட்டது. உஸ்மான் கவாஜா, ஆடம் ஸாம்பா, பாட் கம்மின்ஸ் ஆகியோர் நல்ல ஃபார்மில் அருமையாக ஆடிவருகின்றனர். எனவே ஸ்மித்தும் வார்னரும் அணிக்கு திரும்பிவிட்டால் வலுவான அணியாகிவிடும் ஆஸ்திரேலிய அணி. அதுமட்டுமல்லாமல் உலக கோப்பைக்கு அந்த அணியின் துணை பயிற்சியாளராக 2 உலக கோப்பையை வென்ற முன்னாள் கேப்டன் பாண்டிங் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே உலக கோப்பையில் ஆஸ்திரேலிய அணி சவாலான அணியாக திகழும். அந்த அணியை குறைத்து மதிப்பிட முடியாது. 

gavaskar predicts england will win 2019 world cup in home

இதற்கிடையே, வெஸ்ட் இண்டீஸ் அணியும் அபாரமாக ஆடிவருகிறது. கெய்ல், ஷாய் ஹோப், ஹெட்மயர், பிராத்வெயிட், ஹோல்டர் என அந்த அணியும் வலுவாக திகழ்கிறது. இவை தவிர தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகளும் சிறந்த அணிகள்தான். யாரும் கண்டுகொள்ளாத ஆஃப்கானிஸ்தான் அணியை குறைத்து மதிப்பிட முடியாது. அவர்கள் சிறந்த கிரிக்கெட்டை ஆடிவருகிறார்கள்.

gavaskar predicts england will win 2019 world cup in home

இவ்வாறு ஒவ்வொரு அணியுமே வலுவாக திகழும் நிலையில், இங்கிலாந்து அணிதான் கோப்பையை வெல்லும் என்று கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். 2011ல் அந்த உலக கோப்பையை நடத்திய இந்திய அணி வென்றது. 2015 உலக கோப்பையை நடத்திய ஆஸ்திரேலிய அணி அந்த கோப்பையை வென்றது. அந்த வகையில் 2019 உலக கோப்பையை நடத்தும் இங்கிலாந்து அணி இந்த முறை கோப்பையை வெல்லும். சொந்த மண்ணில் முதல் உலக கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைக்க இங்கிலாந்து அணிக்கு இது அருமையான வாய்ப்பு என கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். 

gavaskar predicts england will win 2019 world cup in home

இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் இந்திய அணி தான் வெல்லும் என கருத்து தெரிவித்துவரும் நிலையில், கவாஸ்கர் அதிரடியாக இங்கிலாந்துதான் வெல்லும் என தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios