Asianet News TamilAsianet News Tamil

போக்குவரத்தில் பலே ஏற்பாடு செய்யும் தமிழக அரசு...! புதிய திட்டம் தீட்டும் எடப்பாடி...!

The Tamil Nadu government has decided to buy 2000 new buses with beds.
The Tamil Nadu government has decided to buy 2000 new buses with beds.
Author
First Published Jan 22, 2018, 3:44 PM IST


படுக்கை வசதியுடன் கொண்ட 2000 புது பேருந்துகள் வாங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 

தமிழகம் முழுவதும் பேருந்து கட்டணம் 2 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், பேருந்து கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி போராட்டம் நடத்தப்போவதாகவும் திமுக உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன.

பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து பொதுமக்கள் பல இடங்களில் சாலை மறியல் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், மாணவ-மாணவிகளும் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் குதித்துள்ளனர். 

கடந்த சனிக்கிழமை அன்று பேருந்துகளின் கட்டண உயர்வு அமலுக்கு வந்த நிலையில் 20 ஆம் தேதி மட்டும் ரூ.8 கோடி கூடுதலாக வசூலாகி உள்ளது.

இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போதுபேருந்து கட்டண உயர்வை அடுத்து, அரசு போக்குவரத்து கழகங்களில் தினமும் சராசரியாக ரூ.20 கோடி வசூலாகிறது. வருவாய்க்கும், செலவுக்கும் உள்ள இடைவெளி நாளொன்றுக்கு ரூ.9 கோடியாக இருந்தது. கட்டண உயர்வுக்குப் பிறகு, கடந்த 20 ஆம் தேதி மொத்த வசூல் 28 கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது கட்டண உயர்வால் வசூல் தொகை ரூ.8 கோடி அதிகரித்துள்ளது.

கட்டண உயர்வால் கிடைத்த உண்மையான வசூல் தொகை எவ்வளவு என்பது ஒரு வாரத்துக்குப் பிறகே தெரிய வரும் என்றும் அவர்கள் கூறினர்.

இந்நிலையில், படுக்கை வசதியுடன் கொண்ட 2000 புது பேருந்துகள் வாங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது

Follow Us:
Download App:
  • android
  • ios