Asianet News TamilAsianet News Tamil

காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் !! உறுதியானது திமுக – காங்கிரஸ் கூட்டணி !! இன்று அறிவிக்கின்றனர் மு.க.ஸ்டாலின் – முகுல் வாஸ்னிக் !!

திமுக – காங்கிரஸ் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து ராகுல் காந்தியுடன் திமுக எம்.பி.கனிமொழி, இரண்டாவது நாளாக நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுளளது. இதையடுத்து இனறு சென்னையில் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் ஆகியோர் அறிவிக்கின்றனர். இதற்காக முகுல வாஸ்னிக் சென்னை வந்துள்ளார்.
 

today aanounce dmk and congress allaince
Author
Delhi, First Published Feb 20, 2019, 9:00 AM IST

அ.தி.மு.க.வை  தொடர்ந்து, தி.மு.க.வும் கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசி, தொகுதி பங்கீடு விவரங்களை அறிவிக்க இருக்கிறது. தி.மு.க. கூட்டணியில், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன.

today aanounce dmk and congress allaince

தேசிய கட்சியான காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் தங்களுக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு வழங்க வேண்டிய தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் எந்தெந்த தொகுதிகள் என்று இறுதி முடிவு எடுப்பதற்காக, டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தியை, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின் பேரில், கனிமொழி எம்.பி. நேற்று முன்தினம் சந்தித்து பேசினார்.

today aanounce dmk and congress allaince
இந்த சந்திப்பில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கிய, தொகுதி பங்கீடு, தொகுதிகள் குறித்த செயல் திட்டம் பற்றி கனிமொழி விளக்கி கூறினார். இந்தநிலையில் மீண்டும் ராகுல்காந்தியை கனிமொழி எம்.பி. சந்தித்து பேசினார். நேற்று மாலை 5 மணி தொடங்கிய பேச்சுவார்த்தை இரவு 7 மணிவரை நீடித்தது. 

இந்த பேச்சுவார்த்தையின்போது, தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு தொகுதியும் என 10 தொகுதிகள் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது..

today aanounce dmk and congress allaince
இதைத் தொடர்ந்து கனிமொழி எம்.பி. நேற்று இரவு சென்னை திரும்பினார்.  இதையடுத்து டெல்லியில் இருந்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் இன்று சென்னை வந்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச உள்ளனர். இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் 10 இடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார். இதற்காக  தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர்முகுல் வாஸ்னிக் சென்னை வந்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios