Asianet News TamilAsianet News Tamil

பெட்டி சாவி மோடி கையிலதான் இருக்கு!! தம்பிதுரை அதிர்ச்சி பேச்சு

மத்திய அரசை காலையில் ஏழே முக்காலுக்கு திட்டுவதும், பின் எட்டு பத்துக்கு புகழ்ந்து பேசுவதும் பிறகு லஞ்ச் முடிச்சு மூணு நாற்பத்து ஒன்றுக்கு மீண்டும் மோடியை வம்புக்கிழுப்பதுமாக ஒரே வாரத்தில் ஏகப்பட்ட அவதாரங்கள் எடுத்து அந்நியன் விக்ரமுக்கே செம்ம சவால் கொடுக்கிறார் தம்பிதுரை.

thambithurai Shock talk
Author
Chennai, First Published Nov 21, 2018, 3:24 PM IST

மத்திய அரசை காலையில் ஏழே முக்காலுக்கு திட்டுவதும், பின் எட்டு பத்துக்கு புகழ்ந்து பேசுவதும் பிறகு லஞ்ச் முடிச்சு மூணு நாற்பத்து ஒன்றுக்கு மீண்டும் மோடியை வம்புக்கிழுப்பதுமாக ஒரே வாரத்தில் ஏகப்பட்ட அவதாரங்கள் எடுத்து அந்நியன் விக்ரமுக்கே செம்ம சவால் கொடுக்கிறார் தம்பிதுரை. 

கரூரில் உட்கார்ந்தபடி டெல்லி நோக்கி, தம்பிதுரை செய்யும் கில்லியான அரசியல் லாபிகளை ஏஸியாநெட் தமிழ் இணையதளம் துளியும் மிஸ் பண்ணாமல் பதிவு செய்து கொண்டே வருகிறது தொடர்ச்சியாக. இதுவரையில் டெல்லி நோக்கிய அரசியலில் அவர் மேற்கே போயி, கிழக்கால திரும்பி, ரைட்ல இண்டிகேட்டர் போட்டு பிறகு ஸ்ட்ரெய்ட்டா போனதை நாம் கிட்டத்தட்ட லைவ்வாகவே பதிவு செய்துள்ளோம். thambithurai Shock talk

இந்நிலையில் கஜா புயலால் அ.தி.மு.க.வின் நிர்வாக ஆளுமை அநியாயத்துக்கு சேதப்பட்டு கிடக்கும் நிலையில் பி.ஜே.பி.யை நோக்கி ஒரு சீண்டல் வாக்கியத்தை தட்டிவிட்டிருக்கிறார் தம்பிதுரை. அதாவது கஜா புயல் நிவாரண உதவி கேட்டு பிரதமரை சந்திக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் மையம் கொள்ளும் நிலையில் தம்பிதுரையோ “பெட்டி சாவி, மத்திய அரசின் கையில் உள்ளது. அவங்க பெட்டியை திறந்தால்தான் நிவாரணம் கிடைக்கும்.” என்று கூறியுள்ளார். thambithurai Shock talk

தம்பியின் இந்த தடாலடி பேச்சை அரசியல் விமர்சகர்கள் கொதிப்புடன் இரண்டு விதங்களில் பார்க்கிறார்கள். ஒன்று: நிவாரண உதவிகள் முறையாக கிடைக்கவில்லை என்று ஒட்டுமொத்தமாக அ.தி.மு.க. மீது பாதிக்கப்பட்ட டெல்டா மக்களும், அவர்களுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த தமிழகமும் கோபம்  கொண்டு நிற்கிறது. இந்த ஆத்திரத்தை அப்படியே மத்திய அரசான பி.ஜே.பி.யை நோக்கி திருப்பிவிட தம்பிதுரை செய்திருக்கும் தந்திரம்! என்கிறார்கள்.

 thambithurai Shock talk

இரண்டு: சோத்துக்கு வழியில்லாமல், மானம் காக்க மாற்றுத் துணி இல்லாமல் பல்லாயிரம் மக்கள் அவதிப்படும் நிலையில் ஒரு எம்.பி. இப்படி பேசுவதென்பது சர்வாதிகார தோரணை! என்கிறார்கள். ஆக மொத்ததில் எதையோ எதிர்பார்த்து தம்பிதுரை பேசியது, அ.தி.மு.க.வை நோக்கிய மக்களின் கோபத்தை இன்னும் அதிகமாக ஆக்கியுள்ளதே எதார்த்தம். கூடவே தம்பி துரை செய்யும் இந்த ‘மடைமாற்று அரசியல்’ பற்றி உடனடியாக டெல்லிக்கு தகவல் கொடுத்திருக்கும் தமிழக பி.ஜே.பி. நிர்வாகிகள் ‘இவருக்கு ஒரு செக் வைக்காம விடக்கூடாது’ என கருவியுள்ளனர். ஆக எய்த தம்பிதுரையையே தாக்கியுள்ளது ‘பெட்டி - சாவி’ பூமராங்.

Follow Us:
Download App:
  • android
  • ios