Asianet News TamilAsianet News Tamil

ஷிகர் தவானுக்கு பதில் அவரை எடுங்க.. அந்த ஒரு விஷயத்துக்காகவே சும்மா தெறிக்கவிடுவாப்ள.. கவாஸ்கர் அதிரடி

இந்திய அணியின் பலமே டாப் ஆர்டர் பேட்டிங்கும், பவுலிங்கும் தான். அதேபோலவே டாப் ஆர்டரும் பவுலர்களும் முதல் 2 போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தனர். ரோஹித், தவான், கோலி ஆகிய மூவரில் ஒருவர் கடைசி வரை நின்றாலோ அல்லது சதமடித்தாலோ இந்திய அணியின் வெற்றி நிச்சயமாகிவிடும். 

gavaskar and gambhir picks different players in place of dhawan in world cup squad
Author
England, First Published Jun 12, 2019, 10:14 AM IST

உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக கருதப்படும் இந்திய அணி, முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று நம்பிக்கையுடன் அடுத்த போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. 

இந்திய அணியின் பலமே டாப் ஆர்டர் பேட்டிங்கும், பவுலிங்கும் தான். அதேபோலவே டாப் ஆர்டரும் பவுலர்களும் முதல் 2 போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தனர். ரோஹித், தவான், கோலி ஆகிய மூவரில் ஒருவர் கடைசி வரை நின்றாலோ அல்லது சதமடித்தாலோ இந்திய அணியின் வெற்றி நிச்சயமாகிவிடும். 

gavaskar and gambhir picks different players in place of dhawan in world cup squad

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் ரோஹித் சர்மா சதமடித்து, கடைசி வரை களத்தில் நின்று வெற்றியை தேடிக்கொடுத்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தவான் சதமடித்து அசத்தினார். இவ்வாறு இந்திய அணிக்கு எல்லாம் நன்றாக சென்றுகொண்டிருந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தவானுக்கு காயம் ஏற்பட்டிருப்பது இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் சற்று சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஐசிசி தொடர்கள் என்றாலே அடித்து நொறுக்குபவர் தவான். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் கம்மின்ஸின் பவுன்ஸரில் தவானுக்கு கையில் அடிபட்டது. உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து பேட்டிங் ஆடிய தவான், அபாரமாக ஆடி சதமடித்தார். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் ஃபீல்டிங் செய்யவில்லை. தவானின் கையை பரிசோதித்ததில் கட்டை விரலில் சிறிய அளவிலான எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. 

gavaskar and gambhir picks different players in place of dhawan in world cup squad

எனவே அவர் அடுத்த சில போட்டிகளில் ஆடமாட்டார். நாளை நடக்கவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான போட்டி மற்றும் 16ம் தேதி நடக்கவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி ஆகியவற்றில் தவான் கண்டிப்பாக ஆடமாட்டார். அதன்பின்னர் நடக்கும் ஆஃப்கானிஸ்தான், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளிலும் ஆடமாட்டார் என்றே தெரிகிறது. இந்த மாதத்தில் நடக்கும் போட்டிகளில் ஆட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. ஜூலை 2ம் தேதி நடக்கும் வங்கதேசத்துக்கு எதிரான போட்டி, அதன்பின்னர் இலங்கைக்கு எதிரான போட்டி ஆகியவற்றில் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

gavaskar and gambhir picks different players in place of dhawan in world cup squad

தவான் ஆடாததால் தொடக்க வீரராக ரோஹித்துடன் ராகுல் களமிறக்கப்படுவார். தவானுக்கு பதிலாக யார் சேர்க்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. உலக கோப்பை அணியில் இடம்பெறுவார்கள் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் மற்றும் ராயுடு ஆகிய இருவரின் பெயர்களும் அடிபடுகின்றன. பல முன்னாள் வீரர்களும் இந்த விஷயத்தில் அவரவர் கருத்தை தெரிவித்துவருகின்றனர். 

gavaskar and gambhir picks different players in place of dhawan in world cup squad

ரிஷப் பண்ட்டைத்தான் சேர்க்க வேண்டும் என முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். ராயுடுவைத்தான் சேர்க்க வேண்டும் என காம்பீர் கூறுகிறார். ஐபிஎல்லில் இருந்தே ரிஷப் பண்ட் செம ஃபார்மில் இருக்கிறார். தன்னை ஆரம்பத்திலேயே உலக கோப்பை அணியில் எடுத்திருக்க வேண்டும் என்பதை நிரூபிப்பதற்காகவே அவர் கண்டிப்பாக சிறப்பாக ஆடுவார் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 45 சராசரி வைத்திருக்கும் ராயுடு, உலக கோப்பை அணியில் இடம்பெறாதது பெரிய ஏமாற்றமே. எனவே அவரைத்தான் அணியில் எடுக்க வேண்டும் என காம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். 
 
Follow Us:
Download App:
  • android
  • ios