Asianet News TamilAsianet News Tamil

மக்கள் தரும் பணமே போதும்... உங்கள் பணம் வேண்டாம்! பிரபல கட்சியின் அழைப்பை நிராகரித்த கமல்

Rejecting the invitation of the popular party Kamal Hasan
Rejecting the invitation of the popular party, Kamal Hasan
Author
First Published Jun 20, 2018, 12:37 PM IST


கட்சியை வளர்ப்பதற்கு மக்களிடம் இருந்து வரும் பணம் போதும் என்றும், 100 கோடி ரூபாய் தருவதாக கூறிய கட்சியின் அழைப்பை நிராகரித்ததாக
மக்கள் நீதி மய்யக் கட்சி தலைவர் கமல் ஹாசன் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று கடந்த 20 வருடங்களாக தமிழக மக்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி
தனது அரசியல் பிரவேசம் குறிதது அறிவித்தார்.

இதனிடையே நடிகர் கமல் ஹாசன் அரசியலுக்கு வந்து அதிரடி காட்டினார். மக்கள் நீதி மய்யம் என்னும் கட்சியை துவக்கிய அவர், பல்வேறு ஊர்களுக்கு சென்று பொதுமக்களை சந்தித்து தனது ஆதரவை கோரி வருகிறார்.

ஆளுங்கட்சிக்கு எதிராக தனது விமர்சனங்களை வைப்பதால், ஆளுங்கட்சி அமைச்சர்கள் தொடர்ந்து அவரை சாடி வந்தனர். இந்த நிலையில் தனியார்
தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ், மிகப் பெரிய வெற்றி பெற்றதால், தற்போது அதன் இரண்டாம் பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக பங்கேற்றிருக்கும் கமல் ஹாசன், தற்காலிகமாக அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார்.

மேலும் அந்த நிகச்சியின் மூலம் தமிழக மக்களை சந்தித்து அதனை எனது அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்வேன் என்றும் கமல் கூறியிருந்தார்.

இந்த நிலையில், கமல் ஹாசன் தனியார் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் ஒரு கட்சி எனக்கு 100 கோடி ரூபாய் தருவதாக அழைத்தது என்று பரபரப்பு பேட்டி அளித்திருந்தார். மேலும் பேசிய அவர், தான் அந்த அழைப்பை நிராகரித்து விட்டதாகவும், எனது கட்சியை வளர்ப்பதற்கு மக்களிடம் இருந்து வரும் பணம் போதும் என்றும் பேட்டியில் கமல் கூறியிருந்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios