Asianet News TamilAsianet News Tamil

ரஜினிக்கு இதுதான் மத்திய அரசின் கடைசி விருது..? இத்தனை விருதுகளை வாங்கியிருக்கிறாரா?

தனக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது, ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி  விருதுகளை அறிவித்துள்ள மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். 

This is the last government award of Rajini?
Author
Tamil Nadu, First Published Nov 2, 2019, 12:31 PM IST

ரஜினிகாந்த் இதுவரை ஆறு முறை தமிழக அரசு திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளார். அதில் நான்கு முறை சிறந்த நடிகருக்கான விருதும், இரண்டுமுறை சிறந்த நடிகருக்கான சிறப்பு விருதினையும் பெற்றுள்ளார். சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார். 1984 ஆம் ஆண்டு  தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார்.  1989 ஆம் ஆண்டு எம்.ஜி. ஆர் விருதும் அவரை கவுரவித்தது.

 This is the last government award of Rajini?

2000 ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு பத்ம பூசண் விருதும், 2016 ஆம் ஆண்டு நாட்டின் உயரிய குடிமை விருதுகளில் இரண்டாவதான பத்ம விபூசண் விருதும் வழங்கி கௌரவப்படுத்தியது. இந்தியத் திரைப்படத்துறையின் ஆளுமைக்கான விருது 45 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப்பட்டது.This is the last government award of Rajini?

1984-நல்லவனுக்கு நல்லவன்    1985-ல் ஸ்ரீ ராகவேந்திரா 1991- தளபதி    1992-ல் அண்ணாமலை, 1995    பாட்ஷா, முத்து ஆகிய படங்களில் நடித்து தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதுகளை பெற்றுள்ளார். ஆனந்த விகடன் 2017 ஆம் ஆண்டு கபாலி பட நடிப்புக்காக 'சிறந்த நடிகர்' விருதை வழங்கியுள்ளது. 1993    வள்ளி படத்திற்காக சிறந்த கதாசிரியர் விருதையும் வென்றுள்ளார் ரஜினிகாந்த். இந்நிலையில் வாழ்நாள் சாதனையாளர், ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி விருதுகளையும் வழங்கி மத்திய அரசு ரஜினியை கவுரவித்துள்ளது.  அவர் விரைவில் அரசியலில் களமிறங்க உள்ள நிலையில் இனி படங்களை குறைத்துக் கொள்வார் என்று கூறப்படுகிறது. This is the last government award of Rajini?

எதிர் அரசியலில் அவர் ஈடுபட்டால்  மத்திய அரசிடம் இருந்து பெறப்போகும் ரஜினியின் கடைசி விருது இதுவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios