Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் வெற்றிடம் எங்கே இருக்கு..? திமுக, அதிமுக பதிலடிக்கு பதில் சொல்வதை தவிர்த்த ரஜினி!

நடிகர் ரஜினி 2021 தேர்தலுக்கு முன்பாக கட்சித் தொடங்கி அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளார். கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாகவும் ரஜினி பேசிவருகிறார். 

Rajini don't want to say anything for dmk and admk relpies
Author
Chennai, First Published Nov 10, 2019, 10:01 PM IST

தமிழகத்தில் வெற்றிடம் இல்லை என திமுக, அதிமுக கூறிய கருத்துகளுக்கு பதில் அளிக்காமல் தவிர்த்துவிட்டார் நடிகர் ரஜினிகாந்த்.Rajini don't want to say anything for dmk and admk relpies
 நடிகர் ரஜினி 2021 தேர்தலுக்கு முன்பாக கட்சித் தொடங்கி அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளார். கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாகவும் ரஜினி பேசிவருகிறார். சில தினங்களுக்கு முன்புகூட செய்தியாளர்களிடம் பேசும்போதும், தமிழகத்தில் இன்னும் சரியான, ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது என ரஜினி தெரிவித்தார். Rajini don't want to say anything for dmk and admk relpies
ரஜினியின் கருத்துக்கு உடனடியாக கருத்து தெரிவித்த திமுக பொருளாளர் துரைமுருகன்,  “வெற்றிடத்தை மு.க. ஸ்டாலின் நிரப்பி ரொம்ப நாளாகிவிட்டது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு ரஜினி அதை உணர்ந்துகொள்வார்” எனத் தெரிவித்திருந்தார். இதேபோல விக்கிரவாண்டியின் நடைபெற்ற வாக்காளர்களுக்கு நன்றி அறிவிக்கும் பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ரஜினிக்கு பதில் அளிக்கும் விதமாக அதிமுகவில் வெற்றிடம் ஏதும் இல்லை. யார் கட்சித் தொடங்கினாலும் 2021-லும் அதிமுகவே ஆட்சி அமைக்கும்” என்று தெரிவித்தார்.

 Rajini don't want to say anything for dmk and admk relpies
ரஜினி தெரிவித்த கருத்துக்கு திமுக, அதிமுகவிடமிருந்து உடனடியாக பதிலடி கிடைத்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் ரஜினியிடம் இக்கட்சிகளின் கருத்து பற்றி கேட்கப்பட்டது. இதற்கு பதில் ஏதும் தெரிவிக்காத ரஜினி, கருத்து கூற விரும்பவில்லை என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

Follow Us:
Download App:
  • android
  • ios