Asianet News TamilAsianet News Tamil

டோக்கன் கட்சிகளுக்கு ரொம்ப ஏமாற்றமா இருக்குமே !! அமமுகவை கிழித்து தொங்கவிட்ட தமிழிசை !!

திருவாரூர் தொகுதி இடைத் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை, டோக்கன் கொடுத்து ஓட்டு வாங்கும் கட்சிகளுக்கு இது பெரிய ஏமாற்றம் என்றும் அமமுகவை மறைமுகமாக கிண்டல் செய்துள்ளார்.

tamilisai press meet abour thiruvarur by election
Author
Chennai, First Published Jan 7, 2019, 12:35 PM IST

திருவாரூர் தொகுதிக்கு வரும் 28 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. 6 மாதத்தில் தேர்தல் நடத்த வேண்டுமென விதிகளின் படி தேர்தல் ஆணையம் இந்த தேர்தலை அறிவித்தது.

ஆனால் கஜா புயல் பாதிப்பினால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து கட்சிகளின் வேண்டுதல்களையும் மாவட்ட தேர்தல் அதிகாரியின் களநிலவர அறிக்கையின்படி தேர்தலை ஒத்திவைத்தது ,

இது குறித்து  கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை, திருவாரூர் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. புயலுக்குப்பின்பு அங்கே தங்கி மருத்துவ நிவாரண பணி செய்த அனுபவத்தில் சொல்கிறேன் திருவாரூர் மக்களுக்கு இப்போதைய தேவை தேறுதல் தான், தேர்தல் அல்ல,அவர்கள் வாழ்வை மீட்டெடுப்பதுதான் தேவை, ஓட்டெடுப்பு அல்ல,தேர்தல் ஆணையத்திற்கு நன்றி என தெரிவித்தார்.

tamilisai press meet abour thiruvarur by election

சில கட்சிகள் வேட்பாளர்களை அறிவிக்க காட்டிய வேகத்தை நிவாரண பணிகள் செய்வதற்கு காட்டவில்லை, டோக்கன் கொடுத்து ஓட்டு வாங்க காத்திருந்த ஊழல் கட்சிகளுக்கு வேண்டுமானால் தேர்தல் நடக்காதது ஏமாற்றம் அளிக்கலாம் என தமிதுசை கிண்டல்க தெரிவித்தார்..

ஆனால் மக்கள் நிவாரணம் பெற வேண்டும் என்பதே கள நிலவரம். டெல்லியிலே தேர்தல் ஆணையத்திடம் தேர்தலை ஒத்திவைக்க வழக்கு தொடுத்து விட்டு இங்கே கூட்டணி கட்சிக்கு திருவாரூரில் ஆதரவு என்று இரட்டை வேடம் போடும் கம்யூனிஸ்டுகள் வழக்கம் போல் எல்லாவற்றுக்கும் பாஜகவையும்,  பிரதமர் மோடியையும் குறை சொல்லும் குரல்கள். ஆனால் போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும் நம் களப்பணி பாராளுமன்ற தேர்தல் நோக்கி தொடரட்டும் என்றும் அவர் தெரிவித்தார்..

Follow Us:
Download App:
  • android
  • ios