Asianet News TamilAsianet News Tamil

முதலில், எங்கள் மீதுள்ள வழக்குகளை திரும்ப பெறுங்க..!! முதல்வரிடம் ஆவேசம் காட்டிய ஆசிரியர்கள்..!!

மேலும், 17 பி நடவடிக்கை என்பது இரண்டுகள் ஊதிய நிறுத்தமும் பதவி உயர்வின்போது பதவியுயர்வும் வழங்கப்படாது என்பது அரசுப்பணியாளர் விதிகளில் ஒன்றாகும். அரசுப்பணியில் விதிகளுக்குப் புறம்பாக நடத்தல், பாலியல் வழக்கு ,வன்கொடுமை உள்ளிட்ட தகாத சம்பவங்களில் ஈடுபடுவோரின் மீது எடுக்கப்படும் நடவடிக்கையாகும். உரிமைப்போராட்டத்தில் ஈடுபடுவது அடிப்படைச்சுதந்திரம். போராட்டத்தில் ஈடுபட்டதால் பதவி உயர்வு மறுக்கப்படுவது என்பது தவறானது.

teachers association demand to cm to revock case from them
Author
Chennai, First Published Oct 18, 2019, 3:49 PM IST

ஆசிரியர்-அரசு ஊழியர்கள் போராட்டம் உரிமைக்கான போராட்டம் என்பதால் அவர்கள் மீது பதிந்துள்ள வழக்குகளை  திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. புதிய ஓய்வூதியம் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட ஒருங்கிணைந்த ஜாக்டோ-ஜியோ,ஜாக்டோஜியோ கிராப் அமைப்புகள் கடந்த நான்காண்டுகளாக தொடர்ந்து அரசினை   வலியுறுத்தி பல்வேறு நிலைகளில் போராடி வருகின்றோம். இது ஆசிரியர் அரசு ஊழியர்களின் உரிமைகளுக்காகவும் மாணவர்களின் நலனுக்காகவும் அரசுக்கு அழுத்தம் தரவே பலவிதமான போராட்டங்களை நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டோம். 

teachers association demand to cm to revock case from them

போராட்டத்தின் விளைவாக  துறைரீதியான நடவடிக்கை எடுத்தும் பல வழக்குகளும் பதியப்பட்டுள்ளது. அரசின் செயல்திட்டங்களை கடைக்கோடி குடிமகனுக்கும் எடுத்து செல்வது ஆசிரியரும் அரசு ஊழியர்களே என்பதை கருத்தில்கொண்டு அவர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள துறைரீதியான நடவடிக்கைகளை கருணை உள்ளத்தோடு கைவிடும்படி மாண்புமிகு முதல்வர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கேட்டுக்கொள்கிறது.  மேலும், 17 பி நடவடிக்கை என்பது இரண்டுகள் ஊதிய நிறுத்தமும் பதவி உயர்வின்போது பதவியுயர்வும் வழங்கப்படாது என்பது அரசுப்பணியாளர் விதிகளில் ஒன்றாகும். அரசுப்பணியில் விதிகளுக்குப் புறம்பாக நடத்தல், பாலியல் வழக்கு ,வன்கொடுமை உள்ளிட்ட தகாத சம்பவங்களில் ஈடுபடுவோரின் மீது எடுக்கப்படும் நடவடிக்கையாகும். 

teachers association demand to cm to revock case from them

உரிமைப்போராட்டத்தில் ஈடுபடுவது அடிப்படைச்சுதந்திரம். போராட்டத்தில் ஈடுபட்டதால் பதவி உயர்வு மறுக்கப்படுவது என்பது தவறானது. அது 17 பி   பெற்றவர்களுக்கான தண்டனை. மேலே குறிப்பிட்ட செயலுக்கானது. ஆகவே, ஒரு சிலரின் தவறான வழிகாட்டுதலினால் போராட்ட வடிவங்கள் மாறியிருக்கலாம்.ஆசிரியர்-அரசு ஊழியர்களின் நலன்கருதி எடுக்கப்பட்ட துறைரீதியான17 பி உள்ளிட்ட நடவடிக்கையினை தாயுள்ளத்தோடு ரத்துசெய்து ஆசிரியர் பதவி உயர்வு இடமாறுதல் கலந்தாய்வு நடத்திட ஆவன செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் முதலமைச்சரை வலியுறுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios