Asianet News TamilAsianet News Tamil

உயிரே போனாலும் அண்ணணை விட்டு போகமாட்டேன்... உருகும் செந்தில் பாலாஜி!

அவதூறு செய்திகளை ஆளும் தரப்பினர் பரப்புகின்றனர் என்று கூறியுள்ளார். கரூர் மாவட்டத்தில் அ.ம.மு.க., நிர்வாகிகள் இடையே, சலசலப்பை ஏற்படுத்த பார்க்கின்றனர். அது ஒருபோதிலும் நிறைவேறாது என்றார். தினகரன் தலைமையில், மக்கள் விரும்பும் ஆட்சி அமையும் எனக்கூறி அந்த சர்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Sentilabalaji information
Author
Tamil Nadu, First Published Dec 10, 2018, 10:41 AM IST

கரூரை சேர்ந்தவர் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜி. டி.டி.வி.தினகரனின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் இவர், அ.ம.மு.க.வின் கரூர் மாவட்ட செயலாளராகவும், மாநில அமைப்பு செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். அதேபோல் அரவக்குறிச்சியில் எப்போது இடைத்தேர்தல் வைத்தாலும் செந்தில் பாலாஜி வெற்றி உறுதி என கூறி வருகின்றனர். Sentilabalaji information

இந்நிலையில் தமிழக அரசியல் வட்டாரத்தில் ஒரு பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது. அந்த செய்தி என்னவென்றால் தினகரனின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் செந்தில்பாலாஜி திமுகவில் இணைப்போவதாக தகவல் வெளியாகின. 

அண்மையில் திருச்சியில் உள்ள நட்சத்திர  ஹோட்டலுக்கு வந்த அன்பில் மகேஷ் அங்கு ரூம் போட்டு தங்கியுள்ளார். அவர் வந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு தினகரன் ஆதரவு எம்எல்ஏவான செந்தில் பாலாஜியும் அதே ஹோட்டலுக்கு வந்திருக்கிறார். ரெஸ்டாரண்டில் உட்கார்ந்து காபி குடித்தவர், யாரிடமோ நீண்ட நேரம் போனிலும் பேசியிருக்கிறார். அதன் பிறகு அன்பில் மகேஷ் தங்கியிருந்த அறைக்குப் போய் மூன்று மணிநேரத்துக்கும் மேலாக இருவரும் பேசியிருக்கிறார்கள். Sentilabalaji information

மேலும் இந்த நிகழ்வுக்குப் பிறகு கரூரில் தினகரன் அணி சார்பாக நடந்த ஜெயலலிதா நினைவு நாள் கூட்டத்தில் செந்தில் பாலாஜி பங்கேற்கவில்லை.  அரவக்குறிச்சியில் நம்ம கட்சி சார்பாகவே அவருதான் நிற்கப் போறாரு'' என கரூர் திமுக வட்டாரம் கொழுத்திப் போட்ட வதந்தி தீயாக பரவின. இந்த செய்தியை அறிந்த அமமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. Sentilabalaji information

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள செந்தில் பாலாஜி, சென்னையில் நடந்த, ஜெயலலிதா நினைவு நாள் ஊர்வலத்தில் நான் பங்கேற்கவில்லை என்பது உண்மைக்கு புரம்பானது. தாம் நிகழ்ச்சி நிறைவு பெறும் வரை அங்குதான் இருந்தேன் என்றார். இதுபோல அவதூறு செய்திகளை ஆளும் தரப்பினர் பரப்புகின்றனர் என்று கூறியுள்ளார். கரூர் மாவட்டத்தில் அ.ம.மு.க., நிர்வாகிகள் இடையே, சலசலப்பை ஏற்படுத்த பார்க்கின்றனர். அது ஒருபோதிலும் நிறைவேறாது என்றார். தினகரன் தலைமையில், மக்கள் விரும்பும் ஆட்சி அமையும் எனக்கூறி அந்த சர்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க. முக்கிய நிர்வாகிகளிடம் கேட்ட போது, இது உறுதிப்படுத்தப்படாத தகவல் என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் கரூர் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios