Asianet News TamilAsianet News Tamil

இந்தியாவிலேயே முதல்முறையாக கால்நடைகளுக்கான பிரத்யேக ஆம்புலன்ஸ் சேவை..! முதல்வர் எடப்பாடி அதிரடி..!


இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் கால்நடைகளுக்காக ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டிருக்கிறது.

separate ambulance service for animals in tamilnadu
Author
Tamil Nadu, First Published Nov 6, 2019, 11:02 AM IST

தமிழகத்தில் இலவச 108 ஆம்புலன்ஸ் சேவை நடைமுறையில் இருக்கிறது. விபத்துகள், உடல்நிலை சரியில்லாதவர்கள், பிரவசவம் போன்ற நிகழ்வுகளின் போது இந்த சேவை மிகுந்த உபயோக கரமானதாக இருந்து வருகிறது. பலரின் உயிர் 108 ஆம்புலன்ஸ் மூலம் காப்பாற்றப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் கால்நடைகளுக்கென தனி ஆம்புலன்ஸ் சேவையை தொடங்க தமிழக கால்நடைத்துறை முடிவு செய்தது.

separate ambulance service for animals in tamilnadu

அதன்படி இந்தியாவில் எந்த மாநிலத்தில் இல்லாத வகையில், முதல் முறையாக தமிழகத்தில் "அம்மா கால்நடை அவசர சிகிச்சை ஊர்தி" தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்ச்சி சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடி அசைத்து கால்நடை ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார். கால்நடைத் துறை சார்பாக ஏற்கனவே நாமக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் இந்த சேவை சோதனைமுறையில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.

separate ambulance service for animals in tamilnadu

இந்த நிலையில் தற்போது 2 கோடியே 40 லட்சம் செலவில் 22 அவரச ஊர்திகள் வாங்கப்பட்டுள்ளன. இவற்றில் கால்நடை மருத்துவர் ஒருவர், அவருக்கு உதவியாளராக ஒருவரும் மற்றும் ஓட்டுநர் ஆகியோர் இருப்பர். 1962 என்கிற எண்ணிற்கு தொடர்பு கொண்டால், இருப்பிடங்களுக்கே தேடி வரும் அவசர ஊர்தியில், கால்நடைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. முற்றிலும் குளிர் சாதனவசதி கொண்ட கால்நடை அவசர ஊர்திகள், சென்னை மாதவரத்தில் இருக்கும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இருக்கும் கட்டுப்பாடு மையத்துடன் தொடர்பில் இருக்கும்.

இதையும் படிங்க: மகளை மடியில் கட்டி கிணற்றில் குதித்து தற்கொலை செய்த இளம்பெண்..! கணவர் இறந்த துக்கத்தில் எடுத்த விரக்தி முடிவு..!

Follow Us:
Download App:
  • android
  • ios