Asianet News TamilAsianet News Tamil

புயல் நிவாரணத்துக்கு மோடி அரசு இது வரை ஒரு ரூபாகூட கொடுக்கலங்க !! கொந்தளித்த அமைச்சர் !!

கஜா புயல் நிவாரணத்துக்காக மத்திய அரசு இரு வரை ஒரு ரூபாய் கூட தரவில்லை என தமிழக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் காட்டமாக தெரிவித்துள்ளார்.

 

r.b.udayakumar  talk about jaha cyclon
Author
Tamil Nadu, First Published Dec 8, 2018, 10:35 AM IST

கடந்த மாதம் 15 ஆம் தேதி நள்ளிரவு வேதாரண்யம் அருகே கரையைக் கடந்த கஜா புயலால் நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. 15ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு உடனடியாக நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார்.

r.b.udayakumar  talk about jaha cyclon

இதையடுத்து மத்திய அரசு 353 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தவாதாக அறிவித்தது. ஆனால் மத்திய அரசு இது வரை கஜா புயல் நிவாரண நிதிக்காக ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை என அமைச்சர் ஆர்.பி.உயகுமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் , தமிழக அரசு ‘கஜா’ புயல் பாதித்த டெல்டா மாவட்ட மக்களுக்கு ரூ.1,400 கோடி வழங்கி உள்ளது. அத்துடன் 29 பொருட்கள் அடங்கிய பெட்டகமும் வழங்கியது. ஆனால் தற்போது வரை புயல் பாதிப்புக்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கூட நிதி வழங்கவில்லை. தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையைத்தான் வழங்கி உள்ளது என தெரிவித்தார். 

r.b.udayakumar  talk about jaha cyclon

முதலமைச்சர் , அமைச்சர்கள் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று மக்களுக்கு ஆறுதல் கூறினர். ஆனால் ஸ்டாலின் ஒருநாள் சென்று பார்வையிட்டு புயல் நிவாரண பணிகள் குறித்து விமர்சனம் செய்கிறார் என குற்றம்சாட்டினார்.

.மேகதாது உள்பட காவிரி படுகையில் கர்நாடக அரசு  எந்த அணையும் கட்ட முடியாது. என அமைச்சர் உதயகுமார் திட்டவட்டமாக தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios