Asianet News TamilAsianet News Tamil

அதிமுகவோ, திமுகவோ அப்புறம் பார்த்துக்கலாம்... ஜெ., பிறந்தநாளில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் விஜயகாந்த்..!

அதிமுகவும், திமுகவும் கூட்டணிக்கு விஜயகாந்தை இழுக்க வியூகம் வகுத்து வரும் நிலையில் ஜெயலலிதா பிறந்தநாளான வரும் 24ம் தேதி மக்களவை தேர்தலின் முதல் அடியை எடுத்து வைக்க இருக்கிறார். 

Vijayakanth starts playing the jayalalitha birthday
Author
Tamil Nadu, First Published Feb 22, 2019, 1:37 PM IST

அதிமுகவும், திமுகவும் கூட்டணிக்கு விஜயகாந்தை இழுக்க வியூகம் வகுத்து வரும் நிலையில் ஜெயலலிதா பிறந்தநாளான வரும் 24ம் தேதி மக்களவை தேர்தலின் முதல் அடியை எடுத்து வைக்க இருக்கிறார்.

 Vijayakanth starts playing the jayalalitha birthday

மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது பாஜக தரப்பில் மத்திய அமைச்சரும், தமிழக பொறுப்பாளருமான பியூஸ் கோயல் அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் முதல்வர், துணை முதல்வர் முன்னிலையில் கூட்டணி உருவானது. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டது. தேமுதிகவுடனும் அதிமுக கூட்டணி உடன்பாடு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சீட் எண்ணிக்கையில் ஏற்பட்ட இழுபறி காரணமாக ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை.

 Vijayakanth starts playing the jayalalitha birthday

கூட்டணி தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பேச தேமுதிக தரப்பில் சுதீஷ், பார்த்தசாரதி, அழகாபுரம் மோகன்ராஜ் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு நேற்று காலை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடத்தியது. அதைத் தொடர்ந்து, விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியது. இந்தநிலையில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டுக்கு சென்றார். அங்கு சுமார் 30  நிமிடத்துக்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவரை தங்களது கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். Vijayakanth starts playing the jayalalitha birthday

இந்நிலையில் கூட்டணி குறித்து தெளிவான முடிவுக்கு தேமுதிக வராத நிலையில், மக்களவை தேர்தலில் போட்டியிட 24-ம் தேதி முதல் விருப்ப மனு வழங்கப்படும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மார்ச் 6ம் தேதி மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. விருப்ப மனு கட்டணம் பொது தொகுதிக்கு ரூ.20,000, தனித் தொகுதிக்கு ரூ.10,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios