Asianet News TamilAsianet News Tamil

ஐயோ... இவ்வளவு வாரிசுகள் போட்டியா..? இதுதான் தமிழக அரசியல்வாதிகளின் யோக்கியதை..!

தேர்தலில் வேட்பாளராக களமிறங்க பணபலம், தனிப்பட்ட செல்வாக்கு, வாரிசு என களமிறங்கினாலும் போட்டியிட ஒரு வேட்பாளருக்கு 30 கோடி முதல் 150 கோடிகள் வரை செலவு செய்யவேண்டியிருக்கிறது. அந்த வகையில் யார் யார் எப்படி சீட்டை பிடித்தார்கள்? என்கிற அவர்களின் யோக்கியதைகளை பற்றி தெரிய வந்துள்ளது. 

This is the story of Tamil politicians
Author
Tamil Nadu, First Published Apr 15, 2019, 6:36 PM IST

தேர்தலில் வேட்பாளராக களமிறங்க பணபலம், தனிப்பட்ட செல்வாக்கு, வாரிசு என களமிறங்கினாலும் போட்டியிட ஒரு வேட்பாளருக்கு 30 கோடி முதல் 150 கோடிகள் வரை செலவு செய்யவேண்டியிருக்கிறது. அந்த வகையில் யார் யார் எப்படி சீட்டை பிடித்தார்கள்? என்கிற அவர்களின் யோக்கியதைகளை பற்றி தெரிய வந்துள்ளது. 

This is the story of Tamil politicians
திருவள்ளூர்:-
கட்சியில் படிப்படியாக முன்னேறிய வேணுகோபாலுக்கு சீட் கொடுத்துள்ளது அதிமுக. ஆனால், வேறு தொகுதியை சேர்ந்த நாமக்கல்
ஜெயகுமாரை இங்கு வேட்பாளராக களமிறக்கி இருக்கிறது காங்கிரஸ். ராகுல் காந்தியுடன் நேரடியாக தொடர்பில் இருக்கும்
செல்வாக்கை பயன்படுத்தி சீட்டை வாங்கி இருக்கிறார் ஜெயக்குமார்.


வடசென்னை: -
முழுக்க முழுக்க வாரிசு என்கிற காரணத்தினால் திமுகவில் சீட்டை பிடித்திருக்கிறார் என்.வி.கலாநிதி. திமுகவில் கழகப் பொருளாளர்
பதவியில் இருந்து ஒதுங்கியே விட்டார் முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி. சிறந்த மருத்துவராக கட்சிக்கு தொடர்பில்லாமல்
பணியாற்றி வந்த கலாநிதிக்கு சீட் கொடுத்து வாரிசு அரசியலை துளிர்த்து எழ வைவைத்தது திமுக. அவரை எதிர்த்து தேமுதிகவை
சேர்ந்த வேட்பாளர் மோகன்ராஜ் களமிறக்கப்பட்டுள்ளார். இவர் பணபலமோ, கட்சியில் செல்வாக்கு மிக்கவரோ இல்லை.  மக்கள் நீதி
மய்யம் கட்சியை சேர்ந்த போலீஸ் அதிகாரி மவுரியா ஐபிஎஸ் என்கிற ஒரே காரணத்திற்காக களமிறக்கப்பட்டுள்ளார். 

மத்திய சென்னை:-
முரசொலி மாறனின் மகனும், கருணாநிதியின் பேரனும், மு.க.ஸ்டாலினின் மைத்துனருமான  தயாநிதிமாறன் தென்சென்னை
வேட்பாராக போட்டியிடுகிறார். முழுக்க முழுக்க வாரிசு அரசியல், பணபலம், குடும்ப செல்வாக்கு என்கிற அடிப்படையில் அவருக்கு சீட்
வழங்கப்பட்டுள்ளது. இதே தொகுதியில் பலமுறை போட்டியிட்டு வருகிறார் தயாநிதிமாறன். அவரை எதிர்த்து போட்டியிடும் பாமகவை
சேர்ந்த சாம்பால் செல்வாக்கு மற்றும் பணபலத்தான் சீட்டை பிடித்துள்ளார். குடும்பத்தை சேர்ந்தவர்களை தவிர மற்றவர்கள் யாரும்
அங்கிள் என்று அழைப்பதை விரும்பமாட்டார் ராமதாஸ். ஆனால், சாம்பால் உரிமையாக ராமதாஸை அங்கிள் என்றே
அழைப்பார். காரணம் சாம்பாலின் தந்தையும், ராமதாஸும் கல்லூரி கால நண்பர்கள்.

சாம்பால் பெரும் செல்வந்தர் என்கிற காரணத்தால் சீட்டை பெற்றுள்ளார். ஆக, முழுக்க முழுக்க செல்வாக்கு, வாரிசு, குடும்ப நெருக்கம்
ஆகிய அனைத்து காரணங்களாலும் இந்தத் தொகுதி வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.  This is the story of Tamil politicians


தென்சென்னை:- 
முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியன் மகளும், முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் சகோதரியும், கனிமொழியின் தோழியுமான
தமிழிசை தங்கப்பாண்டியன் எளிதாக சீட்டை பெற்று விட்டார். தங்க பாண்டியன் மறைவுக்கு பிறகு அரசியலில் சம்பந்தமில்லாமல்
இருந்த ஸ்பிக் தொழிற்சாலையில் கெமிக்கல் எஞ்ஜினியராக வேலை பார்த்து வந்த அவரது மகன் தங்கம் தென்னரசுவை அரசியல்
களத்திற்கு கொண்டு வந்து வாரிசு அரசியலை புகுத்தினார் கருணாநிதி. உளவுத்துறை ஐஜியாக இருந்து கருணாநிதி வீட்டிலேயே தவம்
கிடந்த ஐஜி சந்திரசேகரின் மனைவி இந்த தமிழச்சி தங்கபாண்டியன். அந்த வகையில் சீட்டை தமிழச்சி தங்கபாண்டியனுக்கு வழங்கி
இருக்கிறது திமுக.  

அதேபோல், வாரிசு என்கிற முறையில் ஜெயலலிதா இருந்த காலத்திலேயே தென்சென்னை தொகுதியில் சீட்டை பிடித்து வெற்றி பெற்ற
அமைச்சர் ஜெயகுமாரின் மகன் இந்த முறையும் அதிமுக வேட்பாளராக சீட்டை பிடித்துள்ளார். பணபலம், கட்சியில் அப்பாவின்
செல்வாக்கை வைத்து களமிறக்கப்பட்டுள்ளார் ஜெயவர்தனன். அமமுக சார்பில் போட்டியிடும் இசக்கி சுப்பையாவும் சாதரண ஆள்
இல்லை. நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்களுக்கு அதிபதி. டி.டி.வி.தினகரனுக்கு மிகவும் நெருக்கமானவர். ஆக இந்தத் தொகுதியின்
வேட்பாளர்கள் பணபலம், கட்சியில் உள்ள செல்வாக்கை வைத்தே சீட்டை பெற்றுள்ளனர். 

This is the story of Tamil politicians
காஞ்சிபுரம்:- 
தனித் தொகுதி என்பதால் காஞ்சிபுரம் வேட்பாளார் தேர்வில் பெரிய அளவில் பணபலமோ, செல்வாக்கோ இல்லாதவர்கள்
நிறுத்தப்பட்டுள்ளனர். இங்கு வாரிசு அரசியலும் இல்லை. கடந்த முறை இதே தொகுதியில் வெற்றிபெற்ற மரகதம் குமரவேலுக்கு
அதிமுக சீட் கொடுத்துள்ளது. 

ஸ்ரீபெரும்புதூர்: -
முழுக்க முழுக்க குடும்ப அரசியல் நடத்தும் டி.ஆர்.பாலு தனது செல்வாக்கால் மீண்டும் இதே தொகுதியில் போட்டியிடுகிறார்.
விடாப்படியாக தான் எம்.பியாக இருக்க வேண்டும் என்கிற காரணத்தால் அந்தப்பதவியை விட்டுக் கொடுக்க மனம் இன்றி
வாழ்க்கையின் கடைசி வரை எம்.பி பதவியில் இருக்க வேண்டும் என்பதை கொள்கையாகக் கொண்டவர் டி.ஆர். பாலு. பல்லாயிரம்
கோடிகளை பதவி மூலம் சம்பாதித்து இருந்தாலும், மேலும் பதவி மூலம் சம்பாதிக்க வேண்டும் என்கிற ஒரே நோக்கம் கொண்டவர்
டி.ஆர்.பாலு. மகனை அரசியலில் களமிறக்கி மன்னார்குடி எம்.எல்.ஏ ஆக்கி விட்டு மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் எம்.பியாக களமாடி
வருகிறார். இவரை எதிர்த்து நிற்கும்  பாமகவை சேர்ந்த வைத்திலிங்கமும் சளைத்தவரல்ல. பெரும் கோடீஸ்வரர். இவரது பணபலத்தை
நம்பியே களமிறக்கி உள்ளது பாமக. ஆக மொத்தத்தில் பணபலம், செல்வாக்கு மிகுந்தவர்களே இந்தத் தொகுதிக்கு வேட்பாளராகி
உள்ளனர். 

This is the story of Tamil politicians
அரக்கோணம்:- 

இந்தத் தொகுதிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் பணபலம், செல்வாக்கை பற்றி சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.
தமிழகத்தின் மிகப்பெரும் கோடீஸ்வரரான ஜெகத்ரட்சகனை களமிறக்கி இருக்கிறது திமுக. பணத்தை வாரி இரைப்பவர். இந்த ஒரே
காரணத்தால் சீட் ஜெகத்ரட்சகனுக்கு போய் விட்டது. பாமகவில் களமிறங்கி உள்ள ஆர்.கே.மூர்த்தியும் சாமானியரல்ல. ராமதாஸ்
குடும்பத்திற்கு நெருக்கமானவர். ஏற்கெனவே மத்திய அமைச்சராக இருந்தவர். அதேபோல் அமமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர்
கோபால் மகன் பார்த்திபன் களமிறக்கப்பட்டுள்ளார். இவரும் வாரிசு என்கிற அடிப்படையிலேயே களமிறக்கப்பட்டுள்ளார்.

This is the story of Tamil politicians

வேலூர்:- 
வாரிசு அரசியலின் உச்சமாக பார்க்கப்படுகிறது இந்தத் தொகுதி. கட்சிக்கு சம்பந்தமே இல்லாத, 5 முதல் 10 முறை மட்டுமே கட்சி
நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட கதிர் ஆனந்த் களமிறக்கப்பட்டுள்ளார். அவர் களமிறக்கப்பட ஒரே காரணம் அவர் திமுக பொருளாளர்
துரைமுருகன் மகன். அவர் களமிறக்கப்பட்டது உட்கட்சியினருக்கே பிடிக்கவில்லை. அதிமுக கூட்டணி சார்பில் களமிறக்கப்பட்டுள்ளவர்
பழைய பண முதலை புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம். பெரும் பணக்காரர் என்கிற ஒரே காரணத்திற்காக வேலூர் தொகுதியை
ஏ.சி.சண்முகத்திற்கு ஒதுக்கி விட்டது அதிமுக. பணத்தை தாண்டி ஏ.சி.சண்முகத்திற்கு இங்கு சீட் கொடுக்கப்பட்டு இருக்குமா
எனக்கேட்டால் சந்தேகமே. முன்னாள் அமைச்சர் என்கிற முறையில் பாண்டுரங்கனை களமிறக்கி இருக்கிறது அமமுக. 

This is the story of Tamil politicians
கிருஷ்ணகிரி:- 

ணபலமும், மக்கள் செல்வாக்கும் நிறைந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமிக்கு சீட் கொடுத்திருக்கிறது அதிமுக. திமுக
கூட்டணியில் செல்லக்குமார் அவரை எதிர்த்து போட்டியிடுக்கிறார். வடகிழக்கு மாநில முன்னாள் முதல்வராக இருந்தவரின் உறவினர்
இந்த செல்லக்குமார். அந்த செல்வாக்கை வைத்து சோனியாகாந்தி மூலம் சீட்டைப் பிடித்து விட்டார். 

தருமபுரி:- 
முழுக்க முழுக்க வாரிசுகளை இறக்கி இருக்கிறது பாமக. ராமதாஸ் தனது மகன் அன்புமணியை களமிறக்கி உள்ளார். பணபலம்
செல்வாக்கு, வாரிசு அரசியல்தான் இதற்கு காரணம். திமுக சார்பில் களமிறக்கப்பட்டுள்ள வி.என்.செந்தில்குமாரும் பெரும்
செல்வந்தரே. இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள்.  அன்புமணியை போல மிகப்பெரும் பணக்காரர் இந்த செந்தில் குமார்.
ஆகையால் இங்கு  கடும் போட்டி நிலவுகிறது. அதேபோல் அமமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் பழனியப்பனும்
சாமனியர் அல்ல. இவருக்கும் மக்கள் செல்வாக்கு, பணபலம் எல்லாம் சரிக்கு சரியாக இருக்கிறது. 
  

சேலம்: -

வேட்பாளர் தேர்வில் நிச்சயமாக இது மாறுபட்ட தொகுதி. திமுக வேட்பாளராக களமிறங்கும் பார்த்திபன் சோலை கவுண்டர் குடும்பத்தை சேர்ந்தவர். அதிமுக வேட்பாளரான சரவணன் முன்னாள் அமைச்சர் விஜயலட்சுமி பழனிசாமி குடும்பத்தை
சேர்ந்தவர்.  இரு குடும்பத்தினரும்  பங்காளிகள். உறவினர்கள்...  தனித்தனியாக தங்களது குடும்பத்தை முன்னேற்றிக் கொண்டவர்கள்.
திமுக ஆசியால் பார்த்திபன் சீட்டை பிடித்துள்ளார். வாரிசு அரசியல், குடும்ப அரசியல் இருந்தாலும்  நார்மல் தொகுதியாக சேலம்
பார்க்கப்படுகிறது. வாரிசு, பணபலத்தை தாண்டி இரு வேட்பாளர்களுக்கும் அவர்கள் சார்ந்த கட்சியே செலவு செய்வது தனிக்கதை. 
 

நாமக்கல்:-    

இந்தத் தொகுதியில் பிரதான வேட்பாளர்கள் இல்லை. வாரிசு செல்வாக்குக் கொண்ட வேட்பாளர்களும் இல்லை. சின்ராஜ் தொழிலதிபர்
என்கிற ஒரே காரணத்திற்காக சீட் கொடுத்துள்ளது திமுக. அதிமுக வேட்பாளர் காளியப்பனும் செல்வாக்கு மிக்கவரோ கட்சியில்
கோலோச்சுபவரோ இல்லை. 


ஈரோடு:-

திமுக கூட்டணியில் களமிறங்கும் கணேசமூர்த்தி ஏற்கெனவே எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அந்த வகையில் மதிமுகவில்
இருக்கும் செல்வாக்கை வைத்து சீட் வாங்கிக் கொடுத்து விட்டார் வைகோ. அதிமுக வேட்பாளர் வெங்கு மணிமாறனும்
சாதரணமானவரே. இங்கு வாரிசும் இல்லை. பணபலமும் இல்லை. 

திருப்பூர்: -
இந்தத் தொகுதியில்  இந்திய கம்யூனிஸ்டு கட்சி அரைச்ச மாவையே அரைத்து வருகிறது. தொடர்ந்து சீட்டை பிடித்து யாருக்கும்
கொடுக்காமல் இறுதிவரை தானே வேட்பாளராகி ஜெயிக்க வேண்டும் என்கிற நோக்கில் பலமுறை போட்டியிட்ட சுப்புராயனே மீண்டும்
இங்கு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து மருத்துவர் எம்.எஸ்.என். ஆனந்தன் அதிமுக சார்பில் களமிறங்குகிறார். 2011 சட்டமன்ற
பொதுத்தேர்தலில் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட்டு 78 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இந்திய அளவில்
சாதனை படைத்தவர். ஆகையால் அந்த செல்வாக்கில் மீண்டும் அதிமுக அவரை இறக்கி இருக்கிறது. 

கோவை: -
இதே தொகுதியை யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் விடாப்பிடியாக சீட்டை பெற்றுக் கொண்டுள்ளார் பாஜகவை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன். மோடியின் நெருக்கமும் இவருக்கு சீட் கிடைக்க முக்கிய காரணம். அதேபோல் எதிரணியில் களமிறங்கும் கொடிபிடித்து காய்ந்து தேய்ந்து நொந்துபோன பலரும் காத்திருக்க விடாப்படியாக தனது 69 வது வயதிலும் சீட்டை விட்டுக் கொடுக்காமல் மேலிடத்து செல்வாக்கை வைத்து இங்கு களமிறங்குகிறார் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த நடராஜன். மக்கள் நீதிமய்யம் சார்பில் களமிறங்கும் டாக்டர் மகேந்திரன் தனக்கு 170 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக தேர்தல் ஆணையத்திடம் கணக்கு காட்டி இருக்கிறார். இவரது பணபலமே சீட் கிடைக்கக் காரணம்.

 This is the story of Tamil politicians

நீலகிரி: -

5 முறை இந்தத் தொகுதியில் களமிறங்கி வரும் ஆ.ராசா உடும்புப்பிடியாக இந்தத் தொகுதியை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளார். இவரைத் தவிர இந்தத் தொகுதியில் சீட் கிடைக்கும்  என யாரும் நினைத்துக் கூடப்பார்க்கமுடியாது. பணபலமும், கட்சியில் செல்வாக்கும் நிறைந்தவர்
இந்த அ.ராசா. மத்திய அமைச்சராகவும் திமுக தலைமைக்கு நெருக்கமாகவும் இருப்பதால் சீட் இவருக்கு கிடைத்துள்ளது. இந்தத்
தொகுதியில் இவரைத் தவிர பிற கட்சி வேட்பாளர்களை பற்றி பெரிதாக சொல்லிக் கொள்ள ஒன்றும் இல்லை.  

கரூர்:- 

வாழ்நாள் முழுவதும் இந்தத் தொகுதிக்கு தானே அதிமுக வேட்பாளர் என அசைக்க முடியாத நம்பிக்கையில் இருப்பவர் தம்பிதுரை.
வயதாகி விட்டாலும் பதவி ஆசை அவரை விடவே இல்லை. மக்களிடம் ஓட்டுக்கேட்டு செல்லும்போது  வயோதிகத்தால் எரிச்சலாகி
கத்துகிறார். பலமுறை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். மக்களவை துணை சபாநாயகராகவும் இருப்பவர். ஆகையால் கட்சியின்
செல்வாக்கையும், பணபலத்தை நம்பியும் சீட் கொடுத்துள்ளது அதிமுக. எதிர் தரப்பான காங்கிரஸ் கட்சியோ தம்பிதுரைக்கு எதிரானவரை
களமிறக்கி உள்ளது. பலமுறை தோல்வி கண்ட, மக்களின் நம்பிக்கையை இழந்த ஜோதிமணி தனக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி
ராகுலிடம் உள்ள தொடர்பால் சீட்டை பெற்றுள்ளார். வட்டம், ஒன்றியம், மாவட்டம் என அக்கட்சியில் உள்ள அனைத்து நிர்வாகிகளும்
ஜோதிமணியை வேட்பாளராக்கினால் தீக்குளிப்போம் என மிரட்டினர். அதையும் மீறி அவரை களமிறக்கி உள்ளது காங்கிரஸ் கட்சி.This is the story of Tamil politicians

பொள்ளாச்சி:-
பலமில்லாத வேட்பாளராக சண்முகசுந்தரத்தை இறக்கி இருக்கிறது திமுக. கே.என்.நேருவின் சிபாரிசில் வந்த சீட் அது. கே.என்.நேரு
செலவு செய்வார் என்கிற நம்பிக்கையில் சீட் கொடுக்கப்பட்டுள்ளது.  எதிர்த்து நிற்கும்  அதிமுக வேட்பாளர் மகேந்திரன் கட்சி, மக்களிடம் நெருக்கமானவர். தொகுதி மக்களிடம் செல்வாக்கு பெற்றவர். அங்குள்ள கேந்திர வித்தியாலயா பள்ளிக்காக தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை
இலவசமாகக்  கொடுத்தவர், மக்களிடம் நன்மதிப்பை பெற்றவர். இரண்டாவது முறையாக எம்.பியாகி விடும் ஆசையில் இருக்கிறார்
மகேந்திரன். 

This is the story of Tamil politicians
திண்டுக்கல்: -
இந்தத் தொகுதியில் வரிசு அரசியலும், பணபலமும், செல்வாக்கும் இல்லாத நபர்களையே அனைத்துக் கட்சியினரும் வேட்பாளர்களாக நிறுத்தி
உள்ளனர்.  ஆனாலும், ஐ.பெரியசாமியில் ஆதரவாளர் திமுக வேட்பாளரான வேலுச்சாமி. அதேபோல் பாமக சார்பில் களமிறக்கப்பட்டுள்ள
ஜோதிமுத்து  கட்சிக்கு புதியவரே. 

திருச்சி: -
வாழ்நாளில் கடைசி நிமிடம் வரை ஏதாவது ஒருபதவியில் இருந்தேன் ஆகவேண்டும் என்கிற குறிக்கோளுடன் இருக்கும் திருநாவுகரசர்
இந்தத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.  26 வயதில் சபாநாயகர் ஆனவர். இப்போது 69 வயதிலும் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கி இருக்கிறார். எங்கே அடித்தால் எங்கே விழும் என்பதை நன்கு அறிந்தவர்.ம் ஆகையால் சரியான இடத்தில் தட்டி சீட்டை பெற்றுவிட்டார். கட்சியில் தனக்கு உள்ள செல்வாக்கு, பணபலத்தால் வேட்பாளராகி இருக்கிறார் திருநாவுக்கரசர்.  அதேபோல் எதிர்த்து நிற்கும் தேமுதிக வேட்பாளர் டாக்டர் இளங்கோவன் மருத்துவராக இருந்தாலும் எளியவர். அமமுக வேட்பாளர் சாருபாலா தொண்டமான் பெரும் குடும்பத்தை சேர்ந்தவர். பணபலமிக்கவர். அந்த செல்வாக்கை வைத்து களமிறக்கப்பட்டுள்ளார் சாருபாலா.This is the story of Tamil politicians

ஆரணி: -
காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் டாக்டர் விஷ்ணு பிரசாத் களமிறக்கப்பட்டுள்ளார்.
இவரும் வாரிசு வேட்பாளரே. பணபலமும் மிக்கவர். அதிமுக சார்பில் மீண்டும் ஏழுமலை களமிறக்கப்பட்டுள்ளார்.

பெரம்பலூர் : -
தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் திடீரென திமுக கூட்டணியில் இணைந்து தனது பணபலத்தால் பெரம்பலூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார் பாரிவேந்தர். சிறிய கட்சியான ஐஜேகேவுக்கு திமுக சீட் கொடுத்ததில் ஒன்றும் பெரிய ஆச்சர்யமில்லை. காரணம் பாரிவேந்தரிடம் கொட்டிக்கிடக்கும் பணம் அப்படி.! அவரை எதிர்த்து நிற்கும் சிவபதி  அதிமுகவில் தனக்கு உள்ள செல்வாக்கை வைத்து சீட் வாங்கி விட்டார். பணபலத்திலும், சாதி பலத்திலும் சீட் வாங்கிக் களமிறங்கி உள்ளார் சிவபதி.

கள்ளக்குறிச்சி: -

இந்தத் தொகுதி வாரிசு அரசியலுக்கு உட்சபட்ச சாட்சி. பாவம் இத்தொகுதி மக்கள். பெரும்பாவம் இப்பகுதியில் உள்ள திமுக
கட்சியினர். கட்சிக்காக வெயிலிலும், மழையிலும் கஷ்டப்பட்டு உழைத்து சோர்ந்து போய் கிடக்கிறார்கள். 35 ஆண்டுகளாக தனக்கு பதவி
கிடைக்கும் எனக் காத்திருந்த செல்வநாயகம் போன்றோர் காத்திருக்க, சென்னையில் டாக்டர் தொழில் செய்து வந்த தனது  மகன் கவுதம சிகாமணியை நேரடியாக அரசியலில் களமிறக்கி, கள்ளக்குறிச்சியில் சீட் வாங்கிக் கொடுத்து விட்டார் பொன்முடி. அவரை எதிர்த்து போட்டியிடும்
எல்.கே.சுதீஷ், விஜயகாந்த் மைத்துனர் என்கிற ஒரே காரணத்திற்காக சீட்டை பிடித்து விட்டார். ஆக இந்தத் தொகுதியில் முழுக்க
முழுக்க அரசியல் வாரிசுகள் வேட்பாளராகி  உள்ளனர். This is the story of Tamil politicians

விழுப்புரம்:-
இது தனித்தொகுதி என்பதால் இங்கு வாரிசு அரசியல் இல்லை. ஆனாலும், விசிக சார்பில் போட்டியிடும் ரவிக்குமார் தனது செல்வாக்கை
பயன்படுத்தி வேட்பாளராகி விட்டார். விசிகவில் எத்தனையோ தலைவர்கள் காத்திருக்க, ஏற்கெனவே எம்.எல்.ஏ.,வாக  பதவி சுகம் அனுபவித்து விட்ட ரவிகுமார் களமிறக்கப்பட்டுள்ளது உறுத்தலாக இருக்கிறது. அதேபோல், எதிர்த்தரப்பில் களமிறக்கப்பட்டுள்ள வடிவேல் ராவணன் வேறு
ஆட்கள் இல்லாத காரணத்தால் வழியின்றி விழுப்புரத்தில் அதிமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். 

திருவண்ணாமலை: -
இந்தத் தொகுதியில் பணத்தை மட்டுமே நம்பி வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். வாரிசு அரசியல் இல்லை என்றாலும் முதல் முறையாக மக்களவை வேட்பாளராக களமிறங்கி இருக்கிறார் முன்னாள் அமைச்சரான அக்ரி கிருஷ்ணமூர்த்தி. அரசு அதிகாரி தற்கொலை விவகாரத்தில் சிக்கி கட்சியை விட்டு நீக்கப்பட்டு மீண்டும் கட்சிக்கு வந்தவர். அவரது செல்வாக்கால் சீட் கிடைத்துள்ளது. அதேபோல் திமுகவில் இருந்து முதன் முறையாக களமிறக்கப்பட்டுள்ளார் அண்ணாதுரை. இவர்களுக்கு சளைக்காமல் ஈடுகொடுத்து பணத்தை வாரி இரைத்து வருகிறார் அமமுக வேட்பாளரான ஞானசேகர். 

கடலூர்: -
கடலூரில் திமுக சார்பில் களமிறக்கப்பட்டுள்ள ஸ்ரீரமேஷ் பெரும் தொழில் அதிபர். கட்சியில் உழைத்த பலர் இருக்க சம்பந்தமில்லாதவருக்கு சீட் கொடுத்துள்ளது திமுக. அதேபோல் குடும்ப உறவால் சீ பெற்றுள்ளார் கோவிந்தசாமி. முன்னாள் எம்.எல்.ஏவான கோவிந்தசாமி அன்புமணி ராமதாஸின் சொந்த மைத்துனர். ஆக, குடும்ப செல்வாக்கால் சீட் பெற்றுள்ளார் கோவிந்தசாமி.

தஞ்சாவூர்:-
ஸ்டாலினுக்கு அறவே பிடிக்காத பழனிமாணிக்கத்திற்கு சீட் கொடுத்திருக்கிறது திமுக. தனது பணபலத்தால் அங்கே சீட்டை  பிடித்துள்ளார் பழனிமாணிக்கம். அதேபோல் தாமக சார்பில் போட்டியிடும் எம்.ஆர்.நடராஜன் தமாகா முன்னாள் எம்.எல்.ஏ என்.ஆர்.ரங்கராஜனின் வாரிசு. ஆக வாரிசு மற்றும் பணபலத்தால் இந்தத் தொகுதி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  

மயிலாடுதுறை: -
திமுக சார்பில் ராமலிங்கமும், அதிமுக சார்பில் ஆசைமணியும் போட்டியிடுகின்றனர். இங்கு வாரிசு வேட்பாளரோ, பணபலம்
மிகுந்தவரோ களமிறக்கப்படவில்லை.

நாகபட்டினம்: 
கட்சித் தலைமையிடம் உள்ள செல்வாக்கால் விடாப்பிடியாக மீண்டும் இதே தொகுதியில் களமிறங்கி இருக்கிறார் இந்திய கம்யூனிஸ்ட்
கட்சியைச் சேர்ந்த செல்வராஜ். தனித் தொகுதி என்பதால் பெரும் பண செல்வாக்கு இல்லாத சரவணன் அதிமுக தரப்பில்
களமிறக்கப்பட்டுள்ளார்.  

சிவகங்கை:-
இங்கும் வாரிசு அரசியல் உச்சம் தொட்டுள்ளது. மத்திய அமைச்சராக இருந்து சிவகங்கை தொகுதியை பிறருக்கு விட்டுத்தராத
ப.சிதம்பரம் இப்போது அந்தத் தொகுதியை தனது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு பெரும்பாடு பட்டு பலத்த இழுபறிக்கு இடையில்
வாங்கிக் கொடுத்துள்ளார். அதேபோல் பாஜக வேட்பாளரான ஹெச்.ராஜா பலமுறை தேர்தலில் நின்று தோற்றாலும் பாஜக
தலைமையிடம் தனக்குள்ள செல்வாக்கை வைத்து சீட்டை வாங்கி விட்டார். அமமுகவில் உள்ள தேர்போகி பாண்டி தனது
சமூகத்தினரின் வாக்குகளை நம்பி சீட் பெற்றுள்ளார்.  

ராமநாதபுரம்:- 
முழுக்க முழுக்க பணபலத்தை நம்பியே இந்தத் தொகுதியில் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். முன்பு அதிமுகவில் இருந்த
நயினார் நாகேந்திரன் தனது சொந்த ஊரான திருநெல்வேலியில் இருந்து பாஜக சார்பாக இந்தத் தொகுதியில் போட்டியிடுகிறார். இவரது
பணபலமும் செல்வாக்கும் அப்படி.! அதேபோல் திமுக கூட்டணியில் போட்டியிடும் இந்தி யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் நவாஸ்கனி பெரும் கோடீஸ்வரர். எஸ்.டி கூரியர் நிறுவத்தின் முதலாளி. இந்திய முஸ்லீம் லீக் கட்சியில் பலர் இருக்க, பணபலத்தால் திடீரென இவர் சீட்டை பிடித்து விட்டார். இதனால், பலரும் கோபப்பட்டு கட்சியை விட்டு வெளியேறி வருகின்றனர்.  

This is the story of Tamil politicians
சிதம்பரம்:-

தனித்தொகுதியான இங்கு திமுக கூட்டணி சார்பில் விசிக தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். கட்சித்தலைவர் என்கிற
செல்வாக்கில் அவர் வேட்பாளராகி விட்டார்.  அதிமுக சார்பில் போட்டியிடும் சந்திரசேகர் பணபலமோ அரசியல் செல்வாக்கு
பின்புலமோ இல்லாதவர். 


மதுரை: -
துளியும் கட்சியில் இணைந்து பணியாற்றாத ராஜன் சத்யன் அதிமுக வேட்பாளராகி இருக்கிறார். காரணம் அவரது அப்பா ராஜன்செல்லப்பா
அதிமுக எம்.எல்.ஏ.. பணபலமும் அரசியல் செல்வாக்கும் ராஜன் சத்யாவை மதுரை தொகுதி வேட்பாளராக்கி விட்டது. அவரை எதிர்த்து
போட்டியிடும் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன், பணபலமோ, அரசியல் செல்வாக்கோ இல்லாதவர். அமமுக சார்பில்
போட்டியிடும் டேவிட் அண்ணாதுரை முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகன். அந்த ஒரே காரணத்திற்காக அமமுக
அவரை களமிறக்கி உள்ளது. 

திருநெல்வேலி:-
இங்கும் வாரிசு வேட்பாளரை இறக்கி இருக்கிறது அதிமுக. பி.ஹெச்.பாண்டியனின் மகன் மனோஜ் பாண்டியன் அதிமுக வேட்பாளர்.
பெரும் செல்வந்தர். அரசியல் செல்வாக்கை வைத்து சீட்டை பிடித்து விட்டார் பி.ஹெச்.பாண்டியன். திமுக வேட்பாளர் ஞானதிரவியம்
அரசியல் பின்புலமோ பணபலமோ அற்றவர்.This is the story of Tamil politicians

விருதுநகர்: -
காங்கிரஸ் கட்சியில் தனது தனிப்பட்ட செல்வாக்கை பயன்படுத்தி மீண்டும் இதே தொகுதியில் போட்டியிடுகிறார் மாணிக் தாகூர். பணபலமும் அதற்கு முக்கிய காரணம். தேமுதிக சார்பில் போட்டியிடும் அழகர்சாமி எளியவர். 

தேனி: -
இங்கு போட்டியிடும் மூன்று முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்களும் வாரிசுகளே . ஆகையால் தமிழகத்தில் வாரிசு வேட்பாளர்கள் கோலோச்சும் முக்கிய தொகுதியாக தேனி உள்ளது. துணை முதல்வர் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் அதிமுக சார்பிலும், ஈ.வி.கே.எஸ். சம்பத் மகன் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் காங்கிரஸ் சார்பிலும், தங்கபாண்டியன் மகன் தங்க தமிழ்செல்வன் அமமுக சார்பிலும் வாரிசு வேட்பாளராக களமிறங்கின்றனர்.  இவர்கள் மூவருமே தங்களது கட்சியில் தங்களுக்கு உள்ள செல்வாக்கை வைத்தே சீட்டுகளை பெற்றுள்ளனர். பணபலத்திலும் மூவரும் சளைத்தவர்களல்ல.

தென்காசி:-
இறுதி வரை தன்னுடன் பதவி ஒட்டிக்கொண்டு இருக்கவேண்டும் என்கிற கொள்கையை பிடித்துக் கொண்டிருப்பவர் டாக்டர் கிருஷ்ணசாமி இந்தத் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரது கட்சியில் பக்லர் இருந்தாலும், தன்னையே முன்னிலைப்படுத்திக் கொண்டு வேட்பாளராக களமிறங்கி உள்ளார். பலமுறை தோற்றாலும் துவண்டு விடாமல் தனது செல்வாக்கை காட்டி வேட்பாளராகி விட்டார். அதேபோல் அவரை எதிர்த்து போட்டியிடும் தனுஷ் குமார் முன்னாள் எம்.பி குமாரின் மகன். வாரிசு என்கிற அடிப்படையில் இங்கு திமுகவால் களமிறக்கப்பட்டுள்ளார் தனுஷ்குமார்.

கன்னியாகுமரி: -
கன்னியாகுமரி தொகுதியில் பலமுறை வேட்பாளராக போட்டியிட்டு சில முறை வென்று இருமுறை மத்திய அமைச்சராக இருந்தவர் பொன்ராதாகிருஷ்ணன். பாஜக தலைமையிடம் செல்வாக்கு மிக்கவர். பெரும் பணக்காரர். உயர்மட்டத்தில் தனக்கான செல்வாக்கை வைத்து சீட்டைபிடித்து விட்டார் பொன்னார். காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வசந்தகுமார் தற்போது நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ. இருந்தும் பலத்தால் கன்னியாகுமரியில் சீட்டை பிடித்துவிட்டார். தற்போதைய நிலையில் தேர்தல் ஆணையத்தில் காட்டப்பட்டுள்ள சொத்துக் கணக்குப்படி காஸ்ட்லி வேட்பாளர் வசந்தகுமார் தான். ஆக இருவேட்பாளர்களுமே செல்வாக்காலும், பணபலத்தாலும் இந்த தொகுதிக்கு வேட்பாளராகி விட்டனர்.This is the story of Tamil politicians

தூத்துக்குடி: -

கருணாநிதியின் மகள். முக.ஸ்டாலினின் சகோதரி. இந்த இரு காரணங்கள் போதாதா தூத்துக்குடியில் வேட்பாளராக கனிமொழி
களமிறங்க..? ஏற்கெனவே ராஜ்யசபா எம்பியாகி இருக்கிறார். பணபலம் இவரிடம் இல்லையென்றால் தான் ஆச்சர்யம். தன் குடும்பத்தில்
இருந்து வாரிசை வேட்பாளராக்கி விட்டார் ஸ்டாலின். அதேபோல அரசியல் வாரிசுதான் தமிழிசை சவுந்தரராஜனும். ஆனால் அவரது
அப்பா காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவர் பாஜகவில் இருந்து படிப்படியாக முன்னேறி தமிழக தலைவராகி இப்போது தூத்துக்குடியில்
போட்டியிடுகிறார்.    

இந்த உள்ள வேட்பாளர்களை புகழ்வதோ, இகழ்வதோ நமது நோக்கமல்ல. புதியவர்களுக்கும், சாமியர்களுக்கும் அரசியல் கட்சிகள்
வாய்ப்பளிக்க வேண்டும். ஜனநாயகம் என்பது எல்லோருக்கும் எல்லாமும் என்கிற நோக்கம் கொண்டது. அதுதான் உண்மையான
ஜனநாயகமும் கூட. ஆனால் அரசியல் கட்சிகள் வாரிசுகளுக்கும், செல்வந்தர்களுக்கும் சீட் கொடுத்து களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.  
100 கோடி ரூபாய்க்கு குறைவாக வைத்திருப்பவர்கள் தேர்தலில் நிற்க முடியாத நிலை உருவாகி விட்டது. இது மிகப்பெரிய ஆபத்திற்கு
நாட்டை இட்டுச்செல்லும்.

50 கோடி செலவு செய்து வெற்றிபெறுவபவர்களின் நோக்கம் வெற்றிபெற்ற பின் நூறுகோடி ரூபாயை திரும்ப எடுக்க வேண்டும்
என்பதுதான் நோக்கமாக இருக்கும். அப்படி எடுக்கப்படுவது யார் பணம்? மக்கள் பணம் இல்லையா? வடமாநிலத்தில் மத்திய அமைச்சர்
ஒருவர் தனது மகனுக்கு சீட் கொடுத்த உடன் வாரிசு அரசியல் கூடாது என தானே முன் வந்து தனது மத்திய அமைச்சர் பதவியை
ராஜினமா செய்து விட்டுப்போனரே... அப்படிப்பட்டவர்கள்தான் நேர்மையான அரசியல்வாதிகள்.  அதைவிடுத்து வாரிசுகளுக்கு சீட்
கோடிகோடியாக சுருட்டுவது என யார் எத்தனை முறை காரித்துப்பினாலும் துடைத்துவிட்டு காரியத்தில் கண்ணாய் இருக்கும் நமது
அரசியல்வாதிகள் எங்கே..?   

Follow Us:
Download App:
  • android
  • ios