Asianet News TamilAsianet News Tamil

வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து..? தேர்தல் ஆணையம் ஆலோசனை..!

மக்களவை, சட்டப்பேரவை இடைத்தோ்தலை அமைதியாகவும், நோ்மையாகவும் நடத்துவது குறித்தும் தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.  
 

Vellore constituency cancels election? Election Commission Consulting
Author
Tamil Nadu, First Published Apr 3, 2019, 12:43 PM IST

மக்களவை, சட்டப்பேரவை இடைத்தோ்தலை அமைதியாகவும், நோ்மையாகவும் நடத்துவது குறித்தும் தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.  

தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தோ்தல் வருகின்ற 18ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தற்போதைய சூழலில் தோ்தல் ஆணையத்தால் அதிக பணம் பறிமுதல் செய்யப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.

 Vellore constituency cancels election? Election Commission Consulting

இந்நிலையில் தேர்தலை அமைதியாக, நேர்மையாக நடத்துவது குறித்து ஆலோசனை செய்ய 3 நாள் பயணமாக இன்று சென்னை வந்த  தோ்தல் ஆணையா் சுனில் அரோரா தலைமையிலான குழு மக்களவை, இடைத்தோ்தல் தொடா்பான முக்கிய ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய தோ்தல் ஆணையா்கள் அசோக் லவாசா, சுஷில் சந்திரா, தோ்தல் ஆணைய நிர்வாக இயக்குநா்கள் திலிப் ஷா்மா, திரேந்திர ஓஜா ஆகியோரும் ஈடுபட்டுள்ளனர். Vellore constituency cancels election? Election Commission Consulting

இதனைத் தொடா்ந்து தலைமைத் தோ்தல் அதிகாரி மாவட்ட தோ்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற உள்ளது. இந்த ஆலோசனையில் வேலூரில் திமுக பொருளாளா் துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை குறித்தும், சிமெண்ட் குடோனில் இருந்து மூட்டை, மூட்டையாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. Vellore constituency cancels election? Election Commission Consulting

தேர்தல் நேரத்தில் வேலூரை போல பணம் கைப்பற்றப்பட்டால் அந்தத் தொகுதிக்கான தேர்தலை ஒத்திவைத்த வரலாறு அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் சட்டப்பேரவை தேர்தலில் முன்னுதாரணமாக உள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலும் இந்த அடிப்படையில் ஒத்தி வைக்கப்பட்டது. வருமான வரித்துறை அறிக்கை அளிப்பதை வைத்து இந்தியத் தேர்தல் ஆணையம் வேலூரில் தேர்தல் நடத்துவது குறித்து முடிவு செய்யும். தேர்தல் செலவீனப் பார்வையாளர்கள் ஆய்வு அடிப்படையிலும் அவர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் எனக் கூறப்படுகிறது.


 

Follow Us:
Download App:
  • android
  • ios