Asianet News TamilAsianet News Tamil

கடைசியில விஜயகாந்த் படுத்துகிட்டே ஜெயிச்ச கதை ஆகிடுமா!! திருநாவுக்கு அடுத்து சென்ற ஸ்டாலின்!! தேமுதிகவை தூக்க அசைன்மென்டா ?

நேற்றுவரை விஜயகாந்த் பற்றி பேச கூட தயாராக இல்லாத ஸ்டாலின் தீடீர்னு ரஜினிகாந்த், விஜயகாந்த்தை சந்தித்த பிறகு எதற்கு அவசரமாக விஜயகாந்த்தை சந்திக்கணும்? 10 நிமிடத்தில்  ஒட்டுமொத்த தமிழகத்தியும் கேப்டன் கேப்டன்னு  பேச வச்சார் பாரு அதான் எங்க தலைவரு... என கெத்து காட்டுகிறது தேமுதிக. 

Stalin and Rajinikanth meet dmdk leader vijayakanth
Author
Chennai, First Published Feb 22, 2019, 4:03 PM IST

நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு  அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் பிசியாக இருந்து வருகிறது. அதிமுக பிஜேபி கூட்டணியில் பாமகவுக்கு 7+1 தொகுதி ஒதுக்கியுள்ளது. இந்த கூட்டணியில் இடம்பெற இருப்பதாக சொல்லப்பட்ட தேமுதிக ரூட் கிளியர் ஆகாததால் இழுபறி நீடிக்கிறது. வட மாவட்டங்களில் மட்டுமே வாக்கு வங்கி வைத்திருக்கும் பாமகவிற்கே 7+1 ன்னா 40 நாடாளுமன்றத் தொகுதியிலும் வெற்றித் தோல்வியை நிர்ணயிக்கக் கூடிய வாக்கு வங்கியை வைத்திருக்கும் எங்களுக்கு எத்தனை கொடுக்கணும்னு நீங்களே சொல்லுங்க என அதிமுக கூட்டணியில் கேட்டுள்ளது தேமுதிக.

பாமகவை விட ஒரு தொகுதி கூட குறைவாக இருந்தால் அது தமக்கு அவமானமாக நினைக்கிறது தேமுதிக. இந்நிலையில், விஜயகாந்த் அமெரிக்காவிலிருந்து வந்ததிலிருந்து அரசியல் கட்சித் தலைவர்கள் விஜயகாந்தை சந்தித்து வரும் வேலையில் திமுக தலைவர் ஸ்டாலின் விஜயகாந்தின் வீட்டிற்கே சென்று சந்தித்துள்ளார் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Stalin and Rajinikanth meet dmdk leader vijayakanth

கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின்;  தேமுதிகவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை, தேமுதிக வந்தால் உங்களுக்கு முதலில் சொல்லி அனுப்புகிறோம் என காட்டமாக சொன்னார் என்றார்.  இந்நிலையில் நேற்று அவசர அவசரமாக விஜயகாந்தை சந்தித்த தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் விஜயகாந்த்தை சந்தித்தார். இதனைத் தொடர்ந்து ஸ்டாலினும் இன்று விஜயகாந்த்தை சந்தித்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர்; அரசியல் பேசுவதற்காக நான் வரவில்லை என்றும், உடல்நிலை பற்றி தான் விசாரித்தேன், விஜயகாந்த்  விரைவாக உடல்நிலை தேறிவந்து நாட்டுக்கும் மக்களுக்கும் பணியாற்ற வேண்டும், கலைஞர்  மீது அளவுகடந்த பாசம் கொண்டவர் விஜயகாந்த் என்று தெரிவித்தார்.

Stalin and Rajinikanth meet dmdk leader vijayakanth

வட மாவட்டங்களில் தேமுதிக வலுவாக இருக்கும் கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர், சேலம், தர்மபுரி என முக்கிய தொகுதிகளைக் குறிவைத்துள்ளது தேமுதிக. ஆனால், கூட்டணியில் முந்திக்கொண்டு பாமகவும் கேட்டிருக்கிறது. அதேபோல, ’எங்கள் ஓட்டு பொதுவான ஓட்டு. சாதி ஓட்டு கிடையாது. அதனால் முழுக்க முழுக்க அதிமுகவுக்கும் அப்படியே சிதறாம வரும் என்பதால் அரசியல் கட்சிகளும் தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க வீட்டிற்கே சென்று விஜயகாந்த்தை சந்தித்து வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒரு சில தொகுதிகளைத் தவிர தமிழகம் முழுவதும் வெற்றியை தீமானிக்கக் கூடிய சுமார் 1 லட்சத்திற்கு மேல் வாக்குக்கு வங்கிகளை வைத்திருக்கிறது. அதிமுகவோ திமுகவோ கட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பணபலம் + சொந்த செல்வாக்கு + கட்சி ஓட்டு என வரும் தானாக கிடைத்துவிடும் பட்சத்தில் தொகுதிக்கும் 50000 முதல் 80000 வரை வெற்றியை தீர்மானிக்கக் கூடிய அந்த வாக்குகள் அப்படியே தேமுதிகவால் கிடைக்கும், இந்த ப்ளஸை மனதில் வைத்தே ஆட்டம் காட்டுகிறதாம் தேமுதிக.

Stalin and Rajinikanth meet dmdk leader vijayakanth

இதை உணர்ந்த திமுக - காங்கிரஸ் நேற்று திருநாவுக்கரசு, இன்று ஸ்டாலினும் விஜயகாந்த்தை சந்தித்தனர். நேற்றுவரை விஜயகாந்த் பற்றி பேசகூட தயாராக இல்லாத ஸ்டாலின் தீடீர்னு ரஜினிகாந்த் விஜயகாந்த்தை சந்தித்த பிறகு எதற்கு அவசரமாக விஜயகாந்த்தை சந்திக்கணும்? 10 நிமிடத்தில்  ஒட்டுமொத்த தமிழகத்தியும் கேப்டன் கேப்டன்னு  பேச வச்சார் பாரு அதான் எங்க தலைவரு... என கெத்து காட்டுகிறது தேமுதிக. ரஜினி ஸ்டாலினை தொடர்ந்து பல தலைவர்கள் விஜயகாந்த் வீட்டுக்கு படையெடுக்கும் நிலையில் அடுத்து கமலும் வருகிறாராம்!

Follow Us:
Download App:
  • android
  • ios