Asianet News TamilAsianet News Tamil

கோலி பண்ணது கொஞ்சம் கூட சரியில்ல.. கொந்தளித்த அதே வேகத்தில் அடங்கிய முன்னாள் வீரர்

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடையில் இருந்த வார்னரும் ஸ்மித்தும் தடை முடிந்ததால், உலக கோப்பையில் ஆஸ்திரேலியா அணிக்காக ஆடிவருகின்றனர். தடையிலிருந்து திரும்பி வந்தாலும் அவர்களை ரசிகர்கள் சும்மா விடவில்லை. 

england former cricketer nick compton criticized virat kohli for backing smith
Author
England, First Published Jun 12, 2019, 2:50 PM IST

விறுவிறுப்பாக நடந்துகொண்டிருந்த உலக கோப்பை தொடரில் சுவாரஸ்யமும் விறுவிறுப்பும் சற்று குறைந்துள்ளது. மழை காரணமாக அடிக்கடி போட்டிகள் ரத்தாவது, வீரர்களின் காயம் ஆகிய காரணங்களினால் உலக கோப்பை விறுவிறுப்பு குறைந்துள்ளது. 

இந்திய அணி ஆடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஸ்மித்தை கிண்டல் செய்த ரசிகர்களிடம், ஸ்மித்தை கிண்டல் செய்யாமல் கைதட்டி உற்சாகப்படுத்துங்கள் என்று கோலி சைகை காட்டியது உலகளவில் அவரை பிடிக்காதவர்களுக்குக்கூட அவர் மீது அபிப்ராயத்தை ஏற்படுத்தியது. 

england former cricketer nick compton criticized virat kohli for backing smith

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடையில் இருந்த வார்னரும் ஸ்மித்தும் தடை முடிந்ததால், உலக கோப்பையில் ஆஸ்திரேலியா அணிக்காக ஆடிவருகின்றனர். தடையிலிருந்து திரும்பி வந்தாலும், அவர்களை இங்கிலாந்து ரசிகர்கள் விடுவதாகயில்லை. பால் டேம்பரிங் விஷயத்தை சுட்டிக்காட்டி தொடர்ந்து அவர்களை ரசிகர்கள் கிண்டலடித்துவருகின்றனர். பவுண்டரி லைனில் அவர்கள் இருவரும் ஃபீல்டிங் செய்யும்போது ரசிகர்கள் கிண்டலடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

உலக கோப்பை தொடங்குவதற்கு முன்னதாகவே, ஸ்மித் மற்றும் வார்னரை நோகடிக்கும்படி ரசிகர்கள் கிண்டல் செய்ய வேண்டாம் என்று இங்கிலாந்து வீரர் மொயின் அலி கோரிக்கை விடுத்திருந்தார். ஆனாலும் ரசிகர்கள் அவர்களை சீண்டிய வண்ணமே இருந்தனர். 

england former cricketer nick compton criticized virat kohli for backing smith

இந்நிலையில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான போட்டியில், இந்திய அணியின் பேட்டிங்கின்போது பவுண்டரி லைனில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த ஸ்மித்தை இந்திய ரசிகர்கள் கிண்டலடித்தனர். உடனடியாக அந்த ரசிகர்கள் இருந்த ஸ்டேண்டை நோக்கி, கிண்டல் செய்யாமல் ஸ்மித்தை கை தட்டி உற்சாகப்படுத்துங்கள் என்று கோலி சற்று கோபமாக ரசிகர்களை நோக்கி செய்கை செய்தார். கேப்டன் கோலியின் கோரிக்கைக்கு ரசிகர்கள் செவி மடுத்தது ஒருபுறமிருக்க, கோலியின் செய்கை கோடான கோடி ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டது. 

கோலியை உலகமே பாராட்டிக்கொண்டிருக்க, இங்கிலாந்து முன்னாள் வீரர் நிக் காம்ப்டன் மட்டும் கோலியை விமர்சித்தார். ஸ்மித் மற்றும் வார்னரை கிண்டல் செய்யாதீர்கள் என்று ரசிகர்களை கட்டுப்படுத்த விராட் கோலிக்கு எந்த உரிமையும் கிடையாது என்று கடுமையாக சாடியிருந்தார். 

england former cricketer nick compton criticized virat kohli for backing smith

கோலியை பாராட்டித் தள்ளிக்கொண்டிருக்கும் ரசிகர்கள், நிக் காம்ப்டனின் கருத்தை கண்டுகொள்ளவும் இல்லை, ரசிக்கவும் இல்லை. மாறாக அவருக்கு எதிராக கோலியை ஆதரிக்கத்தான் செய்தனர். இதையடுத்து நிக் காம்ப்டன் டுவிட்டரில் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios