Asianet News TamilAsianet News Tamil

தலைமை நீதிபதி உள்ளிட்ட 5 நீதிபதிகளுக்கும் z+ பாதுகாப்பு... அய்யோத்தி வழக்கில் அதிரடி..!!

கடந்த 2010-ம் ஆண்டு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதாவது சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மூன்று அமைப்புகளும் சமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் அது... ஆனால், அலகாபாத் கோர்ட்டு தீர்ப்பை மூன்று அமைப்புகளும் ஏற்கவில்லை. அதைத் தொடர்ந்து டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பாக மேல் முறையீடு செய்யப்பட்டது. 14 அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அப்பீல் மனுக்கள் அனைத்தும் வொவ்ஒன்றாக விசாரிக்கப்பட்டது. 

z+ protection give to supreme  court 5 justice  ayothi case
Author
Delhi, First Published Nov 9, 2019, 10:46 AM IST

அய்யோத்தி தீர்ப்பு வழங்க உள்ள தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதிகள் எஸ்.ஏ பாப்டே, அசோக் பூஷன், சந்திரசூட், அப்துல் நசீர் ஆகியோருக்கு z+ அளவிலான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.  இது தொடர்பான அறிவப்பு அதிகாரப்பூர்வமான வெளியாகி உள்ளது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமி பகுதியில் சுமார் 2.77 ஏக்கர் நிலம் சர்ச்சைக்குரியதாக இருந்தது. இந்த நிலத்தை சன்னி வக்பு போர்டு, நிர்மோகி அகாரா, ராம்லல்லா ஆகிய மூன்று அமைப்புகளும் சொந்தம் கொண்டாடி வந்தன.

z+ protection give to supreme  court 5 justice  ayothi case

 இது தொடர்பாக ஆரம்பத்தில் பல ஆண்டுகளாக அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. கடந்த 2010-ம் ஆண்டு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதாவது சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மூன்று அமைப்புகளும் சமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் அது... 
ஆனால், அலகாபாத் கோர்ட்டு தீர்ப்பை மூன்று அமைப்புகளும் ஏற்கவில்லை. அதைத் தொடர்ந்து டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பாக மேல் முறையீடு செய்யப்பட்டது. 14 அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அப்பீல் மனுக்கள் அனைத்தும் வொவ்ஒன்றாக விசாரிக்கப்பட்டது. 

இதற்கிடையே சமரச பேச்சு வார்த்தை நடத்தி இந்த பிரச்சினைக்கு தீர்வு காண ஏற்பாடுகளும் நடந்து வந்தன. அதன்படி ஓய்வு பெற்ற சுப்ரீம்கோர்ட்டு மூத்த நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா, வாழும் கலை அமைப்பாளர் ஸ்ரீ ஸ்ரீரவிசங்கர், மூத்த வக்கீல் ஸ்ரீராம்பஞ்சு ஆகிய 3 பேர் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டது. இடிக்கப்பட்ட பாபர் மசூதி குறித்து 

z+ protection give to supreme  court 5 justice  ayothi case

இந்த குழு இந்துக்களையும், முஸ்லிம்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. 4 மாதங்களாக நடந்த சமரச பேச்சுவார்த்தை இறுதியில் வெற்றி பெறாமல் தோல்வியில் முடிந்தது... இதனையடுத்து அயோத்தி பிரச்சினை மேல்முறையீடு வழக்குகளை விரைந்து முடிக்க சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்தது. அதன்படி கடந்த ஆகஸ்டு 6-ம் தேதி முதல் தினசரி இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது

. இதைத்தொடர்ந்து,கடந்த  40 நாட்களாக நடைபெற்ற வாதப் பிரதிவாதங்கள் அக்டோபர் 16-ம் தேதியுடன் நிறைவடைந்திருந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மற்றும் நீதிபதிகள் எஸ்.ஏ பாப்டே, அசோக் பூஷன், சந்திரசூட், அப்துல் நசீர் ஆகியோருக்கு z+ அளவிலான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.  இது தொடர்பான அறிவப்பு அதிகாரப்பூர்வமான வெளியாகி உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios