Asianet News TamilAsianet News Tamil

உயிரே போனாலும் அதிகாரத்துக்கு வந்தே ஆகணும்... தாறுமாறான வெறியில் கைகோர்த்த ஸ்டாலின், ராகுல், நாயுடு கூட்டணி!

ரஜினிகாந்த் சொன்னது போல் ‘பத்து பேர் ஒரு ஆளை எதிர்த்து சண்டை போட வர்றாங்கன்னா, உண்மையில் யார் பலசாலி?’ என்றுதான் யோசிக்க தோன்றுகிறது. அதேவேளையில் ‘ஒரு திருடன் அகப்பட்டால், ஊரே சேர்ந்து அடிக்கும். ஒத்த ஆளு என்பதால் திருடன் யோக்கியவானாகிட முடியுமா?’ என்று இதற்கு லாஜிக்காய் எதிர்கேள்வி கேட்கிறார்கள். யார் பலசாலி, யார் திருடன்? என்பதை தொடர்ந்து கவனிப்போம்...

Stalin, Rahul and Naidu alliance
Author
Chennai, First Published Dec 17, 2018, 1:15 PM IST

முரண்பட்ட பசுக்களாக தி.மு.க., காங்கிரஸ், திரிணமுல், தெலுங்கு தேசம், மார்க்சிஸ்ட் என்று அனைத்து கட்சிகளும் ஆளுக்கொரு திசையில் மேய்ந்து கொண்டிருந்தன. ஆனால் குஜராத்தின் சிங்கமான பிரதமர் மோடியின் அதிரடி அதிகார போக்கு இவர்கள் அத்தனை பேரையும் இன்று ஒரே மேடையில் நின்று அவருக்கு எதிராக தெறிக்க விட்டிருப்பதுதான் தேசிய அரசியலின் டிரெண்டின் நியூஸ். Stalin, Rahul and Naidu alliance

ஆந்திர முதல்வர் நாயுடுவின் முயற்சியால் கடந்த சில வாரங்களாக மோடிக்கு எதிராக மளமளவென ஒன்று கூடிக் கொண்டே இருக்கின்றன பி.ஜே.பி.க்கு எதிரான பிராந்திய கட்சிகள். கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டம், இந்த முயற்சியின் மிகப்பெரிய நிலையை அடைந்தது. இந்த சூழலில் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியின் சிலை திறப்பில் சோனியா, ராகுல் இருவருமே கலந்து கொண்டது ஸ்டாலினை சிலிர்க்க வைத்துவிட்டது. Stalin, Rahul and Naidu alliance

உணர்ச்சிப் பிரவாகத்தின் உச்ச நிலையை அடைந்தவர், ‘ராகுல் காந்தி அவர்களே வருக! நாட்டுக்கு நல்லாட்சி தருக!’ என்று வெளிப்படையாகவே அறிவித்துவிட்டார். காங்கிரஸ் தலைமையிலான, பி.ஜே.பி. எதிர்ப்பு கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக இதன் மூலம் ராகுல் அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டுவிட்டார். இது இந்த கூட்டணி நகர்வின் மிக முக்கிய அங்கமாகவே பார்க்கப்படுகிறது. Stalin, Rahul and Naidu alliance

கடந்த வாரம் டெல்லி போயிருந்த தனக்கு ராகுல் அளித்த பெரும் மரியாதைக்கு, அதைவிட நூறு மடங்கு அதிகமாக பதில் மரியாதையை தந்துவிட்டார் ஸ்டாலின். இப்படி நடக்கும் என்று முன்பே அறிந்து, அதற்கு தோதாகதான் சோனியாவும் ராகுலை உடன் அழைத்து வந்திருந்தார். வந்த இடத்தில் கருணாநிதியின் அரசியல் ஆளுமை மீது ராகுல் காட்டிய ஈடுபாடும், ‘அகம்பாவம் இல்லாத அரசியல் தலைவன் தன்மையை கருணாநிதியிடம் கற்றேன்.’என்று வெளிப்படையாய் பேசியதும், கருணாநிதியின் சிலையை தன் மொபைலில் போட்டோ எடுத்ததும் தி.மு.க.வுடன் அவர் ஏகத்துக்கும் நெருங்குவதை நெத்தியடியாய் நிரூபிக்கின்றன.

சோனியா தனது பேச்சில் கலைஞரை வானுயர புகழ்ந்துவிட்டு, ‘ஜனநாயக நிறுவனங்களையும், இந்தியாவின் கனவையும், அரசியல் சாசன சட்டத்தையும் நாம் இரு கட்சிகளும் உறுதியாக, இணக்கமாக இருந்து பாதுகாத்து போராடுவோம் என்பதுதான் கலைஞரின் காலடியில் நாம் எடுக்கின்றன் உறுதிமொழியாக இருக்க முடியும்.’ என்று சொன்னபோது ஸ்டாலின் நெகிழ்ந்து, கலங்கிவிட்டார். Stalin, Rahul and Naidu alliance

இந்த  ஒன்றிணைவுகளின் சூத்ரதாரியான சந்திரபாபுநாயுடு, “ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணிக்கு  தமிழகம் நூறு சதவீதம் ஆதரவு வாக்களிக்க வேண்டும். நாற்பது தொகுதியிலும் இந்த கூட்டணி வெற்றி பெறும், பெறவேண்டும். தமிழகத்தில் இந்த கூட்டணி பெறும் வெற்றியானது, தேசிய அளவில் பெரும் திருப்பு முனையாக இருக்கும்.” என்று தன் பங்குக்கு உசுப்பினார். அவ்வளவு எளிதில் யாரையும் புகழ்ந்துவிடாத கேரள முதல்வர் பினராயி விஜயனும் கருணாநிதியை புகழ்ந்து கொண்டாடிவிட்டார். இந்திய கம்யூனிஸ்ட் ராஜவும் ‘ராகுலை பிரதமராக்குவோம்!’ என்று முழங்கிவிட்டார். Stalin, Rahul and Naidu alliance

ஆக சிங்கிள் சிங்கம் மோடிக்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளும் அணி திரண்டு வெறியோடு நிற்பது, அதிகாரத்தை கைபற்றும் நோக்கில்தான். ரஜினிகாந்த் சொன்னது போல் ‘பத்து பேர் ஒரு ஆளை எதிர்த்து சண்டை போட வர்றாங்கன்னா, உண்மையில் யார் பலசாலி?’ என்றுதான் யோசிக்க தோன்றுகிறது. அதேவேளையில் ‘ஒரு திருடன் அகப்பட்டால், ஊரே சேர்ந்து அடிக்கும். ஒத்த ஆளு என்பதால் திருடன் யோக்கியவானாகிட முடியுமா?’ என்று இதற்கு லாஜிக்காய் எதிர்கேள்வி கேட்கிறார்கள். யார் பலசாலி, யார் திருடன்? என்பதை தொடர்ந்து கவனிப்போம்...

Follow Us:
Download App:
  • android
  • ios