Asianet News TamilAsianet News Tamil

உயிர் நண்பருக்கு அஞ்சலி !! மறைந்த அமைச்சர் அனந்தகுமார் உடலுக்கு கண்ணீர் மல்க மரியாதை செய்த பாஜக எம்.பி.ராஜீவ் சந்திரசேகர் !!

புற்று நோயால் பாதிக்கப்பட்டு பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய அமைச்சர் அன்நதகுமார் திடீரென மரணமடைந்தார். அவரது உடலுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜ தலைவர்களும், எதிர்கட்சித் தலைவர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். அனந்தகுமாரின் உடலுக்கு அவரது நெருங்கிய நண்பரும், பாஜக எம்.பி.யுமான ராஜீவ் சந்திரசேகர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

rajeev chandrasekar paid homage to anadakumar
Author
Bangalore, First Published Nov 13, 2018, 11:56 AM IST

மறைந்த அமைச்சர்  அனந்தகுமார் மாணவ பருவத்தில் ஏ.பி.வி.பி. அமைப்பில் சேர்ந்தார். தனது பள்ளி கல்வியை உப்பள்ளியில் முடித்தார். பின்னர் சட்டப்படிப்பு பயின்றார். அதன் பிறகு பெங்களூருவில் வந்து குடியேறி, தீவிர அரசியலில் ஈடுபட்டார்.

இவர் தனது கல்லூரி பருவத்தில் பாஜகவின்  அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் உறுப்பினராக பணியாற்றி பல்வேறு பொறுப்புகளை வகித்தார். நாட்டில் அமல் படுத்தப்பட்ட நெருக்கடி நிலையை எதிர்த்து போராடினார். இதற்காக அவர் சுமார் 30 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
rajeev chandrasekar paid homage to anadakumar
1987-ம் ஆண்டு அவர் பாஜகவில்  சேர்ந்தார். கட்சியில் அவர் மாநில செயலாளர், இளைஞர் அணி தலைவர், மாநில பொதுச் செயலாளர், தேசிய பொதுச் செயலாளராக பணியாற்றினார். கர்நாடகத்தில் பாஜகவின்  வளர்ச்சியில் எடியூரப்பாவுக்கு அடுத்தபடியாக அனந்தகுமார் முக்கிய பங்கு வகித்தார்.
rajeev chandrasekar paid homage to anadakumar
1996-ம் ஆண்டு பெங்களூரு தெற்கு நாடாளுமன்ற தொகுதியில் அனந்தகுமார் முதல் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த தொகுதியில் அவர் தொடர்ச்சியாக 6 முறை போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வாகியுள்ளார். 1998-ம் ஆண்டு வாஜ்பாய்  அமைச்சரவையில் , அமைச்சராக இடம் பெற்றார். அவர் மிக இளம் வயது அமைச்சர்  என்ற பெயரை பெற்றார்.
rajeev chandrasekar paid homage to anadakumar
தற்போது விமானம், சுற்றுலா, விளையாட்டு, நகர வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்புத்துறை அமைச்சராக  பணியாற்றினார்.  இதேபோல் நாடாளுமன்ற நிலைக்குழுக்களிலும் பதவி வகித்தார். இந்நிலையில்தான் அனந்தகுமார் புற்று நோயால்  பாதிக்கப்பட்டார். அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட இடங்களில் இதற்காக சிகிச்சை பெற்று வந் இவர் சில நாட்களுக்கு முன்பு பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

rajeev chandrasekar paid homage to anadakumar

இந்நிலையில் தான் நேற்று அதிகாலை அனந்தகுமார் மரணமடைந்தார். அவரது உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

இதனிடையே பாஜக மாநிலங்களவை உறுப்பினரும், அமைச்சர் அனந்த குமாரின் நெருங்கிய  நண்பருமான ராஜீவ் சந்திரசேகர் அவரின் உடலுக்கு மாலை அணிவித்து கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார்.

ராஜீவ் சந்திரசேகர் எம்.பி.யைப் பொறுத்தவரை மறைந்த அமைச்சர் அனந்தகுமார் கடந்த 24 ஆண்டுகளாக நெருங்கிப் பழகியவர். ராஜீவை அரசிலுக்கு கொண்டு வந்தவரே அனந்தகுமார்தான் என கூறப்படுகிறது. அரசியலில் தனக்கு வழிகாட்டியாகவும், குருவாகவும் அவரை மதித்து நடந்து வந்தவர் ராஜீவ் சந்திர சேகர்.

rajeev chandrasekar paid homage to anadakumar

அவரது மறைவுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்திருந்த ராஜீவ் சந்திரசேகர் ,இன்று எனக்கு ஒரு சோகமான நாள்…எனது நண்பர், எனது சகோதரர், எனது வழிகாட்டி அனந்தகுமார் மறைந்துவிட்டார் என குறிப்பிட்டிருந்தார், மேலும் அனந்தகுமார் எனது குடும்பத்தில் ஒருவர்..எனது அரசியல் நண்பர்களிலேயே உண்மையானவர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மனதாபிமானம் மிக்க மனிதர் என்றும்… இவ்வளவு விரைவில் நீ மறைந்து போவாய் என்று நான் நினைக்கவில்லை என்றும், போய் வா என் நண்பனே  என ராஜீவ் சந்திரசேகர் உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.

rajeev chandrasekar paid homage to anadakumar

இந்நிலையில் இன்று மறைந்த அமைச்சர் அனந்தகுமாரின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. அவர்து உடல் வீட்டிலிருந்து பெங்களூருவில் உள்ள பாஜக அலுவலகத்தில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அப்போது ராஜீவ் சந்திரசேகர் எம்.பி. அவரது உடலுக்கு கண்ணீர் மல்க மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதைத் தொடந்து மறைந்த அமைச்சரின் உடலுக்கு இறுதிக் சடங்குகள் நடைபெற்றன.

Follow Us:
Download App:
  • android
  • ios