Asianet News TamilAsianet News Tamil

எஸ்.சி/ எஸ்.டி விடுதியில் முரசொலி... அனாதை இல்லத்தில் அண்ணா அறிவாலயம்... திமுகவை திணறடிக்கும் ராமதாஸ்..!

நிலம் அபகரிப்பு திமுகவினருக்கு முழு நேரத் தொழில் தானே?  என பாமக நிறுவனர் ராமதாஸ் , திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

Ramadoss replies to mk stalin on panchami land issue
Author
Tamil Nadu, First Published Oct 19, 2019, 2:30 PM IST

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் இல்லை என்பதை நிரூபிக்க 1985-ஆம் ஆண்டு வாங்கப்பட்ட பட்டாவை ஆதாரமாகக் காட்டியிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.  இதற்கு காட்ட வேண்டிய ஆதாரம் நிலப் பதிவு ஆவணமும், மூல ஆவணங்களும். அவை எங்கே? நில உரிமையாளரிடமே ஆவணங்கள் இல்லையா?Ramadoss replies to mk stalin on panchami land issue

முரசொலி அலுவலகம் கட்டப்பட்டது எப்போது? அதற்கான இடம் வாங்கப்பட்டது எப்போது?  அவற்றை விடுத்து 1985-ஆம் ஆண்டின் பட்டாவை ஸ்டாலின் காட்டுகிறார் என்றால்,  இடையில் உள்ள சுமார் 20 ஆண்டுகள் மறைக்கப்படுவது ஏன்? அதன் மர்மம் என்ன?

Ramadoss replies to mk stalin on panchami land issue

முரசொலி அலுவலகம் உள்ள இடத்தில் அதற்கு முன் அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி இருந்தது உண்மை விளம்பி ஸ்டாலினுக்கு தெரியுமா? முரசொலி இடம் வழிவழியாக தனியாருக்கு சொந்தமான மனை என்கிறார் ஸ்டாலின். அப்படியானால் அங்கு அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி எப்படி வந்தது?Ramadoss replies to mk stalin on panchami land issue

நிலம் அபகரிப்பு திமுகவினருக்கு முழு நேரத் தொழில் தானே? அனாதை இல்லம் என்ற பெயரில் அண்ணா அறிவாலயம் கட்டுவதில் நடந்த மோசடிகள் தொடர்பாக 2004-ல் அதிமுக ஆட்சியில் அனுப்பப்பட்ட அறிவிக்கையை 2007-ல் திமுக ஆட்சியில் தங்களுக்குத் தாங்களே ரத்து செய்து கொண்ட  நியாயவான்கள் தானே திமுக தலைமை’’ என அவர் தெரிவித்துள்ளார். 

 


 

Follow Us:
Download App:
  • android
  • ios