Asianet News TamilAsianet News Tamil

தலைமை கழகத்துக்கு தாறுமாறா வந்த சின்ன கேப்டன்... கொடி நாளில் தொண்டர்கள் முன்னிலையில் செம்ம கெத்து!!

தேமுதிகவின் கொடிநாள் விழா அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. இதில் விஜய பிரபாகரன், சுதீஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Vijayaprabakaran celebrate flag day at head office
Author
Chennai, First Published Feb 12, 2019, 1:09 PM IST

புரட்சிகலைஞர் விஜயகாந்த் ரசிகர் மன்றம் அமைத்து, அதன் மூலம் பல இலட்சக்கணக்கான மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து, நமது ரசிகர் மன்றம் எல்லா தரப்பு மக்களுக்கும் உதவும் வகையில் நற்பணி இயக்கமாக செயல்பட்டு வந்த வேளையில், தொண்டர்களின் விருப்பத்திற்கு இணங்க 2000 ஆம் ஆண்டு புரட்சிதீபம் தாங்கிய மூவர்ண கொடியை, ரசிகர் நற்பணி மன்றத்திற்காக பிப்ரவரி 12 ஆம் நாள் நான் அறிமுகபடுத்தினேன். 

இந்த கொடியை தமிழகம் முழுவதும், பட்டி தொட்டி எங்கும் பறக்கவிட்டு சாதனை நிகழ்த்தியது நமது ரசிகர் நற்பணி மன்றங்களும், அதன்பிறகு கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் தான் என்பதில் பெருமைகொள்கிறேன். 

2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் செப்டம்பர் 14 ஆம் தேதி உதயமானபோது, நமது நற்பணி மன்ற கொடி கழக கொடியாக மாற்றப்பட்டது. எதோ மூன்று வர்ணங்களை கொண்டு உருவாக்கப்பட்டது மட்டும் அல்ல நமது கழக கொடி. அந்த வர்ணங்களுக்கு பிறகு நமது கழகத்தின் கொள்கையும், தமிழகத்தில் நிகழவேண்டிய மாற்றத்தையும் குறிப்பதாகும்.  மஞ்சள் நிறம்
கருமை நிறம், புரட்சிதீபம் மூன்றுக்குமான விளக்கத்தை சொல்லி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

Vijayaprabakaran celebrate flag day at head office

இந்நிலையில், இன்று காலை சென்னையிலுள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கொடி நாள் விழா அனுசரிக்கப்பட்டது. இந்த விழாவில் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தேமுதிக கட்சிக்கு கொடியை கொடியேற்றினார். அவருடன் கட்சியின் இனைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் கழக முன்னை நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

கட்சி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து கொடி நாள் அன்று விஜயகாந்த் தலைமைக்கு கழகத்தில் கொடியேற்றுவார். ஆனால் இந்த வருஷம் அவர் சிகிச்சைக்காக வெளிநாட்டில் இருப்பதால் விஜயகாந்த்தின் மகன் விஜயபிரபாகரன் தொண்டர்களுக்கு உற்சாகப்படுத்த தலைமைக்கு கழகத்திற்கு வந்து கொடியேற்றினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios