Asianet News TamilAsianet News Tamil

தமிழக அரசியலில் திடீர் திருப்பம்... திமுக கூட்டணியில் கமல்ஹாசனா?

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் கமல் சேருவது குறித்து மு.க.ஸ்டாலின், ராகுல் முடிவு செய்ய வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தமிழக மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

Tamilnadu Politics... Kamal Hassan in DMK Alliance
Author
Chennai, First Published Nov 15, 2018, 3:59 PM IST

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் கமல் சேருவது குறித்து மு.க.ஸ்டாலின், ராகுல் முடிவு செய்ய வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தமிழக மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார். Tamilnadu Politics... Kamal Hassan in DMK Alliance

நேரு பிறந்த நாளை முன்னிட்டு ராயபுரத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்து கொண்டார். முன்னதாக அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது. நடிகர் ரஜினிகாந்தின் பேச்சு இரட்டைவேடம் போடுவது போல இருக்கிறது. அவர் முதல் நாள் பேசியது சொந்தக்கருத்து. மறுநாள் குருமூர்த்தியை பார்த்து விட்டு பேசியிருக்கிறார்.

 Tamilnadu Politics... Kamal Hassan in DMK Alliance

ரஜினிகாந்த் என்னுடைய நண்பர் என்ற முறையில் அவர் கட்சி ஆரம்பிக்க மாட்டார் என்பது எனக்கு தெரியும். ஒருவேளை கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் இருந்தால், தயவு செய்து கட்சி ஆரம்பிக்க வேண்டாம் என்று நான், அவருக்கு அறிவுரை கூறுவேன். மோடிக்கு நோபல் பரிசு தர வேண்டும் என்ற உண்மையை கண்டிபிடித்த தமிழிசைக்குத்தான் நோபல் பரிசு முதலில் தர வேண்டும். கமல்ஹாசனுடன் கூட்டணி வைப்பது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி முடிவு செய்ய வேண்டும். கமல் மதச்சார் பின்மையில் நம்பிக்கை உள்ளவராக இருக்கின்றார்.

 Tamilnadu Politics... Kamal Hassan in DMK Alliance

 தமிழகத்தில் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவது மிகவும் வேதனை அளிக்கிறது. இதில் யார் குற்றவாளியாக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். ரபேல் ஒப்பந்தத்தை பொறுத்தவரை முறைகேடுகள் நடந்திருப்பதால்தான் உச்சநீதிமன்றமே ரபேல் தொடர்பான ஆவணங்களை ராணுவ அதிகாரிகளே கொண்டு வர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. Tamilnadu Politics... Kamal Hassan in DMK Alliance

ஜெயலலிதா இல்லாததால் அமைச்சர்கள் ஆளாளுக்கு பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆட்டம் பாட்டம் என கூத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மதச்சார்பற்ற சக்திகள் ஒன்று சேர்ந்துள்ளது. அது தேர்தலுக்காக அல்ல. மதசார்பற்ற நாடாக இந்த நாடு நீடிக்க வேண்டும். நாட்டின் ஒருமைப்பாடு கெட்டு விடக்கூடாது என்ற நோக்கத்திற்காக. இவ்வாறு அவர் கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios