Asianet News TamilAsianet News Tamil

நீங்க முதல்வராகலாம்... நாங்க அரசியலுக்கே தகுதியில்லையா? ரஜினியை கிழித்து தொங்கவிடும் ரசிகர்கள்?

டிசம்பர் மாதத்தின்போது எப்படியும் கட்சியின் பெயரையும், கொடியையும் நடிகர் ரஜினி காந்த் அறிவித்து விடுவார் என்ற எதிர்பார்ப்பு 
ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Rajinikanth home protest fans
Author
Chennai Central, First Published Oct 26, 2018, 12:36 PM IST

டிசம்பர் மாதத்தின்போது எப்படியும் கட்சியின் பெயரையும், கொடியையும் நடிகர் ரஜினி காந்த் அறிவித்து விடுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ரசிகர் மன்றத்தின் மீதும், அதன் செயல்பாடுகள் மீதும் அவ்வப்போது கவனம் செலுத்தி வருகிறார். சுமார் 40 வருடங்களாக ரஜினி மன்றத்தின் நிர்வாகிகளாக இருப்போர், நடவடிக்கை என்ற பெயரில் ரஜினி மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டனர். இது குறித்து அவர்கள் நியாயம் கேட்டு ரஜினி வீட்டு முன்பு போராடியதும் உண்டு. உயிர், உடைமைகளை அடமானம் வைத்து, காலம் காலமாக ரஜினி ரசிகராக இருந்த பலருக்கு பொறுப்பு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தீவிரமாக எழுந்துள்ளது. இந்த நிலையில், திமுகவின் முரசொலி நாளிதழில் ரஜினியிடம் தங்கள் மனக்குமுறலைக் கொட்டுவது போன்று கட்டுரை வெளியானது. Rajinikanth home protest fans

நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் ரசிகர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கியிருந்தார். அவர் வெளியிட்ட அறிக்கையின்படியே முரசொலியில் "ஹூ ஈஸ் தி பிளாக் ஷீப் மே... மே... மே..." கேள்வி பதில் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

ரசிகர் மன்றத்தை மட்டும் வைத்துக் கொண்டு அரசியலில் நாம் நினைத்ததைச் சாதிக்க முடியும் என்று யாராவது நினைத்தால், அவரது புத்தி பேதலித்துள்ளது என்றுதான் அர்த்தம் என்றதற்கு, அப்பாவி ரசிகன் என்ற பெயரில், என்ன தலைவா... கடைசியில் இப்படி காலை வாரி விடுகிறாய். உனக்கு கொடி பிடித்து கோஷம் போட்டு அப்பா - அம்மா பெயரைக்கூட எடுத்துவிட்டு, உன் பெயரை எங்கள் பெயர் முன் இணைத்து, ஊர் ஊராக, தெருத்தெருவாக உனக்கு மன்றம் அமைத்து, உன் படம் ரிலீசாகும் நாளே எங்களுக்கு திருநாள் என்று வாணவேடிக்கை எல்லாம் நடத்திக் கொண்டாடிய எங்களை இப்படி கேவலப்படுத்துவது நியாயமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். Rajinikanth home protest fans

குடும்பத்தைப் பராமரிக்காமல் மன்ற பணிகளுக்கு வர வேண்டாம்... செலவு செய்ய வேண்டாம் என்று ரஜினி கூறியதற்கு, காலைத்தான் வாரி விட்டாய் என்று நினைத்தேன். இப்போது குழியும் பறிக்கிறாயே தலைவா! செலவு செய் என நீ சொன்னது கிடையாது. ஆனால் இத்தனை ஆண்டுகாலமாக நாங்கள் செலவு செய்து உன் புகழ்பாடி போஸ்டர் அடித்து ஒட்டியதை எல்லாம் பார்த்து ரசித்துக் கொண்டு தானே இருந்தாய் தலைவா. உன் ஆனந்தமே எங்களின் ஆனந்தம் என்று எங்கள் வயிற்றைக் கட்டி வாயைக்கட்டி உனக்காக செலவு செய்தோம் என்பதை நீ அறிய மாட்டிடாயா? அப்போது வாய் மூடிக் கொண்டிருந்துவிட்டு, இப்போது புத்திமதியா? இதுதான் உனது நேர்மையா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். Rajinikanth home protest fans

30, 40 வருடங்களாக ரசிகர் மன்றத்தில் இருந்ததனால், மன்றத்தில் பதவி பெறவோ, அரசியலில் ஈடுபடுவதற்கோ முழு தகுதி ஆகிவிட முடியாது என்று கூறுகிறாய். ஐயா, நீ திரையில் தோன்றும்போது, கற்பூரம் காட்டி, ஆரத்தி எடுத்து விசிலடித்து, வாழ்க கோஷம் போட்ட எங்களைத் தகுதியற்ற கூட்டமாக்கி விட்டாயே. அப்படி என்றால் 30, 40 வருடங்களாக திரையில் நடித்தது மட்டும் முதலமைச்சர் ஆவதற்கு தகுதி என நீ கருதும்போது, இத்தனை ஆண்டு காலம் உன்னை உயர்த்தி பிடித்த உங்களுக்கு அரசியலில் ஈடுபட தகுதி இல்லையா? இது எத்தகைய நியாயம் தலைவா? உங்கள் தாய் தந்தை மற்றும் குடும்பத்தை பார்த்துக் கொள்ளுங்கள்... மற்றவை எல்லாம் அதன்பிறகுதான் என்கிறீர். ஊருக்குத்தான் உபதேசம்... உனக்கில்லையா? என்று கூறும் நீங்கள், உங்கள் மனைவி, மக்களைப் பார்த்துக் கொண்டு நீங்கள் இருக்க வேண்டியதுதானே? பின் ஏன் அரசியலுக்கு வர வேண்டும்? வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்னு சொல்லி வர்றதுக்கு முன்னே எங்களுக்கு ஆப்பு வெச்சிட்டியே தலைவா.. இது சரிதானா?

 Rajinikanth home protest fans

மன்றத்தின் கொள்கைகளுக்கு முரணாக செயல்பட்டவர்களைத்தான் நீக்கி இருக்கிறோம் என்ற நீங்கள் குழம்பி போயிருக்கியா தலைவா. 
சிஸ்டம் சரியில்லை... சிஸ்டத்தை மாற்றப்போவதாக சொல்லிவிட்டு இப்போது இஷ்டத்துக்கு செயல்படுகிறாயே இதுதான் நேர்மையான 
அரசியலா? சொல் தலைவா? நாங்கள் அரசியலுக்கு வருவது பதவி வாங்க அல்ல. வரும் சட்டசபை தேர்தலில் எல்லா இடங்களிலும் 
போட்டியிடுவோம் என அறிவித்தது ஏன் தலைவா? பதவிக்காக அரசியல் இல்லை என்றால், பெரியாரைப்போல கட்சி ஆரம்பித்து கொள்கையிலே உறுதியாக நின்று போராட வேண்டியதுதானே. உங்களுக்கு மட்டும் முதலமைச்சர் பதவி... நாங்கள் நாயாய் பேயாய் உழைக்க வேண்டுமா? பதவி ஆசைப்படக் கூடாதா? இது எந்த ஊர் நியாயம் தலைவா?

நீ இன்று எழும்பி நிற்க அடித்தளமான எங்களை உடைத்தெறிந்து விட்டு, கார்ப்பரேட்டுக்ளின் துணையோடு கட்சி ஆரம்பிக்க நினைக்கிறாய். நீ கூறும் பஞ்சி வசனங்களை நம்பி, நாங்கள் ஏமாந்தோம். எல்லாமே பொய்... எல்லாமே வேஷம்... எல்லாமே நாடகம் என நீ பேசும் வசனத்துக்கு நீயே இன்று கருப்பொருளாகி விட்டாயே. நீ போறப்பாதை சிங்கப்பாதை என்று வசனம் பேசினாய், ஆனால் நீ அசிங்கப்பாதையில் போகத் தொடங்கிட்டே. நீ படத்தில் பேசிய, சும்மா அதிருதில்ல என்ற வசனம் உண்மைதான் தலைவா... உன் அறிக்கையைப் பார்த்து நாங்களெல்லாம் அதிர்ந்துதான் போனோம் தலைவா?

  Rajinikanth home protest fans

தமிழகத்தில் திராவிட இயக்கத்துக்கு எதிராக செயல்படும் எவரும் தலை தூக்க முடியாது. உன் புகழை வைத்து, உன்னை அழிக்க நினைக்கிறது ஒரு கூட்டம். அந்த கூட்டம் சொல்லும்படி நீ ஆடுகிறாய். நீ அல்ல வேறு யார் நினைத்தாலும் அது அவர்களது புகழின் அழிவுக்கு வழி வகுக்கும் என்பதை உணர்ந்திடு தலைவா. உன்னை நம்பி நாங்கள் ஆடிக் கொண்டிருந்தோம்... ஆனால் நீயோ யாருடைய கயிற்று அசைவினால் ஆடும் பொம்மை ஆகிவிட்டாயே தலைவா? என்று நொந்துபோன ரஜினி ரசிகர்களின் குரலாகவே அது அமைந்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios